Sunday, February 25, 2024

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கு கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்

 

Kanmalai Christian Church

Word of God : Pas. Micheal

Date : 25.02.2024

உபாகமம் 10:8
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

I இராஜாக்கள் 8:4
பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள்.

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தர் லேவியின் 
கோத்திரத்தை தெரிந்து கொண்டார். நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் லேவியின் கோத்திரத்தைப் போல இருக்கிறோம். நாம் ஆசீர்வதிக்கவே கட்டளை பெற்று இருக்கிறோம். இன்றைக்கு உடன்படிக்கை பெட்டி என்று சொன்னால் அது இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமாக இருக்கிறது. கர்த்தருடைய உடன்படிக்கையை நாம் சுமப்போம் என்று சொன்னால் நாம் ஆசீர்வாதமாக இருப்போம். இன்றைக்கும் கூட கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சுமப்பதினால் ஏற்படும் நன்மைகளை குறித்து நாம் இங்கே தியானிப்போம். 

1. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பொழுது - தடைகள் விலகும் 

யோசுவா 3:10
பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:

யோசுவா 3:11
இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.

யோசுவா 3:12
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.

யோசுவா 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

யோசுவா 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்.

இயேசு கிறிஸ்துவை நீ சுமப்பாய் என்று சொன்னால் உங்களுக்கு முன்பதாக இருக்கிறதான எல்லா தடைகளும் விலகும். நம் எல்லோரையும் தேவன் பிரித்தெடுத்து இருக்கிறார். இயேசு கிறிஸ்துவை சுமக்கிறவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்று சொன்னால் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக உங்களை பயன்படுத்துவார். அநேகரின் தடைகள் நீங்கள் கால் வைக்கும் பொழுது அது விலகும் படியாய் கர்த்தர் உங்களை பயன்படுத்துவார். அதற்கு நாம் உடன்படிக்கை பெட்டியாய் மாற வேண்டும். நீங்கள் போகிற இடமெல்லாம் நன்மை உண்டாகும். நீங்கள் போகிற இடமெல்லாம் ஆசீர்வாதம் ஆக்கப்படும். 

2. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பொழுது - அடைக்கப்பட்ட வாசல்கள் திறக்கும்

யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

யோசுவா 6:4
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

யோசுவா 6:4
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.

யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

யோசுவா 6:6
அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

யோசுவா 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு போக முடியாத படி, நாம் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியாத படி ஒரு நிலையில் நாம் இன்றைக்கு இருக்கலாம். அடைக்கப்பட்ட வாசல்கள் எல்லாம் நமக்கு திறக்கப்பட வேண்டும் என்று சொன்னால் நாம் உடன் படிக்கை பெட்டியை சுமக்க வேண்டும், எக்காளம் ஆக நாம் தொனிக்க வேண்டும். அந்தி, சந்தி, மதிய வேளைகளில் நாம் துதித்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் மேன்மையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று சொன்னால் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்க வேண்டும். 

3. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பொழுது - விக்கிரக வல்லமைகள் உடைக்கப்படும் 

I சாமுவேல் 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

I சாமுவேல் 5:2
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.

I சாமுவேல் 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

I சாமுவேல் 5:4
அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.

பெலிஸ்தர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து கொண்டு அஸ்தோத்திற்குக் கொண்டு போய் தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியாய் இருப்பீர்கள் என்று சொன்னால் பிசாசுகள் உங்களை கண்டு ஓடும்படியாக கர்த்தர் செய்வார்.  தேவனுடைய வல்லமை உங்களில் வெளிப்படும்படியாக கர்த்தர் செய்வார். உன்னை கட்டி வைத்திருக்கிறதான எல்லா விதமான பிசாசின் கட்டுகளை இந்த உடன்படிக்கை பெட்டியாகிய இயேசு உங்களுக்குள் இருப்பார் என்று சொன்னால் அவை எல்லாவற்றையும் உடைத்துப்போட வல்லவராய் இருக்கிறார். 

4. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பொழுது - நேர்வழியில் வழிநடத்தும் 

I சாமுவேல் 6:7
இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,

I சாமுவேல் 6:8
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.

I சாமுவேல் 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

I சாமுவேல் 6:12
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

கர்த்தருடைய பெட்டியை நாம் சுமப்போம் என்று சொன்னால் செவ்வையாய் போகச்செய்வார். வலது புறமும், இடது புறமும் வழி விலகாதபடி நேர்வழியாய் நம்மை வழிநடத்துவார். 

5. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பொழுது - ஆசீர்வதிப்பார் 

II சாமுவேல் 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

II சாமுவேல் 6:9
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

II சாமுவேல் 6:10
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

II சாமுவேல் 6:11
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

II சாமுவேல் 6:12
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை நீங்கள் சுமப்பீர்கள் என்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் தேவன் ஆசீர்வதிப்பார். நீங்கள் உடன்படிக்கை பெட்டியாய் மாறுவீர்கள் என்று சொன்னால் கர்த்தர் உங்கள் நிமித்தமாக உங்கள் குடும்பத்தை, வீட்டை, கையின் பிரயாசத்தை, குடும்பத்தாரை கர்த்தர் அசீர்வதிப்பார். 








Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment