Friday, March 1, 2024

நான் அவர்களுக்கு இரங்கினேன்

 

கன்மலை கிறிஸ்துவ சபை மார்ச் மாத வாக்குத்தத்தம் 

Word of God : Pas. Micheal

Date: 01.03.2024

சகரியா 10:6
நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.

இந்த மார்ச் மாதம் கர்த்தர் உங்களை திரும்பவும் நிலைக்கப் பண்ணும்படியாக உங்களுக்கு இரங்குவார். இந்த மாதம் முழுவதும் அவரது இரக்கத்தை, பெரிதான அன்பை பார்க்கும்படி தேவன் எழுந்தருளப்போகிறார். நீங்கள் கிரகிக்க முடியாத காரியங்களை உங்கள் வாழ்க்கையில் இந்த மாதம் தேவன் செய்யப்போகிறார். 

1. நித்திய கிருபையுடன் இரங்குவார் 

நிலைபெயராத சமாதானத்தை தருவார்

ஏசாயா 54:8
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

ஏசாயா 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

ஏசாயா 54:10
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் இமைப்பொழுது அவர் முகத்தை நமக்கு மறைத்து இருந்தாலும் இந்த மாதம் தேவன் உங்களுக்கு நித்திய கிருபையுடன் இரங்குவார். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் அவர் கிருபை நம்மை விட்டு விலகாது இருக்கும். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்து போய் கொண்டு இருந்தாலும் அவர் உங்கள் மீது நித்திய கிருபையுடன் இரங்கி, உங்களை மீது நிலை பொறாத சமாதானத்தை அளித்து உங்களை வழிநடத்துவார். 

2. தயை செய்யும்படி இரங்குவார்- விருத்தியடையப்பண்ணுவார்

உபாகமம் 13:18
கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

சங்கீதம் 102:13
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு திரும்பி, நமக்கு தயை செய்து இந்த மாதம் இரங்குவார். நம்மை விருத்தியடையும்படி செய்வார். எந்த காரியத்தில் நீங்கள் விருத்தி இல்லாமல் இருக்கிறீர்களோ அந்த காரியத்தில் தேவன் ஒரு பெருக்கத்தை கட்டளையிடப்போகிறார். கர்த்தர் உங்களுக்கு தயை செய்யும் காலம் வந்துவிட்டது. அவர் உங்களுக்கு இரங்கி விருத்தியடைய செய்வார். 

3. தகப்பனைப் போல இரங்குவார் - சுமந்து வழிநடத்துவார்

சங்கீதம் 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

சங்கீதம் 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

எண்ணாகமம் 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

எண்ணாகமம் 11:12
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?

எண்ணாகமம் 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.

ஒரு தகப்பனைபோல தேவன் இந்த மாதம் நமக்கு இரங்குவார். ஒரு தகப்பன் எப்படியெல்லாம் நம்மை ஆற்றி, தேற்றி, சுமந்து அரவனைப்பாரோ அதுபோல தேவன் நமக்கு இரங்குவார். கர்த்தருடைய கிருபை அவர்களுக்கு பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவருடைய பிள்ளைகள் மேலும் என்றென்றைக்கும் உள்ளது. ஒரு தகப்பன் சுமந்து கொண்டு போவது போல இந்த மாதம் நம்மை வழிநடத்தப்போகிறார். 

4. உருக்கமாய் இரங்குவார் - அவரிடத்தில் சேர்த்துக்கொள்வார்

எரேமியா 31:20
எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

ரோமர் 9:15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

கர்த்தருடைய பார்வையில் நீங்கள் அருமையான பிள்ளைகள், அவருக்கு பிரியமான பிள்ளைகள் அவர் நம்மை நினைத்து கொண்டே இருக்கிறார். ஆகையால் இந்த மாதம் தேவன் நமக்கு உருக்கமாய் இரங்குவார். உங்கள் குடும்பத்துக்கு அவர் உருக்கமாய் இருப்பார். நம் சந்ததிக்கு அவர் உருக்கமாய் இருப்பார். உங்கள் பிள்ளைகளுக்கு உருக்கமாய் இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமான இரக்கங்களால் நம்மை அவரிடத்தில் சேர்த்துக்கொள்வார். 

5. உபத்திரவம் நீங்க இரங்குவார் - விசாலத்தில் வைப்பார் 

அப்போஸ்தலர் 7:34
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

யாத்திராகமம் 3:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

யாத்திராகமம் 3:7
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

யாத்திராகமம் 3:8
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

சங்கீதம் 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.

இத்தனை நாம் பட்ட உபத்திரவத்தை தேவன் பார்த்து இருக்கிறார், நம் பெருமூச்சை கேட்டு இருக்கிறார் இந்த உபத்திரவங்களில் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த மாதம் தேவன் நமக்கு இரங்குவார். அவர் நமக்கு இந்த மாதம் ஆதரவாய் இருந்து விசாலமான இடத்திலே வைப்பார். 






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment