Sunday, November 1, 2020

கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்

 

கன்மலை கிறிஸ்துவ சபை நவம்பர் 2020 வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 1.11.2020


கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்


சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

இந்த மாதம் கர்த்தர் உங்களை கன்மலையின் தேனினாலே நிரப்புவார். நீங்கள் ஒரு குறைவையும் காணமாட்டீர்கள். 

1. சிங்கத்தின் உடலுக்குள்ளே இருந்த தேன்

 இதுவரை காணாத ஆசீர்வாதத்தை கொடுக்கும் 

நியாயாதிபதிகள் 14:5
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

நியாயாதிபதிகள் 14:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

நியாயாதிபதிகள் 14:7
அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.

நியாயாதிபதிகள் 14:8
சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

நியாயாதிபதிகள் 14:9
அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

சிம்சோனுக்கு எதிராக வந்த அந்த பால சிங்கத்தை சிம்சோன் கர்த்தருடைய ஆவி தன் மேல் பலமாய் இறங்கினதால் அதை ஒரு ஆட்டுக்குட்டியை கிழித்து போடுகிறது போல போட்டான். பின்னர் சிம்சோன் திரும்பி வருகிற வழியில் தான் கொன்ற அந்த சிங்கத்தை பார்க்க வழி விலகி போனான். அப்பொழுது அந்த சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீ கூட்டமும், தேனும் இருந்ததும் அதை சிம்சோன் வழியெல்லாம் சாப்பிட்டு கொண்டு நடந்து வந்தான் அது மட்டும் அல்லாமல் தன் தாய், தகப்பன் இடத்தில் வந்து அவர்களுக்கும் கொடுத்தான் அவர்களும் சாப்பிட்டார்கள். 

இந்த மாதம் உங்களுக்கு எதிராக எப்படிப்பட்ட கெர்ச்சிக்கிற சிங்கங்கள் எழும்பினாலும் ஆவியானவர் உங்கள் மேல் இறங்கும் பொழுது அதை நீங்கள் ஆட்டுக்குட்டியை கிழித்து போடுகிறது போல போடுவீர்கள்.  உங்களின் ஆசீர்வாதங்களை பிடிங்கி வைத்து இருந்து பட்சிக்கிற சிங்கத்தின் உடலில் இருந்த தேனாகிய ஆசீர்வாதத்தை இந்த மாதம் நீங்கள் புசிப்பீர்கள் அதுமட்டும் அல்லாமல் அதை நீங்கள் மற்றவர்களுக்கும் கொடுக்கும் படியாய் தேவனாகிய கர்த்தர் இந்த மாதம் உங்களை கரத்தை ஆசீர்வதிப்பார். 

2. ருசியுள்ள தேன் - ஆகாரத்தை கொடுக்கும் 

யாத்திராகமம் 16:29
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.

யாத்திராகமம் 16:30
அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

யாத்திராகமம் 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

இந்த மாதம் உங்களுக்கு வானத்திலிருந்து ஒரு ருசியுள்ள தேனை வருஷிக்க செய்வார். உங்களுக்கு இந்த மாதம் தேவையான ஆகாரத்தை தந்து உங்களை போஷித்து மிகவும் திருப்தியாய் நடத்தும்.   

3. காட்டின் தேன் - தீர்வை கொடுக்கும் 

I சாமுவேல் 14:24
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

I சாமுவேல் 14:25
தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.

I சாமுவேல் 14:26
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.

I சாமுவேல் 14:27
யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

I சாமுவேல் 14:28
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.

I சாமுவேல் 14:29
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

I சாமுவேல் 14:30
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

சவுல் ராஜா சத்துருக்களை நான் பழி  வாங்க வேண்டும் சாயங்காலம் மாட்டும் பொறுக்காமல் எவன் ஒருவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று ஒரு கட்டளை பிறப்பித்து இருந்தார். இஸ்ரவேலர் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள். அங்கே தேன்கூடு ஒன்று கட்டி இருந்தது ஜனங்கள் காட்டிலே வந்த பொழுது தேன் ஒழுகி கொண்டு இருந்தது. ஆனாலும் ஒருவரும் அதை தொடவில்லை. ஆனால் யோனத்தான் தன் ஜனங்களுக்கு சொன்னதை கேள்விப்படவில்லை எனவே அவர் தன் கையில் இருந்த கோலை நீட்டி அதன் நுனியால் அந்த தேன்கூட்டை குத்தி அதை வாயில் போட்டு கொண்டார் அப்பொழுது அவர் கண்கள் தெளிந்தது. அப்பொழுது ஜனங்களில் ஒருவன் உங்கள் தகப்பன் யாரும் புசிக்க கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார் இதனால் நாங்கள் விடாய்த்து இருக்கிறோம் என்றான்.  யோனத்தான் உடனே என் தகப்பன் ஜனங்களை கலக்கப்படுத்தினார். இந்த தேனை நான் புசித்ததால் என் கண்கள் தெளிந்தது பாருங்கள் என்றார். நீங்கள் உண்டு இருந்தால் பெலிஸ்தரின் சங்காரம் அதிகமாய் இருக்குமே என்றார். 

யோனத்தான் விடாய்த்து இருந்த ஜனங்களுக்கு ஒரு தீர்வை சொன்னது போல கர்த்தர் இந்த மாதம் உங்கள் மனக்கண்களை திறந்து உங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை தருவார். 



FOR CONTACT

Brother Micheal

Kanmalai Christian Church

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment