Monday, February 19, 2024

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்

 

Kanmalai Christian Church

Word of God : Pas. Johnson Israel 

Date : 19.02.2024

சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்

அவர் சொன்னால் ஆகும் அவர் கட்டளையிட்டால் நிற்கும் அவர் நல்ல கட்டளைகளை நாம் இன்றைக்கு தியானிக்க போகிறோம். 

நீதிமொழிகள் 6:23
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.

அவர் கட்டளையே நமக்கு விளக்கு போதகத்தை கற்றுக்கொடுக்க ஆவியானவர் நம்மோடு இருக்கிறார். அவர் நம்மை சிட்சித்து அவருடைய வழியிலே நம்மை சரியாய் நடத்துவார். வேதம் நமக்குள்ளே இருந்தால் நாம் பிரகாசிக்கிறவர்களாக இருப்போம், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம், அநேகருக்கு ஆறுதலாய் இருப்போம், நன்மை செய்கிறவர்களாய் இருப்போம், வேதத்தின் வெளிச்சத்திலே நாம் காணப்படவேண்டும். 

ஆசீர்வதிக்க கட்டளையிடுகிறார் 

எண்ணாகமம் 24:12
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,

எண்ணாகமம் 23:21
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

எண்ணாகமம் 23:22
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

இங்கே நாம் பார்க்கிறறோம் வெள்ளியும், பொன்னும் கொடுத்தாலும் கர்த்தருடைய கட்டளையை நான் மீற மாட்டேன் என்று பிலேயாம் சொல்லுகிறார். நம்மையும் தேவன் சபிக்க அல்ல ஆசீர்வதிக்கவே அழைத்து இருக்கிறார். ஆசீர்வதிக்கவே நாம் கட்டளையை பெற்று இருக்கிறோம். 

சமாதானத்தின் உடன்படிக்கையை கட்டளையிடுகிறார் 

எண்ணாகமம் 25:12
ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

நல்ல கட்டளையிடுகிறார் 

நெகேமியா 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

நெகேமியா 9:14
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

அப்போஸ்தலர் 10:33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

கர்த்தர் இந்த வருடத்திலே உங்களுக்கு நல்ல காரியங்களை செய்யப்போகிறார். நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருங்கள். அவர் சொன்னால் ஆகும் அவர் கட்டளையிட்டால் நிற்கும். 

ஆதியாகமம் 2:17
ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

I பேதுரு 2:13
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.

நன்மை, தீமை அறிய தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாமுக்கு கட்டளையிட்டார். ஆனால் ஆதாமோ அந்த கட்டளையை மீறி விட்டார். எனவே சாத்தான் அவனை வஞ்சித்து விட்டான். பிசாசிற்கு தேவனுடைய இரகசியம் எப்பொழுதும் தெரியாது. அதுபோல இன்றைக்கு நாம் பாவத்திற்கு இடம் கொடுக்கும் பொழுது பிசாசானவன் தேவன் நம்மை குறித்து வைத்துள்ள திட்டங்களை அறிந்து கொள்கிறான். இதானல் நாம் அநேக ஆசீர்வாதங்களை இழந்து போய் விடுகிறோம். இன்றைக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களை சரியாய் பெற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறோம். 

புலம்பல் 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.

எரேமியா 10:5
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எல்லா சக்திகளையும் தேவன் நமக்கு தான் கொடுத்து இருக்கிறார், நம்மை தான் பராக்கிரம சாலியாய் வைத்து இருக்கிறார். ஆனால் நாமோ அவற்றை இழந்து போகிறோம். தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார், நன்மையினால் திருப்தியாக்க ஆண்டவர் விரும்புகிறார் ஆனால் நாம் பாவம் செய்யும் பொழுது உங்களுக்குள் இருக்கும் இரகசியத்தை பிசாசு அறிகிறான். எனவே தேவன் நமக்கு இட்ட கட்டளைகளை மீறக்கூடாது 

எண்ணாகமம் 24:5
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

நம்மை தேவன் அழகாய் வைத்து இருக்கிறார். தேவன் நம்மை அவர் வார்த்தையினால், அவர் ஆசீவாதத்தினால் அழகுப் படுத்தி இருக்கிறார். நாம் பாவம் செய்யும் பொழுது பரிசுத்த அழகை இழந்து போகிறோம், ஆவிக்குரிய அழகை இழந்து போகிறோம். எனவே பாவத்தை எதிர்த்து நின்று தேவன் நமக்கு அளித்த கட்டளைகளில் உறுதியாய் நிற்க வேண்டும். அவ்வாறு நாம் நடப்போம் என்று சொன்னால் தேவன் நம்மை நிச்சயமாய் உயர்த்துவார். 

நித்திய ஜீவனை கட்டளையிடுகிறார் 

யோவான் 12:49
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

யோவான் 12:50
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

புதிதான கட்டளையிடுகிறார் 

யோவான் 13:34
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

தேவன் நமக்கு நித்திய ஜீவனை கட்டளையாக கொடுத்து இருக்கிறார். ஒருவரில் ஒருவர் அன்பாய் இருப்போம். பாவத்தை குறித்து எச்சரிக்கையாய் இருப்போம். தேவனுடைய கட்டளைகளில் நிலைத்து நிற்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார் ஆமென். 
 




Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment