Monday, February 12, 2024

பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க நாடுங்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Sister Lydiya

Date : 11.02.2024

எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே

தேவனோடு கூட பழகுகிற ஐக்கியத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலாவது நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதலாவது தேவனையும் அவருடைய இராஜ்ஜியத்தையும் தேடுங்கள் பிறகு இவை யாவும் கூட கொடுக்கப்படும் என்று நாம் வாசிக்கிறோமே. கூடுமான வரை யாவரோடும் கூட சமாதானமாய் இருக்க நாட வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவர் எனவே நமக்குள் இருக்கும் கோபம், எரிச்சல், வைராக்கியம் இவை எல்லாம் தவிர்த்து யாவரோடும் சமாதானமாய் இருக்க நாம் நாடும் பொழுது தேவன் நம்மில் பிரியப்படுவார். நம்முடைய சத்துருக்களுக்காக ஜெபம் பண்ண வேண்டும். 

யாத்திராகமம் 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

வெளி 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

வெளி 15:3
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

பரிசுத்தமாய் இருக்கவும் நாடுங்கள். நம் தேவன் பரிசுத்தர், நான் பரிசுத்தராய் இருக்கிறது போல நீங்களும் எல்லாவற்றிலும் பரிசுத்தராய் இருங்கள் இருங்கள் என்று தேவன் சொல்லுகிறார். நம்முடைய நடை, உடை, பேச்சு, பார்வை, சிந்தனை, கிரியை, நம் ஐம்புலன்களிலும் ஆண்டவர் விரும்புகிற பரிசுத்தம் காணப்பட நாம் வாஞ்சிக்க வேண்டும். ஆண்டவர் சிநேகிக்கிற பரிசுத்தம் நம்முடைய வாழ்க்கையில் காணப்பட வேண்டும். உலகத்தில் உள்ளவர்களை போல் அல்லாமல் பரிசுத்த ஜீவியத்திற்காகவே தேவன் அழைத்து இருக்கிறார். நம் தேவன் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், அவருக்கு ஒப்பானவர் யாரும் இல்லை, அவர் பரிசுத்தத்தில் மகத்துவம் உள்ளவராய் இருக்கிறார்.பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் தேவனை தரிசிக்க இயலாது. எனவே பரிசுத்தமாய் வாழ வாஞ்சிப்போம். 











Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment