Sunday, March 19, 2023

பிதாவே, இவர்களுக்கு மன்னியும்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Johnson Israel

Date:19.03.2023

லூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

நம் தேவன் எவ்வளவு பெரிய மன்னிப்பை நமக்கு அருளி இருக்கிறார். நம் பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் எல்லாவற்றையும் அவர் மன்னித்து நம்மை அவர் அண்டையிலே சேர்த்துக்கொள்கிறார். அவர் நம்மை மன்னித்து ஆசீர்வதித்து, வழி நடத்தி, இன்றைக்கு சபைக்குள்ளே நம்மை நிறுத்தி இருக்கிறார். இந்த மன்னிப்பின் ஆசீர்வாதத்தை பெற்றவர்களாய் நாம் ஜீவித்து கொண்டு இருக்கிறோம். 

லூக்கா 7:47
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

லூக்கா 7:48
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

லூக்கா 7:49
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

லூக்கா 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

இன்றைக்கும் இயேசு நம் பாவங்களை எல்லாம் மன்னிக்கும் பொழுது நமக்கு சமாதானம் உண்டாகிறது. நம் நமக்கு சமாதானத்தை கொடுக்கிற தேவனாய் இருக்கிறார். உலகம் கொடுக்கிற பிரகாரம் அல்ல என்னுடைய சமாதானத்தையே வைத்து அவர் நமக்காக வைத்து இருக்கிறார். 

லூக்கா 15:25
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;

லூக்கா 15:27
அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.

லூக்கா 15:29
அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

லூக்கா 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

மத்தேயு 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்

மத்தேயு 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

கெட்ட குமாரன் மனம் திரும்பி வந்த பொழுது தந்தை அவனை மன்னித்து அன்பாய் சேர்த்துக்கொள்கிறார். அவனுக்காக கொழுத்த கன்றை அடிப்பிக்கிறார். ஆனால் அவன் சகோதரனுக்கோ கெட்ட குமாரனை மன்னிக்க மனம் வரவில்லை. தந்தையிடம் சென்று என்ன என்று முறையிடுகிறார் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம். நாம் அப்படி இருக்க கூடாது இன்றைக்கும் நாம் அநேகரை மன்னிக்காமல் இருக்கலாம். நாம் மன்னித்து ஒப்புரவு ஆகி ஆயத்தமாய் இருக்க வேண்டும். 

மத்தேயு 18:21
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

மத்தேயு 18:22
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 

தவறுகள் வருவது இயல்பு தான் ஆனால் நாம் இயேசுவை போல பிறரை மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒரு தரம் மாத்திரம் அல்ல இங்கே சொல்லப்பட்டது போல ஏழெழுபதுதரமட்டும் இருந்தாலும் நாம் மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். தேவனிடத்தில் உங்களை போல மன்னிக்கிற இருதயத்தை தாரும் என்று வேண்டி பெற்றுக்கொள்ள வேண்டும். 

யோவான் 20:21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

யோவான் 20:22
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

யோவான் 20:23
எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். 

ஒருவர் நமக்கு செய்கிற காரியங்களை குறித்து அவ்வளவு எளிதாக நம்மால் மன்னிக்க முடியவில்லை, எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் இங்கே நாம் பார்க்கிறோம். நாம் பிறரை மன்னிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார்.  

லூக்கா 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

லூக்கா 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

லூக்கா 23:41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,

லூக்கா 23:42
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இயேசுவுடனே கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் நீர் கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்து கொள்ளும் என்று அவரை இகழ்ந்தான். ஆனால் மற்றொரு கள்ளனோ அவனை நோக்கி நாம் செய்த தவறுக்கு பலனை அடைகிறோம் அனால் இவரோ தகாதது ஒன்றும் நடப்பிக்கவில்லையே என்று அவனை கடிந்து கொண்டான். மேலும் இயேசுவை நோக்கி உம்முடைய ராஜ்ஜியத்தில் என்னை நினைத்தருளும் என்று வேண்டுகிறான். இயேசு அந்த கள்ளருக்கு மன்னிப்பை அருளுகிறார். இன்றைக்கு நீ என்னுடனே கூட  பரதீசிலிருப்பாய் என்று வாக்கு அளிக்கிறார். நாமும் பிறரை மன்னித்து அவருடைய இருதயத்திற்கு ஏற்ற பிள்ளைகளாக நாம் மாற வேண்டும். 

கொலோசெயர் 3:13
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.





Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment