Kanmalai Christian Church
Word of God: Pastor Jachin Selvaraj
Apostolic Christian Assembly, Pursawalkam
Date: 13.12.2020
ஆதியாகமம் 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை கர்த்தருக்கு பலி செலுத்துவதற்காக போகிறதான காரியத்தை இங்கே பார்க்கிறோம். இதிலே கீழ்ப்படிதல் என்பதுதான் மிக மிக முக்கியம். ஆபிரகாம் சர்வ சிரிஷ்டிகரான கர்த்தருக்கு கீழ்ப்படிந்தார். தேவ பயத்தோடு ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னுடைய மகனான ஈசாக்கை பலி செலுத்துவதற்காக கொண்டு போய்விட்டார். இந்த சூழ்நிலையில் தான் கர்த்தருடைய தூதனானவரிடம் இருந்து இந்த வார்த்தை வருகிறது.
கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் பாக்கியவான் என்று நாம் வேதத்திலே வாசிக்கிறோம். அப்படி ஒரு கீழ்ப்படிகிற ஒரு தகப்பனாக ஆபிரகாம் இருந்து இருக்கிறதை நாம் இங்கே பார்க்கிறோம்.
ஆதியாகமம் 22:3
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
ஆதியாகமம் 22:2
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆபிரகாம் மறுமொழி கூறாமல் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். அவருடைய வாழ்க்கையை பார்த்து நாம் கற்றுக்கொள்ளுகிற விதமாக தேவன் நமக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக ஆபிரகாமை வைத்து இருக்கிறார்.
ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
நாம் ஆண்டவருக்கு முன்பாக எப்படியெல்லாம் உண்மையும், உத்தமும்மாய் இருக்கிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய இருதயம் ஆண்டவருக்கு மட்டும் தான் தெரியும்.
தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்
உபாகமம் 5:29
அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
ஆண்டவர் இங்கே சொல்லுகிறதான விஷயம் நாம் எல்லாரும் எந்நாளும் அவருக்கு பயந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய கற்பனைகளை எல்லாம் கைக்கொண்டு வந்தால் போதும், இவ்வாறு ஆண்டவர் நம்மிடையே எதிர்பார்க்கிற காரியங்களை நாம் கைக்கொண்டு நடக்கும் பொழுது நாமும் நம் சந்ததியும் என்றென்றைக்கு நன்றாய் இருக்கும் என்று தேவன் கூறுகிறார்.
பாவத்தை வெறுக்க வேண்டும்
நீதிமொழிகள் 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
ஆதியாகமம் 39:8
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
ஆதியாகமம் 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
இங்கே தேவ பயம் யோசேப்புக்கு இருந்ததால் தான் இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தும் பாவம் தன்னை அருகில் நெருங்கியும் அவர் அதற்க்கு உடன்படவில்லை தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி என்று கேட்டார். நாமும் அதுபோல நம் வாழ்க்கையிலே எந்த சூழ்நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்ய உடன்படக்கூடாது. யோசேப்பைபோல நாமும் பாவத்தை வெறுத்து வாழ வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது.
நெகேமியா 5:9
பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
நெகேமியா 5:15
எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
லேவியராகமம் 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
லேவியராகமம் 19:14
செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
நம் ஆண்டவர் விரும்புகிற காரியம் என்ன என்றால் நாம் பிறரை ஒடுக்காமல் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்.
யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
அப்போஸ்தலர் 10:22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்
பொருத்தனையை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும்
பிரசங்கி 5:4
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.
பிரசங்கி 5:5
நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
பிரசங்கி 5:6
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
பிரசங்கி 5:7
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
நாம் ஒரு பொருத்தனை செய்வேன் என்று தீர்மானித்து இருக்கும் பொழுது அதை நாம் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அதனை நாம் தாமதிக்காமல் செய்ய வேண்டும்.
பரிசுத்தத்தை நாடுபவர்களாக இருக்க வேண்டும்
சங்கீதம் 19:9
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
வசனம் சொல்லுகிறது கர்த்தருக்கு பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; ஏனென்றால் நம்முடைய ஆண்டவர் பரிசுத்தத்தை விரும்புகிறவர், அவரே பரிசுத்தமானவர். தேவனுக்கு நாம் பயப்பட பயப்பட பரிசுத்தத்தை காத்துக்கொள்ள அவர் நிச்சயமாகவே நமக்கு கிருபையை கொடுப்பார். எந்த நேரத்திலும் கர்த்தருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
கர்த்தருக்கு பயப்படுதல் - பொக்கிஷம்
ஏசாயா 33:6
பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.
கர்த்தருக்குப் பயப்படுதல் - தேவனுக்கு உகந்த வாசனை
ஏசாயா 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
ஏசாயா 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
கர்த்தருக்கு நாம் பயந்து வாழும் பொழுது அவர் நம்மை பொக்கிஷத்தினால் நிரப்புகிறார். கர்த்தருக்கு பயந்து வாழ்வது தேவனுக்கு உகந்த வாசனையாய் இருக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் பிரயாசப்பட வேண்டும்.
ஒருவருக்கொருவர் தேவபக்தியோடே கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்
எபேசியர் 5:21
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்ட வாரத்தை தான் இது. தேவபக்தியோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். நிச்சயமாகவே நாம் குடும்பமாக தேவபக்தியோடே கீழ்ப்படிந்து வாழும் பொழுது நம்முடைய வீடு ஒரு சிறிய பரலோகம் போல காட்சியளிக்கும். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வீடாக இருக்கும். பொல்லாத சத்துருக்கள் உள்ளே வர முடியாது. வீட்டுக்குள்ளே சண்டை, சச்சரவுகள் வர முடியாது.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment