Sunday, March 26, 2023

உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன்

 

Kanmalai Christian Church

Word of God : Pastor Micheal

Date: 26.03.2023

ஆகாய் 2:23
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

நம் எல்லோரையும் கர்த்தர் முத்திரை மோதிரமாக தெரிந்து கொண்டு இருக்கிறார். மனுஷருடைய பார்வைக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தேவனோ விலையேறப்பெற்ற முத்திரை மோதிரமாய் அவர் உங்களை பார்க்கிறார். 

1. தனித்து விடப்பட்டவர்களை முத்திரை மோதிரமாக வைப்பார் 

ஆதியாகமம் 41:37
இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.

ஆதியாகமம் 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

ஆதியாகமம் 41:39
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.

ஆதியாகமம் 41:40
நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

ஆதியாகமம் 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,

ஆதியாகமம் 41:42
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

ஆதியாகமம் 41:43
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

யோசேப்பை போல பலவிதமான போராட்டத்தின் பாதையில் போகிற உங்களை பார்வோனின் கையில் இருக்கிற முத்திரை மோதிரத்தையே கொடுக்கத்தக்கதாய் கர்த்தர் உங்களை உயர்த்துவார். 

2. பாவத்திலிருந்து மனம் திரும்பும் பொழுது முத்திரை மோதிரமாய் வைப்பார் 

லூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

லூக்கா 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

லூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

லூக்கா 15:18
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

லூக்கா 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

லூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

லூக்கா 15:21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

லூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

இளைய மகன் தன் பங்கை தந்தையிடம் இருந்து பெற்று கொண்டு தூர தேசத்திற்கு சென்று துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி தன் ஆஸ்தியை எல்லாம் அழித்து போட்டான். அவன் புத்தி தெளிந்த பிறகு என் தந்தை வீட்டில் வேலைக்காரர்களுக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. இனி குமாரன் என்று சொல்ல நான் பாத்திரன் அல்ல என்ன கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்து கொள்ளும் என்று சொல்லுவேன் என்று புறப்பட்டான். அவன் தாழ்த்தி தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் என்று அறிக்கையிட்டான். தந்தை அவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை தரிப்பித்து, மோதிரத்தையும், பாதரட்சையும் கொடுங்கள் என்று தன் ஊழியக்காரருக்கு கட்டளையிட்டார்.  தேவன் நிமிடத்தில் எதிர்ப்பார்ப்பது ஒன்று தான் நாம் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அதை விட்டு விடும் பொழுது கர்த்தர் நமக்கு இரக்கம் செய்து முத்திரை மோதிரத்தை நமக்கு தருகிறார். 

3. ஜெபிக்கிறவர்களை முத்திரை மோதிரமாக வைப்பார் 

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

தானியேல் 6:11
அப்பொழுது அ ந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள்.

தானியேல் 6:12
பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள்; அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்.

தானியேல் 6:16
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.

தானியேல் 6:17
ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.

தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தானியேல் 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

தானியேல் 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

ராஜாவின் முத்திரையையும், பிரபுக்களின் முத்திரையையும்  போட்ட பொழுதும் அதை தாண்டி உங்களை முத்திரை மோதிரமாய் மாற்றுவதற்கு நாம் ஆராதிக்கிற தேவன் சிங்கங்களின் வாய்க்கு நம்மை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். எப்படிப்பட்ட தடைகள் வந்தால் தானியேலை போல நாம் ஜெபித்து, ஆராதித்து வருவோம் என்று சொன்னால் கர்த்தர் நம்மை முத்திரை மோதிரமாய் வைப்பார். 

4. திறப்பிலே நிற்கிறவர்களை முத்திரை மோதிரமாக வைப்பார் 

எஸ்தர் 8:8
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

எஸ்தர் 8:2
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

எஸ்தர் 6:6
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,

எஸ்தர் 6:7
ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

எஸ்தர் 6:8
ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

எஸ்தர் 6:9
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

யார் இந்த மொர்தெகாய் அவர் ஒரு யூதர், கர்த்தரை துதிக்கிறவர், தன் உடலை ஒடுக்கி உபவாசிக்கிறவர், தன் ஜனத்திற்காக திறப்பிலே நின்று மன்றாடுகிறவர். மொர்தெகாய் கர்த்தருடைய பார்வைக்கு விலையேற பெற்றவராக திகழ்ந்தார். ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தார். அது போல துதிக்கின்ற நம்மையும் ஏற்ற காலத்தில் கர்த்தர் உயர்த்துவார். பிசாசானவன் தந்திரமாய் உங்களுக்கு வர வேண்டியதை தடுத்து வைத்து இருந்தாலும் நாளானது வரும் பொழுது அவை உங்கள் கைக்கு வரும்படியாக கர்த்தர் செய்வார்.  இங்கே மொர்தெகாய்க்கு செய்தது போல நமக்கும் முத்திரை மோதிரத்தை அளித்து உயர்த்தி வைப்பார். 

5. இப்பூமிக்குரிய உன்னை விசித்திரமான முத்திரை மோதிரமாய் வைப்பார் 

எசேக்கியேல் 28:12
மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 28:14
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

நாம் எல்லோரும் விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம். ஞானத்தினால் நிறைந்தவர்கள், பூரண அழகுள்ளவர்கள். தேவனுடைய தோட்டமாகிய ஏதெனில் இருந்தவர்கள் மேலும் ஒன்பது விதமான  இரத்தினங்களும் பொன்னும் நம்மை மூடிக்கொண்டிருக்கிறது. நாம் சிருஷ்டிக்கப்பட்ட நாளில் மேளவாத்தியங்களும், நாகசுரங்களும் ஆயத்தப்பட்டிருந்தது. கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டதின் நோக்கம் விசித்திரமான முத்திரை மோதிரமாக மாற்றுவதற்காகத்தான். 




Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment