Monday, March 13, 2023

உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Jachin Selvaraj

Date:12.03.2023

ஆகாய் 1:4
இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

ஆகாய் 1:5
இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

ஆகாய் 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

ஆகாய் 1:7
உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்

எரேமியா 12:12
கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

எரேமியா 12:13
கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.

லேவியராகமம் 26:15
என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

லேவியராகமம் 26:16
நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

உபாகமம் 28:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

உபாகமம் 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.


நாம் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்து கொண்டு இருக்கிறோம். என்ன காரியம் நமக்குள்ளாக குறைவுபடுகிறது. நம் வாழ்க்கையிலே விதைத்திருக்கிற விதைகள், ஆணடவரோடு நாம் செய்த உண்டபடிக்கையில் நிலைத்திராதபடி, நாம் முன்னேறி செல்லாதபடி பிசாசானவன் தடை செய்வான். ஆண்டவருக்கு பிரியம் இல்லாத காரியங்களில் நம்மை திருப்ப கொள்ளைக்காரன் வருவான். வேண்டாத வழிகளுக்கு நம் வாழ்க்கையை கொடுத்துவிட்டோம் என்று சொன்னால் நமக்கு சமாதானம் இருக்காது. இதனால் தான் நாம் விதைக்கிற பிரயாசங்கள் நம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. நம்முடைய வழிகள் தேவனுக்கு பிரியமானதாக இருக்கிறதா என்பதை நம்மை நாமே இன்றைக்கு சிந்தித்து பாப்போம். 

2. புசித்தும் திருப்தியாகவில்லை குடித்தும் பரிபூரணமடையவில்லை

ஓசியா 4:10
அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள்.

ஓசியா 4:11
வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.

ஓசியா 4:12
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.

பிரசங்கி 1:8
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.

நாம் புசித்து நம்மால் திருப்தியாக முடியவில்லை. எதோ நம்மிடத்தில் குறைவுபட்டு இருக்கிறது அவை என்ன வென்று நிதானித்து, நம் வழிகளை சிந்தித்து பார்த்து அவற்றை சரிசெய்து கர்த்தரிடத்தில் நம்மை நாம் ஒப்பு கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலே திருப்தி வர வேண்டும். நம்முடைய வழிகளை வசனத்தை வைத்து காத்து கொள்ள வேண்டும். வேண்டாத வழியில் நாம் சிக்கிக்கொள்ளாத படி ஆண்டவரிடத்தில் நாம் கிருபையை பெற்றுக்கொள்ள வேண்டும். 

3. வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை

ஆதியாகமம் 37:31
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,

ஆதியாகமம் 37:32
பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

நாம் உடுத்துகிற வஸ்திரம் தேவனுக்கு பிரியமானதாக இருக்கிறதா என்பதை நம்மை நாமே ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். மற்றவர்களை இடறல் அடைய செய்யாத படிக்கு இருக்க வேண்டும். 

4. சம்பாதிக்கிற கூலி பொத்தலான போட்டது போல இருக்கிறது 

ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

ஏசாயா 59:3
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

II நாளாகமம் 7:14
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

II நாளாகமம் 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

நம் கையிலே வருகிற வருமானம் பொத்தல் பையிலே போட்டது போல இருக்கிறது. நம் கைகளிலே வருமானம் நிலையாக நிற்பது இல்லை. இது எதனால் என்று நம்மை நாமே சிந்திக்க வேண்டும். நம்முடைய அக்கிரமங்களே தேவனுக்கும் நமக்கும் முன்பதாக பிரிவை உண்டாக்குகிறது. நம் பாவங்கள் தேவன் நமக்கு செவிகொடாதபடிக்கு அவர் முகத்தை நமக்கு மறைக்கிறது. என்ன குறை நமக்கு இருக்கிறது என்று நாம் நிதானித்து பார்க்க வேண்டும். நம்மை நாம் ஆண்டவருக்கு முன்பதாக தாழ்த்தி நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு விலகி அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம் என்று சொன்னால் கர்த்தர் நம் பாவங்களை மன்னித்து நம்மை ஆசீர்வதிப்பார். 






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment