Sunday, March 5, 2023

நான் கர்த்தர், நான் மாறாதவர்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Micheal

Date: 5.03.2023

மல்கியா 3:6
நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

1. மாறாத ஆசாரியர் - நம்மை நித்தியத்தில் சேர்ப்பார் 

எபிரெயர் 7:20
அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.

எபிரெயர் 7:24
இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

எபிரெயர் 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

எபிரெயர் 6:20
நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

யோவான் 14:2
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற மாறிப்போகாத ஆசாரியராய் இருக்கிறார் 

அவர் தம் மூலமாய் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும் படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடு இருக்கிறார். நம்ம இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்.

அவர் நமக்காக நம்மை பரலோகத்தில் சேர்க்கும்படியாக நித்திய பிரதான ஆசாரியராய் திரைக்குள் பிரவேசித்து இருக்கிறார். 

2. மாறாத அழைப்பு - குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் நம்மை ஆக்குவார் 

ரோமர் 11:29
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 

ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

ரோமர் 8:30
எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

தம் கிருபை வரங்களை வைத்து தான் கர்த்தர் நம்மை அழைக்கிறார் அந்த அழைப்பு மாறாதது 

மாறாத அழைப்பை நமக்கு அவர் வைத்ததின் நோக்கம் என்னவென்றால் தம்முடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு எதுவாக அமையும். 

தேவன் தாம் அழைத்தவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்

தேவன் அழைத்தவர்களை  நீதிமான்களாக்கி மகிமைப்படுத்தி இருக்கிறார். 

 3. மாறாத பிரமாணம் - அவர் நாமத்தை துதிக்க வைப்பார் 

சங்கீதம் 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

சங்கீதம் 148:13
அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.

வெளி 14:1
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

வெளி 14:3
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

கர்த்தர் துதிப்பதே நமக்கு கொடுக்கப்பட்ட மாறாத பிரமாணமாய் இருக்கிறது. 

சுவாசமுள்ள யாவையும் கர்த்தரை துதிப்பதற்கே படைக்கப்பட்டு இருக்கிறது 

அவர் நாமம் மாத்திரமே உயர்ந்தது அது எல்லா நாமத்திற்கும் மேலான நாமம், அவருடைய மகிமை பூமிக்கும், வானத்திற்கும் மேலானது. அவர் நம்மை தமக்கென்று ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் துதியை பாட மாத்திரமே நம்மை அழைத்து இருக்கிறார் 

4. மனம் மாறாதவர் - அவரிடத்தில் நாம் திரும்பும் பொழுது அவர் நம்மை நினைத்தருளுவார் 

I சாமுவேல் 15:22
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

I சாமுவேல் 15:23
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

I சாமுவேல் 15:24
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

I சாமுவேல் 15:25
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.

I சாமுவேல் 15:26
சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

I சாமுவேல் 15:27
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.

I சாமுவேல் 15:28
அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.

I சாமுவேல் 15:29
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.

II இராஜாக்கள20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

II இராஜாக்கள20:2
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

II இராஜாக்கள20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

II இராஜாக்கள20:4
ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

II இராஜாக்கள20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

கர்த்தருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிபவர்களாக இருக்க வேண்டும் 

பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதலும், அவர் வார்த்தைக்கு செவிகொடுப்பதும் உத்தமம் 

கர்த்தர் தம் சொன்னதற்கு மனஸ்தாப படுகிறவர் அல்ல அவர் மனம் மாற மனுபுத்திரன் அல்ல ஆனாலும் நம் கண்ணீரின் ஜெபம் தேவனிடத்தில் இருந்து இரக்கத்தை பெற்று கொடுக்கும். 

நம் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி, கர்த்தருடைய கரத்தில் வீழ்வோம் என்று சொன்னால் கர்த்தர் நம் விண்ணப்பத்தை கேட்டு நம்மை நம்மை நினைத்தருளுவார். 





Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment