Sunday, September 4, 2022

தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date: 04.09.2022

மத்தேயு 25:6
நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

மத்தேயு 25:7
அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

பரலோகராஜ்யமானது தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாய் இருக்கிறது. பத்து கன்னிகைகளில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களுமாய், ஐந்து பேர் புத்தி இல்லாதவர்களுமாயும் இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை கொண்டு போனார்கள் ஆனால் எண்ணெய் கொண்டுபோக வில்லை. புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் தீவட்டிகளோடு கூட பாத்திரத்தில் எண்ணெய்யை கூட கொண்டு போனார்கள். மணவாளன் வருகிறதற்கு தாமதித்த பொழுது அவர்கள் நித்திரை பண்ணி தூங்கி விட்டார்கள். நடுராத்திரியிலே இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டு புறப்படுங்கள் என்று சத்தம் தொனித்த பொழுது கன்னிகள் எல்லோரும் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாத கன்னிகைகள் புத்தியுள்ள கன்னிகைகளை நோக்கி நீங்கள் வைத்து இருக்கிற எண்ணெய்யில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். அதற்கு புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள், அவ்வாறு அவர்கள் வாங்க சென்ற பொழுது மணவாளன் வந்துவிட்டார். ஆயத்ததோடு இருந்த புத்தியுள்ள கன்னிகைகள் மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவு அடைக்கப்பட்டது என்று நாம் வேதத்திலே வாசிக்கிறோம்.  

ஆம் பிரியமானவர்களே இனி காலம் செல்லாது, பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது நாம் தீவட்டிகளை எடுத்து கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போகிற புத்தியுள்ள கன்னிகைகளை போல நாம் எப்பொழுதும் ஆயத்ததோடு இருக்க வேண்டும். தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். தேவன் நமக்கு தேவன் கொடுத்த தாலந்துகளை வெறுமனே பயந்து புதைத்து வைத்து விடாமல் அவர் நமக்கு கொடுத்த பலமும் அன்பும், தெளிந்த புத்தியின் ஆவியினால் தேவ ராஜ்யத்திற்கு என்று நாம்  அதை பயன்படுத்த வேண்டும். எஜமான் வரும் பொழுது அவர் கொடுத்ததோடு வேறே தாலந்துகளையும் சம்பாதித்து கொடுக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். ஆம் அன்பானவர்களே மலை மேல் இருக்கிற பட்டிணம் மறைந்து இருக்கலாகாது நீங்கள் தேவனுக்கு எழும்பி ஜொலிக்கிறவர்களாக எப்பொழுதும் உங்கள் அக்கினி அணைந்து போக விடமால் உங்கள் அபிஷேக எண்ணெய்யினால் அனல் மூட்டி கொண்டே நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவுக்காக எப்பொழுதும் ஆயத்ததோடு இருக்க வேண்டும். இன்றைக்கும் கூட தேவன் நமக்காக ஆயத்தப்படுகிற ஒரு மூன்று விதமான காரியங்களை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே தியானிக்கலாம். 

1. உனக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணுவார் 

சங்கீதம் 132:17
அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.

சங்கீதம் 132:18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

சங்கீதம் 18:27
தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

சங்கீதம் 18:28
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை யாராலும் அணைக்கமுடியாது சதா காலமும் எரிந்து கொண்டே இருக்கும். வசனம் சொல்லுகிறது அபிஷேகம் உன் மேல் இருக்கும் என்று சொன்னால் உன்னுடைய விளக்கை ஒருவராலும் அணைக்கவே முடியாது. உன் சத்துருக்களுக்கு வெக்கத்தை உடுத்துவார், ஆனால் உங்களுக்கோ உங்கள் கிரீடத்தின் மேல் பூக்கள் பூக்க செய்வார். உனக்காக கர்த்தர் விளக்கை ஏற்றுகிறவராக இருக்கிறார். நீங்கள் அணைந்து போகிற சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் சோர்ந்து போக வேண்டாம் உங்கள் விளக்கை கர்த்தர் ஏற்றுவார். நீங்கள் இருளிலே உட்கார்ந்தாலும் கர்த்தர் உங்களுக்கு வெளிச்சமாய் இருப்பார்.  

2. உனக்காக வழியை ஆயத்தம்பண்ணுவார் 

மல்கியா 3:1
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்புகிறார். அவன் உங்களுக்காக வழியை ஆயத்தம் பண்ணுவார். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் உடன்படிக்கையின் தூதருமானவர் தம்முடைய ஆலயத்திற்கு விரைந்து வருவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  மணவாளன் வரும் நாளை சகிப்பவன் யார் ? அவருடைய நாளில் நிலை நிற்பவன் யார் ? நாம் இங்கே வாசிக்கிறோமே கர்த்தருடைய நாளிலே நிலைநிற்க பரிசுத்த மணவாட்டியால் முடியும் நம்மை அங்கே கொண்டு போய் சேர்ப்பதற்காக தேவன் உங்களுக்காக ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி வழியை ஆயத்தம்பண்ணச்செய்வார்.  அந்த குறுகலான பரலோக பாதையில் நாம் போகும் படியாக கர்த்தர் தூதனை அனுப்பி வழியை ஆயத்தம்பண்ணுவார். 

3. உனக்காக ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணுவார் 

சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

உங்களை இறுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்தை போல இனி வரும் காலம் உங்களுக்கு இருண்டு இருப்பதில்லை, இயேசு கலிலேயாவை மகிமைப்படுத்தினது போல தேவன் உங்கள் ஒடுக்கினவர்களுக்கு முன்பாக உங்களை ஆசீர்வதித்து, உங்களை மகிமைப்படுத்தி உயர்த்துவார். உங்களை மகிமைப்படுத்தி உயர்த்துவரையிலும் ஆண்டவர் ஓயமாட்டார். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உங்கள் பாத்திரம் நிரம்பி வழியத்தக்கதாக கர்த்தர் செய்வார். ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள் அது போல உங்கள் வாழ்விலும் காரியம் மாறுதலாய் முடியும். நீங்கள் வெட்கப்பட்ட தேசத்திலேயே கர்த்தர் உங்களை மகிபடுத்தி உயர்த்துவார். 





Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment