Sunday, August 7, 2022

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Kamal

Date: 07.08.2022

I பேதுரு 5:6
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

பிரசங்கி 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிரசங்கி 3:11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருங்கள் என்று நாம் வாசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு, நம்முடைய தேவன் அதின் அதின் காலத்திலே . நேர்த்தியாய் செய்து முடிக்கிறவராக இருக்கிறார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், கடந்து போய் கொண்டு இருக்கிற சூழ்நிலைகளை கண்டு மனம் தளராமல் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மீது வைத்து விடுங்கள் உங்களுக்கு என்று ஏற்ற காலம் நிச்சயம் உண்டு அது வரையிலும் தேவனுடைய பலத்த கரத்திற்குள் நாம் அடங்கி இருப்போம் என்று சொன்னால் கர்த்தர் நம்மை நிச்சயம் உயர்த்துவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட தமக்கான வேலைக்காக காத்து இருந்தது பின்னர் தான் அவர் தன் முதல் அற்புதத்தை கானா ஊரில் செய்தார். யோபு பக்தன் எல்லாவற்றையும் இழந்த போதிலும் கூட தேவனுடைய நாமத்தை தூஷிக்காமல் எனக்கு குறித்து இருக்கிறதை நிச்சயம் ஒரு நாளில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று தமக்கான காலம் வரை காத்து இருக்கும் பொழுது கர்த்தர் அவரை இரட்டிப்பாய் ஆசீர்வதித்து உயர்த்தினார். இன்றைக்கு உங்களையும் ஆண்டவர் உயர்த்தவல்லவராய் இருக்கிறார். ஏற்றகாலத்திலே கர்த்தர் நமக்கு செய்யபோகிற காரியங்களை நாம் இங்கே தியானிக்கலாம். 

1. ஏற்றகாலத்திலே தேசத்திலே மழை பெய்யப்பண்ணுவார் 

உபாகமம் 28:12
ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

எசேக்கியேல் 34:26
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

சங்கீதம் 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,

ஆதியாகமம் 21:19
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

நம்முடைய தேசத்திலே கர்த்தர் ஏற்ற காலத்திலே மழை பெய்யப்பண்ணுவார். நீங்கள் கையிட்டு செய்யும் எல்லா காரியத்தையும் ஆண்டவர் ஆசீர்வதித்து அதை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தர் உங்களுக்கு தமது பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார், ஒரு ஆசீர்வாதமான மழை உங்கள் தேசத்திலே பெய்ய பண்ணுவார். அதற்கான சாத்தியமே காணப்படாவிட்டாலும் நம் ஆண்டவரால் அது முடியும். நம்முடைய தேவன் வனாந்திரத்திலே நீரூற்றை காணப்பண்ணுகிற தேவன் வானத்திரத்திலே அலைந்து திரிந்த ஆகாருக்கு கர்த்தர் ஒரு நீரூற்றை கட்டளையிட்டது போல வெறுமையாய் இருக்கிற நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் ஏற்ற காலத்திலே ஆசீர்வாதமான மழையை பெய்யப்பண்ணுவார். சோர்ந்து போக வேண்டாம். நம் தேவன் ஏற்ற காலத்திலே செய்வார். வானாந்திரமான வாழக்கையை செழிப்பாய் மாற்றுவார். 

2. ஏற்ற காலத்திலே சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் 

நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

ஆதியாகமம் 21:2
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

எரேமியா 33:14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

யோசுவா 21:45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

ஏற்றகாலத்திலே சொல்லுகிற வாரத்தை எவ்வளவு நல்லதாய் இருக்கிறது என்று நாம் வாசிக்கிறோம். நாம் சோர்ந்து போய் இருக்கும்பொழுதெல்லாம் தேவன் ஏற்ற காலத்திலே தம்முடைய வார்த்தையை வாக்குத்தத்தமாய் அருளி நம்மை தேற்றுகிறார். ஆபிரகாமுக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு கவலை தனக்கு ஒரு குமாரன் இல்லையே என்பதுதான். சோர்ந்து போன வேளையிலே மூன்று புருஷர்கள் ஆபிரகாமுக்கு வந்து நல் வார்த்தைகளை உறைகிறார்கள். உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்று சொன்னார்கள். கர்த்தர் தாம் உரைத்தபடியே ஆபிரகாம் முதிர்வயதாய் இருக்கையிலே தேவன் குறித்திருந்த காலத்திலே ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை தந்தருளினார் என்று நாம் வாசிக்கிறோம். ஆபிரகாம் தாம் பிள்ளை பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் காணப்படாவிட்டாலும் தேவன் சொன்ன வார்த்தையை முழு நிச்சயமாய் நம்பி விசுவாசித்தான் என்று நாம் வேதத்திலே வாசிக்கிறோமே ஏற்ற காலத்திலே கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்ன வார்த்தையை நிறைவேற்றினார். அது போல உங்களுடைய வாழ்க்கையிலும் தேவன் சொன்ன வார்த்தைகள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் அதற்கான முகாந்திரம் இல்லாவிட்டாலும் அது நிச்சயமாய் நிறைவேறும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இதோ நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார் கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்கும், யூதா குடும்பத்தாருக்கும் சொன்ன நல் வார்த்தைகள் ஏற்ற காலத்திலே நிறைவேறும். 

3. ஏற்றகாலத்திலே உங்களை பலத்த ஜாதியாக்குவார் 

ஏசாயா 60:20
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 60:21
உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.

ஏசாயா 60:22
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

ஏசாயா 27:6
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

கர்த்தர் உங்களை ஏற்ற காலத்திலே பெறுக பண்ணுவார். பூமியை சுதந்தரித்து கொள்ளும் குடிகளாகவும், கர்த்தருடைய நாமம் மகிமை படுப்படியாக அவருடைய கரங்களின் கிரியைகளாகவும் இருப்பீர்கள். உங்க துக்கப்பட்ட நாட்கள் முடிந்து. தேவன் உங்களை பலத்த ஜாதியாக மாற்றுவார். நீங்கள் வலப்புறமும், இடப்புறமும் இடங்கொண்டு பெருகுவீர்கள் தேவன் இதை ஏற்ற காலத்திலே தீவிரமாய் நடப்பிப்பார். நீங்கள் பூத்து காய்த்து உலகத்தை பலனால் நிரப்புகிற நாட்கள் சமீபித்து இருக்கிறது. தேவன் யாக்கோபின் சிறு மந்தையை ஆசீர்வதித்து அதை பெருகப்பண்ணினது போல உங்களையும் கர்த்தர் ஏற்ற காலத்திலே பெருகிட செய்வார். அவர் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவார். 

4. ஏற்றகாலத்திலே அறுவடையை காணச்செய்வார் 

கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

கலாத்தியர் 6:10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.

ஆதியாகமம் 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

ஆதியாகமம் 40:14
இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.

அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

நன்மை செய்கிறதிலே சோர்ந்து போகாதிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது நாம் அதிலே தளர்ந்து போகாமல் இருந்தால் ஏற்ற காலத்திலே அறுப்போம் என்று வாசிக்கிறோம். யோசேப்பு சிறைச்சாலையில் இருக்கும்பொழுது பானபாத்திர காரனின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னார். இன்னும் மூன்று நாளைக்குள்ளே உன் தலையை உயர்த்தி மறுபடியும் உன்னுடைய நிலையிலே நிறுத்துவார் என்று சொன்னார். அவ்வாறு நீ வாழ்வடைந்து இருக்கும்பொழுது என்மேல் தயவு வைத்து என்னை நினைத்தருளி இந்த சிறைச்சாலையில் இருந்து விடுதலையாக உதவ வேண்டும் என்று சொன்னார். யோசேப்பு சொன்னது போலவே பானபாத்திர காரருக்கு நடந்தது. ஏற்ற வேலை வந்தது பானபாத்திரக்காரன் யோசேப்பு சிறைச்சாலையில் தனக்கு செய்ததை பார்வோனுக்கு அறிவித்து அதில் இருந்து விடுதலை அளித்தது மட்டும் அல்லாது. எகிப்திலே அதிபதியாக உயர்த்தப்பட்டார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நன்மை செய்கிறவராக சுற்றித்திருந்தார் என்று வாசிக்கிறோம் அல்லவா. அவர் நன்மை செய்கிறவாக சுற்றித்திரிந்து அநேக ஆத்துமாக்களை தேவனுடைய இராஜ்யத்திற்கு என்று அறுவடை செய்தார். நீங்கள் செய்த எல்லா நன்மையான கிரியைகளுக்கும் அதற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. அதனை நீங்கள் ஏற்றகாலத்திலே அறுக்க தேவன் உங்களுக்கு கிருபை செய்வார். கண்ணீரோடு விதைத்த நீங்கள் நிச்சயமாக ஏற்றகாலத்திலே கெம்பிரமாய் அறுப்பீர்கள். 











Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment