Monday, August 15, 2022

சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்

 

Kanmalai Christian Church 

Word of God : Pastor Jachin Selvaraj

Date: 14.08.2022

சங்கீதம் 102:18
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.

இந்த வசனம் நமக்காக எழுதப்பட்டு இருக்கிறதான ஒரு வசனம். நம் ஆண்டவர் விரும்புகிற காரியம் என்ன என்று சொன்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனமாகிய நாம் ஆண்டவரை துதிக்க வேண்டும் என்பதே. 

சங்கீதம் 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். 

சங்கீதம் 33:1
நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

இங்கே சங்கீதக்காரன் சொல்லுகிறார் நெருக்கத்தின் நேரத்திலும், வேதனையான நேரத்திலும், சொல்லுகிற வசனம் தான் இது வாழ்க்கையின் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி நான் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் என்று சொல்லுகிறார். நாம் கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்போம் என்று சொன்னால் அவர் நம்மை நிச்சயமாய் உயர்த்துவார். 

சங்கீதம் 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு குறித்த நேரத்திற்கு போக வேண்டும். ஆராதனைக்கு முன்பதாகவே துதி ஸ்தோத்திரத்தோடு அவருடைய சமூகத்தில் காத்து இருக்க வேண்டும். கர்த்தருடைய ஆலயத்திற்கு வருவதில் வாஞ்சை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும், அவர் நாமத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும். 

சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

சங்கீதம் 92:1
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

சங்கீதம் 92:2
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

சங்கீதம் 92:3
காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

எபேசியர் 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

நம்முடைய வாழ்க்கையிலே எல்லாருக்கும் ஒரு விண்ணப்பம் இருக்கும். நம்முடைய தேவன் நாம் நினைப்பதற்கும் வேண்டி கொள்ளுகிறதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவராய் இருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை எக்காலத்திலும் துதிப்பதே ஆகும். கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஆண்டவராலே முடியும். நீங்கள் எதிர்பார்த்து இருக்கிற காரியங்களை நிறைவேற்ற அவராலே ஆகும். 

உபாகமம் 31:6
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

யோசுவா 7:11
இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

சங்கீதம் 22:4
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

நீங்கள் பலங்கொண்டு திட மனதாய் இருங்கள், உங்கள் விசுவாசத்தை தைரியப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் விசுவாசத்தில் துவண்டு போய் விட வேண்டாம். உங்கள் சத்துருக்களின் நிமித்தமாக நீங்கள் பயப்படவும், திகைக்கவும் வேண்டாம்.கர்த்தர் உங்களை விட்டு விலகவும் இல்லை, அவர் உங்களை கைவிடுவதும் இல்லை.
யோசுவா அநேக படைகளை வென்றாலும் ஒரு சிறு படையை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை ஏன் என்றால் ஆகான் என்பவன் சாபத்தீடானதை எடுத்து வைத்ததினால் இஸ்ரவேலர் ஆயின் மனுஷரை மேற்கொள்ள முடியாமல் தோல்வியுற்றார்கள். அதுபோல நம் வாழ்க்கையில் சில காரியங்களில் தாமதம் இருக்கிறது என்று சொன்னால் நம்முடைய எல்லையிலே சில தவறுகள் இருக்கலாம் அதை நாம் சோதித்து அறிந்து நம்மை நாமே நிதானித்து பார்க்க வேண்டும். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நாம் நினைப்பதற்கும் அதிகமாக ஜெயத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு பிரியம் இல்லாத காரியம் நம்மிடத்தில் காணப்படும் என்று சொன்னால் தேவனிடத்தில் திரும்பி அறிக்கை செய்து ஒப்புக்கொடுக்கும் பொழுது கர்த்தர் நமக்கு நிச்சயம் ஜெயத்தை தருவார். 

சங்கீதம் 4:3
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

லூக்கா 14:11
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

நியாயாதிபதிகள் 11:11
அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.

பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

பிலிப்பியர் 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பக்தி உள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார் என்று நாம் வாசிக்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம்  வேதத்தை அனுதினமும் வாசித்து தியானிக்க வேண்டும். அனுதினமும் தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும் அவ்வாறு நாம் செய்தால் நிச்சயமாகவே நம் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் ஜெபங்களுக்கு எல்லாம் சீக்கிரத்தில் பதில் வரும். நம் ஆண்டவர் நம்மிடையே எதிர்பார்க்கிற காரியம் தாழ்மை உள்ளவராக இருக்க வேண்டும் தன்னை தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான் என்று இயேசு சொல்லி இருக்கிறார். நியாதிபதிகளில் நாம் வாசிக்கும் பொழுது தன் குடும்பத்தை விட்டு வெளிய தள்ளப்பட்டுப்போனார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எந்த ஜனங்கள் தன்னை துரத்தினார்களோ அதே ஜனங்கள் தன்னை நாடி உதவி கேட்டு வரும்படியாக கர்த்தர் யெப்தாவின் வாழக்கையிலே செய்தார். தம்முடைய காரியங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறவராக யெப்தா இருந்தார் கர்த்தர் அவரை உயர்த்தினார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சிலுவையின் மரணப்பரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார் ஆதலால் பிதாவாகிய தேவன் அவரை எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை தந்தருளினார். ஆகவே நாம் நாம் நம்மை தாழ்த்தும் பொழுது கர்த்தர் நம்மை உயர்த்துவார். 







Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment