Sunday, August 28, 2022

நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 28.08.2022

சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

சங்கீதம் 42:2
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

தாவீது இப்படியாய் சொல்லுகிறார் இந்த பூமிக்குரிய காரியங்களை காட்டிலும் என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாய் இருக்கின்றது என்று சொல்லுகிறார். நான் எப்பொழுது உம்முடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்று வாஞ்சிக்கிறார். இன்றைக்கு நாம் தேவனுடைய சந்நிதியை குறித்து தான் தியானிக்கப்போகிறாம் நாம் தேவனுடைய சந்நிதியில் போய் நிற்பதற்கு முன்பாக இந்த பூமியில் வாழும் போது கூட நாம் செய்கிற சில காரியங்கள் தேவனுடைய சந்நிதியில் போய் சேருகிறதாய் இருக்கிறது அவற்றை நாம் இங்கே இன்றைக்கு தியானிக்க போகிறோம். 

1. நம் கூப்பிடுதல் தேவனுடைய சந்நிதியில் போய் அவர் செவியில்  ஏறும் 

சங்கீதம் 18:3
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

சங்கீதம் 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

சங்கீதம் 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

இந்த உலகிலே ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு தகுந்த வாறு நெருக்கங்கள் காணப்படும். இங்கே தாவீது சொல்லுகிறார் மரணக்கட்டுகள், பாதாள கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது, துர்ச்சனப்பிரவாகம் என்னை பயமுறுத்துகிறது. ஆனாலும் எனக்கு உண்டான இந்த நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன், அவரை நோக்கி நான் அபயமிட்டேன், கர்த்தர் என் சத்தத்தை கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவருடைய செவிகளில் என் கூப்பிடுதல் ஏறிற்று என்று சொல்லுகிறார். ஆம் பிரியமானவர்களே நாமும் தாவீதை போல நமக்கு உண்டாகும் நெருக்கத்தில் சோர்ந்து போய் விடாமல் கர்த்தரை நோக்கி சத்தமாய் அபயமிட்டு கூப்பிடும் பொழுது நம் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவியில் ஏறும். அன்றைக்கு பார்வையற்ற குருடன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்பதை அறிந்து மிகுந்த சத்தமாய் தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிட்டான். அவன் கூப்பிடுதல் இயேசுவின் செவியில் ஏறிற்று. நம் நெருக்கத்திலேயும் கர்த்தரை நோக்கி நோக்கி நாம் கூப்பிடும் பொழுது அவர் கேட்டு நம்மை எல்லா மரண கட்டுகளில் இருந்தும், எல்லா பாதாள கட்டுகளில் இருந்தும் நீங்கலாக்கி விடுவிப்பார். 

2. நம்முடைய தான தருமங்கள் தேவனுக்கு நினைப்பூட்டுதலாய் அவர் சந்நிதியில் எட்டும் 

அப்போஸ்தலர் 10:1
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.

அப்போஸ்தலர் 10:2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் 10:3
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,

அப்போஸ்தலர் 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி தம் வீட்டாரோடு கூட தேவனுக்கு பயந்தவராயும், மிகுந்த தான தருமங்கள் செய்கிறவராயும், எப்பொழுது தேவனை நோக்கி ஜெபம் பண்ணி கொண்டு இருந்தார். தேவனுடைய தூதன் அவருக்கு பிரத்யட்சமாய் தரிசனத்தில் தோன்றி கொர்நேலியுவே என்று அழைத்து நீ செய்த ஜெபங்களும், நீ செய்த தான தருமங்களும் கர்த்தருக்கு நினைப்பூட்டுதலாய் அவருடைய சந்நிதியில் எட்டியது என்றார். நாம் இந்த பூமியிலே செய்கிற தான தருமங்களும் கர்த்தரை நினைவூட்டும்படியாய் அவருடைய சந்நிதியில் போய் எட்டும். ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்று நாம் வாசிக்கிறோம் அல்லவா நாம் தரித்தருக்கு நம்மால் இயன்றதை கொடுக்கும் பொழுது அந்த தருமங்கள் தேவ சந்நிதியில் நினைப்பூட்டி எட்டும்பொழுது கர்த்தர் நம்மை இடம்கொள்ளாது ஆசீர்வதிப்பது உறுதி. 

3. நாம் இடும் கூக்குரல் தேவனுடைய சந்நிதியை எட்டும் 

யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

யாத்திராகமம் 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

எகிப்தில் அடிமைத்தனத்தில், ஒடுக்கப்பட்டு இருந்த இஸ்ரவேல் புத்திரர் இட்ட கூக்குரலானது தேவனுடைய சந்நிதியில் எட்டினது கர்த்தர் தம்முடைய ஜனங்களை எகிப்தியரின் கையில் இருந்து விடுதலையாக்கவும் அவர்களுக்கு தாம் வாக்குப்பண்ணின பாலும் தேனும் ஓடுகிறதான கானான் தேசத்திலே கொண்டு போய் சேர்க்கும்படியாகவும் கர்த்தரே அவர்கள் கூக்குரல் நிமித்தமாக இறங்கினார் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். இன்றைக்கு நாம் அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை உடையவர்களாக தேவனுக்கு பிள்ளைகளாக இருக்கிறோம், நாம் ஒடுக்கப்படும் நேரத்தில் எல்லாம் நாம் தேவனை நோக்கி கூக்குரல் இடும் பொழுது நம்மை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்க அன்றைக்கு இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரலுக்கு இறங்கி வந்த தேவன் இன்றைக்கும் நம்மை மீட்டெடுக்க விடுதலையாக்க இறங்கி வருவார் சோர்ந்து போக வேண்டாம். 

4. நம்முடைய விண்ணப்பத்தின் ஜெபம் தேனுடைய சந்நிதியில் எட்டும் 

தானியேல் 9:20
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

தானியேல் 9:21
அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

தானியேல் 9:22
அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.

தானியேல் 9:23
நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.

தானியல் தம் பாவத்திற்காகவும், தம் ஜனமாகிய இஸ்ரவேலருடைய பாவத்திற்காகவும் தேவனிடத்தில் அறிக்கையிட்டு பரிசுத்த பர்வதத்திற்கு நேராக தம் விண்ணப்பத்தின் ஜெபத்தை ஏறெடுத்து கொண்டு இருக்கையில் தேவ சந்நிதியில் இருந்து கபிரியேல் தூதன் வேகமாய் புறப்பட்டு வந்து தானியேலுக்கு தரிசனமாகி நீ மிகவும் பிரியமானவன் நீ வேண்டிக்கொள்ள தொடங்கினபொழுதே அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது அதை அறிவிக்கவே நான் வந்தேன் என்றார். நாம் பிறருக்காக, தேசத்துக்காக ஜெபிக்கும்பொழுது அது உகந்த விண்ணப்பமாய் அவர் சந்நிதியில் போய் எட்டும் நாம் வேண்டிக்கொள்ள தொடங்கும்பொழுதே நம்முடைய ஜெபத்திற்கான கட்டளை பிறக்கும். தானியேலை போல நாம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம். 







Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment