Sunday, August 21, 2022

பிரியமான புருஷனே, பயப்படாதே

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 21.08.2022

தானியேல் 10:18
அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,

தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

மத்தேயு 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

தேவனுக்கு பிரியமான புருஷனே பயப்படாதே, உனக்கு சமாதானம் உண்டாவதாக , உனக்கு வரவேண்டிய தேவ ஒத்தாசை அது தாமதிப்பது இல்லை, திடன்கொள்ளுங்கள். நீங்கள் எந்த காரியத்தில் சோர்ந்து போய் இருந்தாலும் சரி கர்த்தர் இன்றைக்கு உங்களை திடப்படுத்தப்போகிறார். 

1. தேவனுக்கு பிரியமாய் இருப்போம் - விசுவாசமாய் தேவனிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது    

எபிரெயர் 11:5
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.

ஆதியாகமம் 5:23
ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

ஆதியாகமம் 5:24
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அதுமட்டும் அல்ல அவர் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு தேவனுக்கு பிரியமானவன் என்று முன்னமே சாட்சி பெற்றார் என்று நாம் வாசிக்கிறோம். ஏனோக்கு எப்பொழுதும் விசாசத்தோடு தேவனிடத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தபடியால் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டு காணப்படாமற்போனார். இன்றைக்கு நாமும் ஏனோக்கை போல தேவனிடத்திலே விசுவாசமாய் இருப்போம் என்று சொன்னால், அவரை தேவனிடத்தில் சஞ்சரிப்போம் என்று சொன்னால் நாம் தேவனுக்கு பிரியமானவர்களாய் இருப்போம். 

2. தேவனுக்கு பிரியமாய் இருப்போம் - பரிசுத்த பர்வதத்திற்கு நேராக நம் ஜெபம் இருக்குபொழுது 

தானியேல் 9:18
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

தானியேல் 9:19
ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.

தானியேல் 9:20
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

தானியேல் 9:21
அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

தானியேல் 9:22
அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.

தானியேல் 9:23
நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.

தானியேல் இப்படியாய் சொல்லுகிறார் தேவனே உம்முடைய மிகுந்த இறக்கங்களை நம்பி எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாக செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும் என்று தேவனுடைய பரிசுத்த பர்வதத்தை நோக்கி தன்னுடைய விண்ணப்பத்தை தானியேல் ஏறெடுக்கிறார். அப்பொழுது காபிரியேல் வேகமாய் வந்து தானியேலிடத்தில் நீ மிகவும் பிரியமானவன் ஆகவே நீ வேண்டிக்கொள்ள தொடங்கினபொழுதே கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்று சொன்னான். ஆம் பிரியமானவர்களே நம்முடைய ஜெபமானது இப்படியாய் இருக்க வேண்டும். தானியேலைபோல தேவனுடைய சமூகத்தில் நம்மை தாழ்த்தி அவருடைய அளவில்லா இரக்கத்தை மாத்திரமே நம்பி பரிசுத்த பர்வதத்திற்கு நேராக நம் விண்ணப்பங்களை செலுத்தினால் தேவன் நம்மை பிரியமாய் கண்ணோக்கி வேண்டிக்கொள்ள தொடங்கும் போதே நம் ஜெபத்திற்கு பதிலை கட்டளையிடுவார். 

3.தேவனுடைய ஆத்துமாவிற்கு பிரியமாய் இருப்போம் - எல்லா சூழ்நிலைகளிலும் மௌனமாய் இருக்கும்பொழுது 

ஏசாயா 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

ஏசாயா 42:2
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

ஏசாயா 42:3
அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

தேவனுடைய ஆத்துமாவுக்கு பிரியமாய் இருக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். அவ்வாறு நாம் இருக்கும் பொழுது தேவனுடைய தாசர்களாக இருப்போம். தேவனுடைய ஆத்துமாவுக்கு பிரியமாய் இருக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொன்னால் அவர்கள் கூக்குரலிடமாட்டார்கள், தங்களுடைய சத்தத்தை உயர்த்தமாட்டார்கள், வீதியிலே முறையிடமாட்டார்கள். நாமும் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் இங்கே வசனத்தில் சொல்லப்பட்டுள்ள சுபாவத்தை நமக்குள் வைத்து இருக்க பழகி கொண்டால் நாம் கர்த்தருடைய ஆத்துமாவிற்கு பிரியமானவர்களாய் இருப்போம். அவர் ஆத்துமாவிற்கு நீங்கள் பிரியமாய் நடக்கும் பொழுது கர்த்தர் உங்களை தம்முடைய தாசராக தெரிந்துகொள்ளுகிறார்.  

4. தேவனுக்கு பிரியமாய் இருப்போம் - தேவ சித்தத்தை பாபிலோனிலே செய்யும்பொழுது 

ஏசாயா 48:12
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

ஏசாயா 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.

ஏசாயா 48:14
நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

பாபிலோன் என்று சொன்னாலே தேவ பிரியம் சித்தத்திற்கு புறம்பானது. அவருக்கு பிரியம் இல்லாதவைகளால் நிரம்பி இருப்பது. இங்கே வசனத்திலே கர்த்தருக்கு பிரியமானவன் தேவனுடைய சித்தத்தை பாபிலோனிலே நிறைவேற்றுவான் என்று நாம் வாசிக்கிறோம். தேவன் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார் எதற்காக என்றால் இந்த பொல்லாத உலகத்திலே தேவனுடைய சித்தம் செய்வதற்கு. ஒருவரும் கேட்டும் போகாமல் நித்திய ஜீவனை அடைவதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. இந்த பொல்லாத பாபிலோனாகிய உலகத்தில்  உள்ள ஆத்துமாக்களை தேவ ராஜ்யத்திலே சேர்க்கும்படியாய் நம்மை கர்த்தர் தெரிந்து கொண்டு இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் கூட தான் இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை  விடுவிக்கும்படியாக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; பிதாவாகிய தேவன் அவரில் பிரியமாய் இருந்தார். நாமும் தேவ சித்தத்தை செய்யும்பொழுது கர்த்தருக்கு பிரியமானவர்களாக இருப்போம். 

5. தேவனுக்கு பிரியமாய் இருப்போம் - தேவபிள்ளையாக அவர் கிருபை நம்மில் இருக்கும்பொழுது 

உபாகமம் 33:12
பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

ஆதியாகமம் 43:29
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.

பென்யமீன் கர்த்தருக்கு பிரியமானவனாய் இருப்பான், அவன் சுகமாய் தங்கியிருப்பான், கர்த்தர் அவனை எந்நாளும் காப்பாற்றி அவனுடைய எல்லைகளிலே வாசமாய் இருப்பார் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். யோசேப்பு தன் தாய் பெற்ற பிள்ளையாகிய பென்யமீன் இவன் தானா எனக்கேட்டு மகனே தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர் என்று ஆசீர்வதிக்கிறார். கிறிஸ்து இயேசு நமக்கு தாயாக ஞானஸ்தானத்தின் மூலமாக தம்முடைய சொந்த இரத்தத்தினாலே நம்மை பெற்றெடுத்து இருக்கிறார். யோசேப்பு பென்யமீனை காணும் பொழுது தன் எல்லா சகோதரரை பார்க்கிலும் இந்து மடங்கு அதிகமாக கொடுத்து ஆசீர்வதித்தார் அதுபோல தேவனுடைய பிள்ளளைகளாய் இருக்கிற நமக்கும் புறஜாதியை பார்க்கிலும் அதிகமான விசேஷித்த கிருபையை அளித்து நம்மை சுகமாய் தங்கி இருக்க செய்து, நம்மை எந்நாளும் காப்பாற்றி, நம்முடைய எல்லைகளிலே இன்றளவும் வாசமாய் இருக்கிறார்.








Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment