Sunday, July 3, 2022

நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 3.07.2022

உபாகமம் 12:7
அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

I தெசலோனிக்கேயர் 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

இந்த ஜூலை மாதம் முழுவதும் கர்த்தர் உங்களை மகிழ்ச்சியினால் நடத்துவார் ஆகையால் நீங்களும் உங்கள் குடும்பத்தார் யாவரும் சந்தோஷப்படுவீர்களாக. அவர் எப்படிப்பட்ட சந்தோஷத்தை நமக்கு தருகிறார் என்பதை ஒரு ஐந்து விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம். 

1. இரட்சணியத்தின் சந்தோஷம் - உற்சாகமான ஆவியை அருளும் 

சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

சங்கீதம் 51:11
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

சங்கீதம் 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

இரட்சணியத்தின் சந்தோஷத்தை கர்த்தர் நமக்கு தந்து அருளி இருக்கிறார். அது விலையேறப்பெற்றது அதனால் தான் தாவீது இங்கே ஆண்டவரே இந்த இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்து உற்சாகமான ஆவி என்னை தங்கும்படி செய்யும் என்று வேண்டுகிறார். நமக்கும் தேவன் இரட்சணியத்தின் சந்தோஷத்தை கொடுத்து உற்ச்சாகமான ஆவி நம்மை தாங்கும்படியாக செய்வார்.  

2. பரிசுத்தஆவியின் சந்தோஷம் - மிகுந்த உபத்திரவத்தில் தேற்றும் 

I தெசலோனிக்கேயர் 1:3
நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,

I தெசலோனிக்கேயர் 1:4
எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

I தெசலோனிக்கேயர் 1:5
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.

I தெசலோனிக்கேயர் 1:6
நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

பவுல் சொல்லுகிறார் நாங்கள் கொண்டு வருகிற சுவிசேஷம் வசனத்தோடு மாத்திரம் அல்ல அது எப்படி வருகிறது என்றால் வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நீங்கள் மிகுந்த உபாத்திரவத்திலே பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தோடு திருவசனத்தை ஏற்று கொண்டு இயேசுவை பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று சொல்லுகிறார். ஆம் பிரியமானவர்களே நாம் எப்பொழுதெல்லாம் மிகுந்த உபத்திரவத்தோடு இருக்கும் பொழுது பரிசுத்த ஆவியின் சந்தோஷம் நம்மை தேற்றுகிறது. 

3. மகா சந்தோஷம் - நம் துதியினால் உண்டாகும் 

நெகேமியா 12:38
துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,

நெகேமியா 12:39
எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

நெகேமியா 12:40
அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,

நெகேமியா 12:41
பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,

நெகேமியா 12:42
மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

நெகேமியா 12:43
அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

அந்நாளில் எஸ்றா ஆலயத்தின் வாசலில் துதி செய்கிற கூட்டத்தாரை நிறுத்தி மிகுந்த பலிகளை தேவனுக்கு செலுத்தினார். அப்பொழுது அவர்கள் தேவனை துதித்து சத்தமாய் பாடினார்கள் இதனால் தேவன் அவர்கள் மகா சந்தோஷத்தை அருளினார் இதினிமித்தம் அவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தார்கள் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். அது மட்டும் அல்லாமல் எருசலேமின் களிப்பு தூரத்திலும் கேட்கப்பட்டது என்று வாசிக்கிறோம். நாமும் கர்த்தரை, அவருடைய நாமத்தை உயர்த்தி துதிக்கும் பொழுது கர்த்தர் இந்த மகா சந்தோஷத்தை நமக்கு தர வல்லவராய் இருக்கிறார். நம்முடைய களிப்பு தூரத்திலும் கேட்கப்படும். 

4. கர்த்தரைக்கண்ட சந்தோஷம் - நம் கலக்கத்தை போக்கும் 

யோவான் 20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:20
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

யோவான் 20:21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

யோவான் 20:22
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

வாரத்தின் முதல் நாளில் சீஷர்கள் யூதர்களுக்கு பயந்து பூட்டிய வீட்டிற்குள் இருந்தார்கள். இனி என்ன செய்வது என்று அறியாத கலங்கின ஒரு சூழ்நிலை அப்பொழுது இயேசு அவர்கள் நடுவே தோன்றி உங்களுக்கு சமாதானம் என்றார். இயேசுவை கண்ட சீஷர்கள் சந்தோஷப்பட்டார்கள் என்று நாம் வாசிக்கிறோம். அவர்கள் கர்த்தரை கண்டதால் விசுவாசித்தார்கள். இயேசு இப்படியாய் சொல்லுகிறார் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் என்னை பாக்கியவான்கள் என்று. எப்படிப்பட்ட கலக்கமான சூழ்நிலையில் நீங்கள் சென்று கொண்டு இருந்தாலும் சரி அவரையே நம்பி விசுவாசிக்கிற உங்களை அவர் கைவிடமாட்டார். உங்கள் கலக்கத்தை போக்கி நிச்சயாமாகவே உங்களை சந்தோஷத்தை காணச்செய்வார். 

5. மிகுந்த சந்தோஷம் - சாபத்தை நீக்கி ஆசீர்வதிக்கும் 

லூக்கா 24:49
என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

லூக்கா 24:51
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

லூக்கா 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து,

லூக்கா 24:53
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

இயேசு பெத்தானியா வரை சீஷர்களை அழைத்துக்கொண்டு வந்து தம் இரு கைகளை உயர்த்தி சீஷர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர்கள் இயேசுவை பணிந்து கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் எருசலேமுக்கு திரும்பி வந்து தேவனை துதித்தார்கள் என்று நாம் இங்கே பார்க்கிறோம் இந்த மிகுந்த சந்தோஷம் எதனால் வருகிறது என்றால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும் பொழுது. கர்த்தருடைய கரம் உங்கள் மேல் நீட்டப்படும் போதெல்லாம் உங்களுக்கு சந்தோசம் உண்டாகும். உங்களுக்குள் இருக்கிற எல்லா சாபங்களையும் நீக்கி கர்த்தர் ஆசீர்வதித்து மிகுந்த சந்தோஷத்தினால் உங்களை நடத்துவார். 







Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment