Friday, July 1, 2022

யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஜூலை மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 01.07.2022

சங்கீதம் 53:6

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

நம் தேவனாகிய கர்த்தர் எப்படியெல்லாம் இந்த மாதம் நம்மை மகிழ்ச்சியாக்குவார் என்பதை ஒரு ஐந்து விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம். 

1. மிகுந்த சமாதானத்தினாலே நம்மை மகிழ்ச்சியாக்குவார் 

சங்கீதம் 37:9

பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

சங்கீதம் 37:10

இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

சங்கீதம் 37:11

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

ஏசாயா 66:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

ஏசாயா 66:13

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

ஏசாயா 66:14

நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

இந்த மாதம் என் ஜனங்கள் மிகுந்த சமாதானத்தினால் மகிழ்ச்சியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  இந்த மாதம் உங்கள் சமாதானத்தை நதியைப்போல கர்த்தர் பாயச்செய்வார். அவர் தம் இடுப்பிலே உங்களை தாங்கி முழங்காலிலே தாலாட்டுவார். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். இவையெல்லாம் நீங்கள் காணும் பொழுது உங்கள் இருதயம் மகிழ்ந்து களிகூரும். உங்கள் எலும்புகள் எல்லாம் பசும்புல்லை போல செழிக்கும். 

2.சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் நம்மை மகிழ்ச்சியாக்குவார் 

சங்கீதம் 90:14

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். 

சங்கீதம் 90:15

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

புலம்பல் 3:23

அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

இந்த மாதம் கர்த்தர் நாம் சிறுமைப்பட்ட நாட்களுக்கும், துன்பத்தை கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உங்களை மாளிச்சியாக்குவார். நாம் மகிழ்ந்து களிகூரும் படியாக காலையிலே கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை திருப்தியாக்குவார். நாம் இந்நாள் வரையிலும் நிர்மூலம் ஆகாமல் இருப்பது கர்த்தருடைய கிருபையே அவர் நம் ஆத்துமாவை காப்பாற்றி காலை தோறும் புதிய கிருபைகளை தருகிறார். தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. கர்த்தருடைய பெரிதான கிருபையாலே நாம் இன்றைக்கு பாதுகாப்போடு இருக்கிறோம். இந்த ஏழாம் மாதம் உங்கள் சிறுமைகள், துன்பங்கள் எல்லாம் மாறிட கர்த்தர் கிருபை செய்வார். 

3. நன்மையினாலே நம்மை மகிழ்ச்சியாக்குவார் 

II நாளாகமம் 6:41

தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.

எரேமியா 33:9

நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்கள். யார் இந்த பரிசுத்தவான்கள் ? கர்த்தருக்காக பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற நாமே அந்த பரிசுத்தவான்கள். தேவன் நம்மை பரிசுத்தத்திற்காகவே நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார். கர்த்தருடைய ஜனம் ஜாதிகளோடே கலவாமல் தனித்து வாசமாய் இருப்பார்கள். அப்படி நாம் தேவனுக்காய் தீமையை வெறுத்து பரிசுத்தத்தை காத்துக்கொள்ளும்பொழுது கர்த்தர் எல்லாவித நன்மையினாலும் நம்மை மகிழ்ச்சியாக்கி ஆசீர்வதிப்பார். நன்மையையும், கிருபையும் உங்களை தொடரும். 

4. மகா சந்தோஷத்தினால் நம்மை மகிழ்ச்சியாக்குவார் 

நெகேமியா 12:43

அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

நெகேமியா 12:44

அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.

சங்கீதம் 40:16

உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

சங்கீதம் 51:8

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

எஸ்றா ஆலயத்தின் பன்னிரண்டு வாசல்களிலும் கர்த்தருக்கு மிகுதியான பலிகளை செலுத்தி கர்த்தரை தேடி, சத்தமாய் அவரை துதித்து பாடினார்கள் அப்பொழுது தேவன் அவர்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கியதால் சந்தோஷமாய் இருந்தார்கள். அங்கே ஸ்த்ரீகளும், பிள்ளைகளும் கூட களிகூர்ந்து மகிழ்ந்தார்கள். எருசலேமின் களிப்பு தூரத்திலும் கேட்கப்பட்டது என்று நாம் இங்கே வாசிக்கிறோம்.  அதேபோல கர்த்தரை அனுதினமும் தேடுகிற நம்மையும் இந்த மாதம் மகா சந்தோஷத்தினால் மகிழ்ச்சியாக்க போகிறார். உங்களுடைய களிப்பு தூரத்திலும் கேட்கப்படும். நம்மை இந்த மாதம் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கேட்கும்படியாக கர்த்தர் செய்வார். 

5. ஆனந்தக்களிப்பினால் நம்மை மகிழ்ச்சியாக்குவார் 

சங்கீதம் 30:10

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

சங்கீதம் 30:11

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனையோ புலம்பல்கள் உண்டு அவை எல்லாவற்றையும் கர்த்தர் இந்த மாதம் ஆனந்த களிப்பாக மாற்றுவார். உங்கள் மகிமை அமர்ந்திரமால் கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக மகிழ்ச்சி என்னும் கட்டினால் உங்களை இடைக்கட்டுவார். 



Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment