Sunday, July 10, 2022

உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்


Kanmalai Christian Church
Word of God: Pastor Jachin Selvaraj
Date: 10.07.2022

எரேமியா 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வார்தைகளை கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசிக்கு அவருடைய வாழ்க்கையில் நடக்கவிருக்கிறதை முன்னதாவே இந்த வார்த்தைகளை அவருக்கு அருளுகிறார். அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள். அவர்கள் என்றால் யார் ? ஒரு வேலை குடும்ப நபராக இருக்கலாம், நீங்கள் ஊழியம் செய்கிற இடத்தில் இருக்கலாம், அதிகாரிகள் உங்களுக்கு எதிராக எழும்பலாம், உங்கள் வாழ்க்கையில் நீ முன்னேறி போய் விடக்கூடாது உங்களுக்கு விரோதமாக எழும்புவார்கள் ஆனாலும் அவர்கள் உங்களை மேற்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் உங்களை காத்து இரட்சிக்கும் படியாக கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார். 

கடைசி வரை ஆண்டவர் என்னை காப்பாரா, கடைசி வரை ஆண்டவர் என்னை நடத்துவாரா ? என்னுடைய வாழ்க்கை பாதை பயம் நிறைந்ததாய் இருக்கிறதே, நான் என்ன செய்ய போகிறேன். என்றெல்லாம் சில நேரம் நமக்கு சிந்தைகள் வந்து விசுவாசத்தை குலைக்க பார்க்கும். அதை கண்டு நாம் சோர்ந்து போய் விடக்கூடாது 

நியாயாதிபதிகள் 11:1
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

நியாயாதிபதிகள் 11:2
கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

நியாயாதிபதிகள் 11:3
அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

நியாயாதிபதிகள் 11:6
யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 11:7
அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

நியாயாதிபதிகள் 11:11
அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.

நியாயாதிபதிகள் 11:21
அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,

நியாயாதிபதிகள் 11:29
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

யெப்தா பலத்த பராக்ரமசாலியாய் இருந்தான் என்று நாம் வாசிக்கிறோம். யெப்தாவை நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். யெப்தா தம் குடும்பத்தை விட்டு தள்ளப்பட்டு போனாலும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் மேலே கண்ணோக்கமாய் இருக்கிறார். தன்னை துரத்தின ஜனங்கள் முன்பதாகவே கர்த்தர் யெப்தாவை உயர்த்தினார். நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் வேண்டி கொண்டார்கள். யெப்தா கர்த்தரை நம்பி தன்னை ஒப்புக்கொடுத்து சென்றார். எந்த எந்த இடத்தில தடைகள் அதே இடத்தில் கர்த்தர் ஜெயத்தை கொடுத்தார். நம்முடைய ஆண்டவர் நமக்கு விரோதமாய் எப்படிப்பட்ட யுத்தங்கள் எழும்பினாலும் உங்களை எல்லாவற்றிலும் ஜெயத்தை காணத்தக்கதாக கர்த்தர் நம்மோடு கூட இருப்பார். 

யெப்தா கர்த்தரை நோக்கி ஆண்டவரே எனக்கு ஜெயத்தை கொடுங்கள். அப்பொழுது நான் வீட்டுக்கு செல்லும் பொழுது எது என் எதிரே வருகிறதோ அதை உமக்கு நான் அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் பொருத்தனை செய்து விடுகிறார். ஆனால் அவர் வீட்டிற்கு வரும் பொழுதோ அவருடைய ஒரே குமாரத்தி எதிரே வந்தாள்.  அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். என்று நாம் வாசிக்கிறோம் ஆகவே பிரியமானவர்களே நம்முடைய வாயின் வார்த்தைகளிலே நாம் கவனமாய் இருக்க வேண்டும். இயேசு பிதாவிற்கு கீழ்ப்படிந்து தன்னை தாமே ஒப்புக்கொடுத்தபடியினாலே  பிதா அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை கொடுத்து அவரை உயர்த்தினார். வாயின் வார்த்தைகள் எதுவோ அது அப்படியே நடந்து விடும். நம் வாயின் வார்த்தைகளை குறித்து எச்சரிக்கையாய் இருப்பது நமக்கு நலம். நாம் ஞானமாய் பேச நம்மை நாம் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். அவர் நமக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா போராட்டங்களையும் மேற்கொள்ள அவர் நம் பட்சத்தில் இருப்பார். நம்மோடு கூட இருப்பார், நமக்கு ஜெயத்தை கொடுப்பார். என்று கர்த்தரை நம்பி அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். 










Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment