Sunday, July 24, 2022

என் கண்களைத் திறந்தருளும்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 24.07.2022

சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

நம்மை சுற்றிலும் அநேக காரியங்கள் மறைவாக இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இன்றைக்கும் வேதாகமத்தில் கர்த்தர் கண்களை திறந்த மனுஷர்களை குறித்து  நாம் இங்கே தியானிக்கலாம். 

1. ஆகாரின் கண்களைத் திறந்தார் - பிள்ளையின் தேவையை சந்திக்கும்படியாக 

ஆதியாகமம் 21:15
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,

ஆதியாகமம் 21:16
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

ஆதியாகமம் 21:17
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

ஆதியாகமம் 21:18
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

ஆதியாகமம் 21:19
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

பிள்ளை சாகிறதை எந்த பெற்றோரும் விரும்பமாட்டார்கள். ஆகாரின் துருத்தியில் இருந்த தண்ணீர் செலவழிந்து விட்டதால் தன் பிள்ளை ஒரு செடியின் கீழே விட்டு அவன் சாகிறதை தன்னால் பார்க்க முடியாது என்பதை அறிந்து பிள்ளை இருக்கும் திசைக்கு எதிராக ஒரு அம்பு எய்யும் தூரத்தில் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். கர்த்தர் பிள்ளையின் அழுகுரலை கேட்டு வானத்தில் இருந்து ஆகாரை நோக்கி பேசினார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். அப்பொழுது தேவன் ஆகாரின் கண்களை திறந்தார், அவள் ஒரு தண்ணீர் துறவை கண்டாள். அந்த தண்ணீரை தம்முடைய துருத்தியில் நிரப்பி பிள்ளைக்கு குடிக்க கொடுத்தாள். இன்றைக்கும் கர்த்தர் சொல்லுகிறதாவது உங்கள் பிள்ளைகளை குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் பிள்ளைகளின் காரியங்களை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.  ஒரு அம்பு எய்யும் தூரத்தில் தான் கர்த்தர் இருக்கிறார் உங்களுக்கு ஒரு அதிசயம் விளங்கப்போகிறது.  உங்கள் பிள்ளைகளுக்காக கர்த்தர் துறவை உண்டுபண்னுவார். 

2. பிலேயாமின் கண்களைத் திறந்தார் - இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும்படியாக  

எண்ணாகமம் 22:21
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

எண்ணாகமம் 22:22
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

எண்ணாகமம் 22:23
கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

பிலேயாம் மோவாபின் பிரபுக்களோடு கழுதையின் மீது சேணங்கட்டி சென்றதால் தேவனுக்கு பிலேயாம் மீது கோபம் மூண்டது. இதனால் கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தோடு இருக்கிறதை கழுதை கண்டு வழியை விட்டு விலகி வயலிலே போயிற்று. பிலேயாம் கழுதையை அடித்தான். மீண்டும்  கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். கர்த்தருடைய தூதரை மறுபடியும் கண்ட கழுதை சுவர் புறமாய் ஒதுங்கி பிலேயாமின் காலை நேருகிற்று இதனால் திரும்பவும் பிலேயாம் கழுதையை அடித்தான். பின்னர் கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். கர்த்தருடைய தூதரை கண்ட கழுதை கீழ் படுத்து கொண்டது. இதனால் பிலேயாம் மிகுந்த கோபம் உண்டாகி கழுதையை தடியினால் அடித்தான். அப்பொழுது கர்த்தர் கழுதையின் வாயை திறந்தார். கழுதை பிலேயாமை நோக்கி நீர் மூன்று தரம் அடக்கும்படிக்கு நான் அப்படி என்ன செய்தேன் என்றது அதற்கு பிலேயாம் நீ என்னை பரியாசம் பண்ணினாய் இபொழுது மட்டும் என் கையில் பட்டயம் இருந்தால் உன்னை கொன்றுபோடுவேன் என்றான். அதற்கு கழுதை பிலேயாமை நோக்கி நீர் என்னை கொண்ட நாள் முதல் நீர் எரிய கழுதை நான் இதற்கு முன் நான் இப்படி உமக்கு செய்து இருக்கிறேனா என்றது அதற்கு பிலேயாம் இல்லை என்றான். அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களை திறந்தார். 

தன்னுடைய வழியிலே கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தோடு நின்று கொண்டு இருக்கிறதை கண்டு  பிலேயாம்  தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். கர்த்தருடைய தூதன் பிலேயாமை நோக்கி உன் வழி எனக்கு மாறுபாடாக இருந்ததால் உனக்கு எதிராக நின்றேன் என்றார். பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான் கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ போய் சொல் என்றார். 

எண்ணாகமம் 23:8
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

எண்ணாகமம் 23:9
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

எண்ணாகமம் 23:10
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

கர்த்தர் சொல்லாத வார்த்தையை சொல்ல பிலேயாம் புறப்பட்டு போனான். கர்த்தர் அவனுக்கு எதிராளியாய் உருவின பட்டயத்தோடு நின்றார். இஸ்ரவேல் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம், நீ அவர்களை சபிக்க மோவாபியரோடு புறப்பட்டது என்ன என்று கேட்டார்? கர்த்தர் பிலேயாமின் கண்களை திறந்து, அவன் வாயிலே அவர் வார்த்தையை அருளி  இஸ்ரவேலை ஆசீர்வதித்தார். 

3. சவுலின் கண்களைத் திறந்தார் - தரிசனத்தை நிறைவேற்றும்படியாக 

அப்போஸ்தலர் 9:8
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலர் 9:9
அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.

அப்போஸ்தலர் 9:17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

அப்போஸ்தலர் 9:18
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.  

சவுல் தரையில் இருந்து எழுந்து தன் கண்களை திறந்த பொழுது ஒருவனையும் அவன் காணவில்லை. சவுலை தமஸ்குவிற்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே அனனியா என்னும் பெயர் உடைய சீஷன் இருந்தார். அவருக்கு கர்த்தர் தரிசனமாகி நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். அதற்கு அனனியா ஆண்டவரே இந்த சவுல் என்னப்பட்ட மனுஷன் உம்முடைய பரிசுத்தவான்களுக்கு பொல்லாங்கு செய்தவைகளை குறித்து கேள்வி பட்டுஇருக்கிறேன் என்றார்  மேலும் அவர்  உம்முடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவர்களை கட்டும் படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்று இருக்கிறான் அல்லவே என்றார். அதற்கு கர்த்தர் நீ போ அவனை நான் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்கு நான் தெரிந்து கொண்ட பாத்திரமாய் இருக்கிறான் என்றார். 

அனனியா வீட்டுக்குள் பிரவேசித்து சவுல் மேல் தன் கையை வைத்து நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்கிறார். உடனே சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வை அடைந்து. ஞானஸ்நானம் பெற்றார். கர்த்தர் சவுலை அப்போஸ்தலராக தெரிந்து கொண்டு அவர் ஓட்டம், தரிசனம் இப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று கர்த்தர் அறிந்து சரியான நேரத்திலே அவர் கண்களை திறந்து சவுலை பவுலாக மாற்றி அவருடைய இராஜ்யத்தை கட்டுப்படியாக மாற்றினார். 

4. எம்மாவு சீஷர்களின் கண்களைத் திறந்தார் - ஜீவனுள்ள தேவனை அறிவிக்கும்படியாக

லூக்கா 24:13
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

லூக்கா 24:14
போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லூக்கா 24:15
இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.

லூக்கா 24:16
ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.

லூக்கா 24:30
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

லூக்கா 24:31
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

லூக்கா 24:32
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

எம்மாவு என்கிற இடத்தில் இரண்டு சீஷர்கள் இயேசுவை குறித்து ஒருவரோடு ஒருவர் பேசி கொண்டு வந்தார்கள். அவர்கள் அப்படி பேசி கொண்டு இருக்கையில் இயேசு அவர்களுடனே கூட நடந்து போனார் ஆனாலும் அவர் இயேசு தான் என்பதை அறியாதபடிக்கு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பந்தியிருக்கையில் இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது. அவர்கள் நம்மோடு பேசியது இயேசுதான் என்பதை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நோக்கி வழியிலே நம்முடன் பேசி வேத வாக்கியங்களை எடுத்துரைக்கும் பொழுது  நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா பேசி கொண்டு எருசலேமுக்கு திரும்பிப்போனார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவை குறித்து சீஷர்களுக்கு அறிவித்தார்கள். 








Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment