Sunday, June 5, 2022

அவர் அவன்மேல் மனதுருகுவார்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date: 05.06.2022

ஏசாயா 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

கர்த்தர் யாருக்கு மனதுருகுவார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம். 

1. எருசலேமிடத்தில் திரும்பி மனதுருகி - நன்மை செய்து தேற்றுவார் 

சகரியா 1:16
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

சகரியா 1:17
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

சங்கீதம் 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

மனதுருக்கம் என்று சொன்னால் யாருமே ஏற்று கொள்ளாத நிலையில், யாருமே பராமரிக்காத நிலையில், யாரும் தேற்றுதல் செய்யாத நிலையில் ஒருவர் மாத்திரம் நம்மை எப்பொழுதும் மேற்கூறிய யாவையும் பண்ணுவேன் என்று சொல்லுகிறவர் நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசு மட்டுமே. எருசலேம் என்று சொன்னால் தேவ ஜனங்கள் வந்து செல்லுகிற ஆலயம் என்று நாம் அறிவோம். இந்த ஜனம் கர்த்தருக்காக தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம். கர்த்தர் தெரிந்துகொள்ளப்பட்ட  எருசலேமாகிய நமக்கு தேவன் இனி வருகிற நாட்களில் நல்வார்த்தையை அருளப்போகிறார். நீங்கள் கர்த்தரிடத்தில் திரும்பும் பொழுது நன்மைகள் உங்களை சுற்றி பரம்பியிருக்க செய்வார். அவர் உங்களை தாய் தேற்றுவது போல தேற்றுவார்.  

2. இஸ்ரவேலின் வருத்தத்தை பார்த்து மனதுருகி - இரட்சித்து இளைப்பாறுதலை தருவார்

நியாயாதிபதிகள் 10:10
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 10:11
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

நியாயாதிபதிகள் 10:12
சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?

நியாயாதிபதிகள் 10:13
அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.

நியாயாதிபதிகள் 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்

நியாயாதிபதிகள் 10:15
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் 10:16
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

இந்த ஏழு ஜாதி பிசாசுகளும் கிறிஸ்துவ வாழ்க்கையில் நம்மை ஒடுக்கி கொண்டே இருக்கிறது. நம்மை தலை நிமிர விடமால் வைத்து விடுகிறது. அன்றைக்கு இஸ்ரவேல் புத்திரர் அந்நிய தேவர்களை தங்களை விட்டு விலக்கி கர்த்தருக்கு நோக்கி தங்களை இரட்சிக்கும்படியாக ஆராதனை செய்தார்கள் அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் வருத்தத்தை பார்த்து மனதுருகினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அதேபோல இன்றைக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய  நாமும் நம்மில் விலக்க வேண்டியதை விலக்கி கர்த்தரை நோக்கி ஆராதனை செய்தால் அவர் நம் மேல் மனதுருகி இந்த ஏழு வகையான ஜாதி பிசாசுகளிடம் இருந்து நமக்கு ஒரு விடுதலையை அளித்து இளைப்பாறுதலை தர நம் தேவன் வல்லவராய் இருக்கிறார். 

3. பரம தகப்பனாய் மனதுருகி - மனம்திரும்பும்பொழுது இரக்கம் செய்வார் 

லூக்கா 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

இங்கே தகப்பன் அவனை கண்டு மனதுருகினார் என்று நாம் வாசிக்கிறோம். நமக்கும் பரம தகப்பன் ஒருவர் இருக்கிறார். அவர் எப்பொழுதும் நமக்கு மனதுருகிறவராக இருக்கிறார்.  எப்பொழுது ஒரு மனிதன் தன் தவறுகளை உணர்ந்து அதை நினைக்க ஆரம்பிக்கிறானோ கர்த்தர் அத்தருணத்தில் அவனுக்கு மனதுருகுகிறார் . தேவனை விட்டு நாம் தூரம் போக போக கேட்ட குமரனுக்கு சாபவித்தது போல நடக்க நேரிடும். கேட்ட குமரன் மனம் திரும்பி அவன் தகப்பனிடத்தில் வரும் பொழுது அவன் வாழ்ந்திருந்த நாட்களில் கிடைக்காத காரியம் ஆன உயர்ந்த வஸ்திரம், மோதிரம், பாத ரட்சை மற்றும் கொழுத்த கன்று அவனுக்காக அடிக்கப்பட்டது. இந்த நான்கும் யாருக்கு கிடைக்கும் என்றால் தன் பாவத்தை அறிக்கையிடுகிறவர்களுக்கு கிடைக்கிறது அவன் தேவனிடத்தில் இரக்கத்தை பெற்றுக்கொள்கிறான். 

4. மேய்ப்பனில்லாத ஆடுகளுக்கு மனதுருகி - உபதேசிக்க உங்களுக்கு கட்டளை கொடுக்கிறார் 

மாற்கு 9:32
அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.

மாற்கு 9:33
அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

மாற்கு 9:34
இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 9:36
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,

மத்தேயு 9:37
தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இயேசு அவர் சீஷர்கள் புறப்பட்டு போகிறதை அறிந்த ஜனங்கள் கால்நடையாய் அவர்களுக்கு முன்னே வந்தார்கள் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். அப்படிப்பட்ட வாஞ்சை நமக்கு இருக்கு இருக்க வேண்டும் ஆலயத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று தேவனை ஆராதிக்க வேண்டும். இயேசு அந்த ஜனங்களை கண்ட பொழுது மேய்ப்பன் இல்லாத ஆடுகளை போல இவர்கள் இருக்கிறார்களே என்று அவர்கள் மேல் மனதுருகி அநேக காரியங்களை குறித்து உபதேசிக்க தொடங்கினார். மேய்ப்பன் இல்லாத ஆடுகளை போல திரளாய் சிதறப்பட்டு இருக்கிறதை கண்ட இயேசு தம் சீஷர்களை நோக்கி அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் என்று சொன்னார் எனவே தான் இயேசு பரமேறி செல்வதற்கு முன்பாக நீங்கள் புறப்பட்டு போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேசம் அறிவித்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கட்டளை கொடுத்தார்.  

5. தம் உடன்படிக்கையின் நிமித்தம் மனதுருகி - ஒடுக்கத்தை மாற்றி நினைத்தருளுவார் 

II இராஜாக்கள் 13:23
ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபோடு செய்த உடன்படிக்கையின் நிமித்தம் மறந்து போகாமல் தம்முடைய முகத்தை விட்டு தல்லாமலும் அவர்களுக்கு கர்த்தர் மனதுருகி அவர்களை நினைத்தருளினார். தாவீதின் குமரனே எனக்கு இரங்கும் இயேசு அவனுக்கு இரங்கி அவனை சொஸ்தப்படுத்தினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய தேவன் உடன்படிக்கையை நினைக்கிற தேவன் இஸ்ரவேல் ஜனங்கள எகிப்திலே அடிமைத்தனத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் பொழுது அவர்கள் தேவனை நோக்கி கூப்பிட்டார்கள். கர்த்தர் அவர்கள் பிதாக்களுக்கு செய்த உடன்படிக்கையின் நிமித்தம் அவர்களை நினைத்தருளினார். அதுபோல நம்முடைய ஒடுக்கத்திலும் கர்த்தரை நோக்கி கூப்பிடும் பொழுது அவர் நமக்கு மனதுருகி நம்மை நினைத்தருளுவார். 







Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment