Wednesday, June 1, 2022

பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஜீன் மாத வாக்குத்தத்தம்

Word of God : Brother Micheal

Date : 01.06.2022 

II கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாய் இருக்கிறவர்களுக்கு இந்த ஜூன் மாதம் கர்த்தர் செய்ய போகிறவைகளை ஒரு ஐந்து விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம் 

நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் இருக்கும்பொழுது 

1. நிர்மூலம் ஆகாமல் காத்து - புதிய கிருபைகளை தருவார் 

புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

புலம்பல் 3:23
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

நாம் நிர்மூலம் ஆகாமல் இது வரையிலும் இருப்பது கர்த்தருடைய பெரிதான கிருபையே. ஒவ்வொரு நிமிடமும் நாம் நிர்மூலம் ஆகாமல் இருப்பது நம் தேவன் நமக்கு அதிகாலையில் நமக்கு தருகிற புதிய கிருபை மாத்திரமே. இந்த ஜூன் மாதம் நாம் நிர்மூலம் ஆகாதபடிக்கு புதிய கிருபைகளை தந்து தேவன் வழி நடத்தப்போகிறார். 

2. வனாந்திரத்தில் வழி உண்டாக்கி - புதிய காரியத்தை செய்வார் 

ஏசாயா 43:17
இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:

ஏசாயா 43:18
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 43:20
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

ஏசாயா 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மனுஷருடைய சுபாவம் பூர்மானவைகளையே சிந்தித்து கொண்டு இருக்கும், பழைய காரியங்களையே அசைபோட்டு கொண்டு இருக்கும். ஆனால் நம் ஆண்டவரோ நம்முடைய பழையவைகளை காணாமல் கிறுக்கி போட்டு நமக்கான புதிதான நன்மைகளை மாத்திரமே எழுதி வைத்து இருக்கிறார். நமக்குள் இருக்கிற ஆண்டவருக்கு பிரியம் இல்லாத பழைய காரியங்களை நாம் கலைந்து விட்டு இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாய் இருப்போம் என்று சொன்னால் நம்மால் கிரகிக்க கூடாத புதிய காரியத்தை கர்த்தர் இந்த மாதம் நமக்கு செய்வார். எனவே நீங்கள் முந்தினவைகளை நினைக்க வேண்டாம், பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் கர்த்தர் புதிய காரியத்தை செய்வார். இந்த மாதம் உங்களுக்கு ஒரு  தோன்றாத வழியை அவாந்திர வெளியிலே உண்டுபண்னுவார். 

3. உபத்திரவத்தின் குகையிலிருந்து தெரிந்து கொண்ட உனக்கு - புதிய மறைப்பொருள்களை தெரியப்படுத்துவார் 

ஏசாயா 48:6
அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.

ஏசாயா 48:7
அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.

ஏசாயா 48:8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

ஏசாயா 48:9
என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.

ஏசாயா 48:10
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

சங்கீதம் 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

சங்கீதம் 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

சங்கீதம் 78:4
பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

சங்கீதம் 78:5
அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

தானியேல் 2:18
அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.

தானியேல் 2:19
பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

நம் செவிகள் கர்த்தரின் வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதில்லை, நாம் துரோகம் செய்வோம் என்பதையும் தாயின் கர்ப்பத்தில் தொடங்கி இதுவரை அவர் சொல் கேளாமல் மீறுகிறவர்கள் என்பதையும் தேவன் அறிந்து வைத்துள்ளார் ஆயினும் அவர் நம்மை சங்கரிக்காமல் அவருடைய புகழ்ச்சியின் நிமித்தம் நம் மீது பொறுமையாய் இருக்கிறார். உபத்திரவத்தின் குகையில் நம்மை தெரிந்து கொண்ட நமக்கு கர்த்தர் இந்த மாதம் புதிதான மறைபொருள்களை நமக்கு தெரிவிப்பார். இது வரை அதை நாம் அறியவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை அது இப்பொழுதே தோன்றினதாய் இருக்கிறது. 

4. நம்மை நாம் சீர்படுத்திக்கொள்ளும் பொழுது - புதிய வாசல்களை திறப்பார் 

எரேமியா 26:8
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

எரேமியா 26:9
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.

எரேமியா 26:10
யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.

எரேமியா 26:11
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.

எரேமியா 26:12
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.

எரேமியா 26:13
இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.

தேவனுடைய  சமூகத்தில் நாம் உட்காரும்பொழுது கர்த்தர் நமக்கு புதிய வாசல்களை திறக்க வல்லவராய் இருக்கிறார். இந்த மாதம் நாம் நம்முடைய வழிகளையும், நம்முடைய கிரியைகளையும் ஆராய்ந்து அறிந்து நம்மை சீர்படுத்திக்கொண்டு கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்களாக இருப்போம் என்று சொன்னால் கர்த்தர் நமக்காக மனஸ்தாபப்பட்டு நமக்கு புதிய வாசல்களை திறப்பார். 

5. ஏக இருதயத்தை தந்தருளி - புதிய ஆவியைக் கொடுப்பார் 

எசேக்கியேல் 11:18
அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.

எசேக்கியேல் 11:19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

இந்த மாதம் நிமிடத்தில் இருக்கிற அருவருப்புகளை நம்மை விட்டு அகற்ற வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்பொழுது கர்த்தர் நமக்கு அவர் கட்டளைகளின் படி செய்து, அவர் நியாயங்களை கைக்கொண்டு அதன்படி செய்யும் ஒரு ஏக இருதயத்தை உங்களுக்கு தந்தருளி புதிய ஆவியை உங்களுக்குள் இந்த மாதம் கர்த்தர் வைப்பார். உங்கள் கல்லான இருதயத்தை அவர் உங்களிடத்தில் இருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை அவர் உங்களுக்கு அருளுவார். 









Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment