Sunday, June 12, 2022

பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal 

Date: 13.06.2022

யாத்திராகமம் 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

நாம் எதினாலே  விசேஷித்தவர்கள்? 

1. பரிசுத்த ஆவி நம் மேல் இருப்பதினால் 

லூக்கா 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.

லூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.

லூக்கா 2:27
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,

ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

இங்கே சிமியோன் ஏன் விசேஷித்தவர் என்று சொன்னால் அவர் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். ஏன் அவர் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்று சொன்னால் அவர் நீதியும், தேவ பக்தியும் உள்ளவராய் இருந்தார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல நம் மேலும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் அவர் தான் இந்நாள் வரையிலும் நமக்கு ஞானத்தையும், உணர்வையும், ஆலோசனையும், பெலனையும் அருளி நம்மை வழி நடத்திக்கொண்டு வருகிறார். சிமியோனை போல நீதியும், தேவ பக்தியோடு பரிசுத்த ஆவியானவரை தக்கவைத்து கொள்வோம் என்று சொன்னால் நாம் விசேஷித்தவர்களாக இருப்போம். 

2. கர்த்தருடைய கரம் நம்மேல் இருப்பதினால் 

எஸ்றா 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

இங்கே எஸ்றா தேவன் அருளிய நியாபரமானத்தில் தேறின வேதபாரகனாயிருந்தான் என்று நாம் வாசிக்கிறோம் கர்த்தருடைய கரம் எஸ்றாவின் மேல் இருந்ததினால் அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். என்று பார்க்கிறோம் அதே போல தேவன் நமக்கு அருளி இருக்கிற வேதத்திலே இரவும் பகலும் தியானித்து கர்த்தருடைய வார்த்தையிலே நாம் நிறைந்தவர்களாக இருப்போம் என்று சொன்னால் அன்றைக்கு எஸ்ராவின் மேல் இருந்த கர்த்தருடைய கரம் நம் மேலும் இருக்கும். நாம் ஜெபத்தின் மூலமாக கேட்கிற எல்லாவற்றிற்கும் நம்முடைய இராஜாதி இராஜா நமக்கு கொடுப்பார். ஆகாயத்து பட்சிகளை பார்க்கிலும் நாம் விஷேசதிவர்கள். அவர் கரம் நம்மோடு இருந்து நாள்தோறும் வழிநடத்தும். 

3. கர்த்தருடைய கிருபை நம்மேல் இருப்பதினால் 

ஆதியாகமம் 39:19
உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.

ஆதியாகமம் 39:20
யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

ஆதியாகமம் 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

கர்த்தர் யோசேப்போடே இருந்து அவன் மேல் கிருபை வைத்ததினால் சிறைச்சாலை தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும் படியாக செய்தார் என்று நாம் இங்கே பார்க்கிறோம். இன்றைக்கு நம் மேலும் கர்த்தர் கிருபை வைத்து இருக்கிறதினால் தான் அநேகர் கண்களுக்கு முன்பதாக நமக்கு தயவு கிடைக்க செய்து இந்நாள் வரையிலும் கர்த்தர் விசேஷித்த விதமாய் நம்மை வழிநடத்தி கொண்டு வருகிறார். நம்முடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடன் இருப்பது கர்த்தருடைய கிருபையே. நாம் இதுவரையிலும் நிர்மூலம் ஆகாமல் இருக்கிறது கர்த்தர் நம்மேல் வைத்து இருக்கிற கிருபையே. ஆகவே நாம் விசேஷித்தவர்கள்.  

4. கர்த்தருடைய முகத்தின் பிரகாசம் நம்மேல் இருப்பதினால் 

எண்ணாகமம் 6:23
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

எண்ணாகமம் 6:24
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

எண்ணாகமம் 6:25
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

எண்ணாகமம் 6:26
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

தேவனுடைய பிரகாசம் அவருடைய முகத்தின் பிரசன்னம் எப்பொழுதும் உங்களோடு கூட இருக்கும். இருளானது ஒரு பொழுதும் உங்களை அணுகுவதில்லை நாம் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறோம். அவருடைய முகத்தின் பிரகாசத்தை பிரதிபலிக்கும் விசேஷித்தவர்களாய் நாம் இருக்கிறோம். எழும்பி பிரகாசியுங்கள் கர்த்தருடைய ஒளி உங்கள் மேல் உதித்தது. 

5. கர்த்தருடைய அபிஷேகம் நம்மேல் இருப்பதினால் 

I சாமுவேல் 16:10
இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

I சாமுவேல் 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

I சாமுவேல் 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

I சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

கர்த்தருடைய ஆவியானவரை அச்சாரமாய் தேவன் நமக்கு தந்து இருக்கிறார். மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று இருக்கிற விசேஷித்தவர்களாக நாம் இருக்கிறோம்.  கர்த்தருடைய அபிஷேகம் நம்மை வழிநடத்தும், நுகத்தை முறிக்கும், உயர்த்தி வைக்கும், ஜெயத்தை கொடுக்கும், சகல சத்தியத்திற்குள் நம்மை நடத்தும், நம்மை உயிர்ப்பிக்கும். ஆகவே நாம் விசேஷித்தவர்கள் 








Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment