Sunday, June 19, 2022

உங்களை ஸ்திரப்படுத்த வல்லவர்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Kamal

Date: 19.06.2022

ரோமர் 16:26
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,

I பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

சர்வவல்லமையுள்ள நம் தேவன் நம்மை ஸ்திரப்படுத்த வல்லவராய் இருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் ஸ்திரமற்று இருந்தாலும் சரி சோர்ந்து போக வேண்டாம் அவர் நம் வாழ்க்கையை உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார். இன்றைக்கும் கர்த்தர் நம்மை எப்படியெல்லாம் ஸ்திரப்படுத்தப்போகிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம்.

1. நம் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் 

சங்கீதம் 10:17

கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

II தெசலோனிக்கேயர் 2:17

உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

I சாமுவேல் 1:15

அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

I சாமுவேல் 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

I சாமுவேல் 2:1

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

I சாமுவேல் 2:2

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

கர்த்தர் நம் வேண்டுதல்களையெல்லாம் கேட்டு இருக்கிறார் அவர் இருதயங்களை ஸ்திரப்படுத்துவார். உங்கள் இருதயம் வேதனையினாலும், துக்கத்தினாலும், மனக்லேசத்தினாலும், மனவடிவாக்குகிற கடினமான வார்த்தைகளினாலும் நிறைந்துள்ளதா இன்றைக்கு கர்த்தர் உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவார். அவர் உங்கள் இருதயத்தை தேற்றி எல்லா நல் வார்த்தைகளினாலும், நற்கிரியைகளினாலும் ஸ்திரப்படுத்துவார். அன்னாள் தன்னுடைய இருதயத்தை ஆண்டவர் சமூகத்திலே ஊற்றி ஜெபிக்கும் பொழுது கர்த்தர் தம் வார்த்தையின் மூலமாய் அன்னாளின் இருதயத்தை ஸ்திரப்படுத்தினார். பிள்ளையை ஈந்து இருதயம் மகிழ்ந்து களிகூரும்படியாக செய்தார். இருதயங்களை ஆராய்ந்து அறிந்து இருக்கிற தேவன் உங்கள் இருதயத்தின் பாரத்தை நீக்கி ஸ்திரப்படுத்துவார் சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தருக்காக காத்திருந்து திடமானதாய் இருங்கள். 

2. எருசலேமை ஸ்திரப்படுத்துவார் 

ஏசாயா 62:7

அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

ஏசாயா 62:8

இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

சங்கீதம் 51:18

சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

சகரியா 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

எருசலேமாகிய தம் சபையை ஸ்திரப்படுத்துகிறார். அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி அதை புகழ்ச்சியாக்கும் வரை அவரை அமர்ந்திருக்க விடாதிருங்கள் என்று நாம் இங்கே வாசிக்கிறோம். தேவனிடத்தில் நாம் வாஞ்சையாய் கேட்கும் பொழுது அவர் நம்மை ஸ்திரப்படுத்துவார். உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் அலங்கங்கள் சேதமடைந்து இருக்கிறதா தேவனிடத்தில் திரும்புங்கள் எருசலேமின் மதில்களை காட்டுகிறவராக இருக்கிறார். அவர் மன உருக்கத்துடனே எருசலேமினிடத்தில் திரும்புவார் அப்பொழுது உங்கள் சரீரமாகிய ஆலயத்தை கட்டி அதை ஸ்திரப்படுத்துவார். 

3. நம் வழிகளை ஸ்திரப்படுத்துவார் 

சங்கீதம் 17:5

என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

சங்கீதம் 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.

சங்கீதம் 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

என் கால்கள் வழுவாதபடிக்கு என்னுடைய நடைகளை உம்முடைய வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று தாவீது கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறார். ஆம் பிரியமானவர்களே நம்முடைய நடைகள் கர்த்தருடைய வழியில் ஸ்திரப்படவேண்டும். தேவ வசனத்தை நாம் கைக்கொள்ளும் பொழுது நம் வழிகள் தேவனுடைய வழியில் ஸ்திரப்படும். அவருடைய வசனம் நம் கால்களுக்கு தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கிறது. நம் கால்கள் வழுவாமல் இருக்க நம் பாதை தேவ வசனத்தில் நிலைத்திருக்க வேண்டும் அப்பொழுது கர்த்தர் நம் நடைகளை அவருடைய வழிகளில் எப்பொழுதும் இருக்க ஸ்திரப்படுத்துவார். 

4. நம் பெலனை ஸ்திரப்படுத்துவார் 

நாகூம் 2:1
சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.

சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

அப்போஸ்தலர் 1:8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

நாம் சென்று கொண்டு இருக்கிற இந்த உலகம் மிகவும் கூடியதாக இருக்கிறது. கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களினால் நிறைந்து காணப்படுகிறது. நம்மை எப்படி விழுங்கலாம் என்று பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல வகை தேடி சுற்றி திரிகிறான். இவை நம்மை மேற்கொள்ளாமல் இருக்க கர்த்தர் நமக்கு கொடுக்கிறதான ஆலோசனை என்னவென்றால் உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து என்கிறார். எது நம்முடைய பெலன் கர்த்தரே நம்முடைய பெலன் தாவீது இப்படியாய் சொல்கிறார் என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்புகூருவேன் என்று ஆம் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய பெலவீனங்களில் கர்த்தருடைய பெலன் நமக்கு பூரணமாய் விளங்கும். நம் பெலனாகிய கர்த்தரிடத்தில் ஸ்திரப்பட அவர் நமக்கு உதவி செய்வாய் எல்லா தீமைக்கும் விலக்கி காத்துக்கொள்வார். 

5. கிறிஸ்துவுக்குள் நம்மை ஸ்திரப்படுத்துவார் 

II கொரிந்தியர் 1:21
உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

II கொரிந்தியர் 1:22
அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

I சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் ஸ்திரப்பட்டு இருக்கும்பொழுது  எப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டாலும் சரி அதை மேற்கொள்ள முடியும். நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஸ்திரப்பட ஆவியானவர் துணை செய்கிறார். நம்மை அபிஷேகம் பண்ணினவர் அவரே, அவர் தாமே ஆவியென்னும் ஆசாரத்தை நமக்கு அருளி இருக்கிறார். தன் சொந்த ஜனங்களே தன்னை கல்லெறிய வகை தேடி நெருக்கப்படும் பொழுது தாவீது கர்த்தருக்குள்ளே தன்னை திடப்படுத்திக்கொண்டார் என்று வாசிக்கிறோம்.இன்றைக்கு நாமும் கிறிஸ்துக்குள்ளே ஸ்திரப்பட தேவ ஆவியானவர் நமக்கு துணை செய்வார். 







Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment