Monday, May 30, 2022

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 29.05.2022

லூக்கா 11:2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

நாம் கீழானவைகளை நாடாமல் மேலானவைகளையே நாடுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. நாம் பூமிக்குரியவர்கள் அல்ல நாம் மறுமைக்குரியவர்கள் ஆக இருக்கிறோம். கிறிஸ்துவ வாழ்க்கை ஒரு மறுமைக்குரிய ஜீவியமாக இருக்கிறது. நம்முடைய ஜீவியம் அப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், மரித்தோம் என்று இல்லாமல் நாம் தேவனுடைய சித்தத்திற்காக அழைக்கப்பட்ட சந்ததியாக இருக்கிறோம். பரமண்டலத்திலே சில காரியங்கள் இருக்கிறது அது பூமியிலேயும் செய்யப்படவேண்டும் என்பது நம்முடைய தேவனின் சித்தமாய் இருக்கிறது. நாம் எப்படியாய் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது என்பதை ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம். 

1. நாம் பரம அழைப்பை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது 

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

எபேசியர் 3:1

இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.

I பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

தேவனுடைய சித்தம் என்னவென்றால் நாம் எல்லோரும் பரலோகத்திற்கு வரவேண்டும். பரம அழைப்பு என்ற அந்த இலக்கை நோக்கி நம் ஜீவியம் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. தேவன் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். எனவே இந்த பூமியிலே இந்த பாடுகள் நமக்கு கொஞ்ச காலம் தான் இந்த பரம அழைப்பை நோக்கி நம்மை தேவன் வழி நடத்துவார். தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பரம அழைப்பிலே நிலை நிறுத்துவார். 

2. நாம் பரம ஈவாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது 

எபிரெயர் 6:4

ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

எபேசியர் 2:8

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

இந்த உலகத்திலே பிறந்த அனைவரும் தேவன் அருளின பரம ஈவாகிய இரட்சிப்பை பெற்று கொண்டு நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தமாய் இருக்கிறது. அதனால் இயேசு தம் சீஷர்களுக்கு  நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். என்று கட்டளை கொடுத்தார். இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை கர்த்தர் நமக்கு ஈவாய் கொடுத்து இருக்கிறார். 

3. நாம் பரம தரிசனத்தை காணவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது 

அப்போஸ்தலர் 26:19

ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.

அப்போஸ்தலர் 26:20

முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.

அப்போஸ்தலர் 26:21

இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 26:22

ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.

ஆதியாகமம் 26:23

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிற கர்த்தர் யாக்கோபிற்கு பரம தரிசனத்தை காண்பிக்கிறார். எப்படி என்றால் தேவனுடைய பரலோகத்தையும் அவர் வானத்திலே வீற்றிருக்கிறார் என்பதையும் பணிவிடைக்காரர்கள் தம்முடைய தாசனுக்கு பணிவிடை செய்வார்கள் என்பதையும் உலகத்திற்கும், பூமிக்கும் ஒரு மிகப்பெரிய ஏணி இருப்பதையும் தேவன் தரிசனத்தின் வாயிலாக யாக்கோபிற்கு கர்த்தர் காண்பிக்கிறார். இந்த தரிசனத்திற்கு பிற்பாடு கர்த்தர் யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றிவிட்டார். அதுபோலவே இன்றைக்கு உங்களுக்கும் கர்த்தர் பரம தரிசனத்தை காண்பிக்க விரும்புகிறார். 

4. நாம் பரம காரியங்களை அறிய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது 

யோவான் 3:10

இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?

யோவான் 3:11

மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை.

யோவான் 3:12

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

பூமிக்குகடுத்ததான காரியங்கள் நிறைய இருக்கிறது. பூமிக்குரிய காரியங்களை குறித்தே நாம் அதிகமாக கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். மார்த்தாள் பற்பல வேலைகளை குறித்து கவலைப்பட்டு கலங்கினாள் ஆனால் மரியாளோ தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள். உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்கள் பரமபிதா அறிந்து வைத்து இருக்கிறார். எனவே முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். பரம காரியங்களை குறித்து தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 

5. நாம் பரம இராஜ்யத்தை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது 

II தீமோத்தேயு 4:18
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்

இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தீமைகளை மேற்கொள்ள நமக்கு தேவனுடைய கரம் வேண்டும்,  அநேக காரியங்கள் நம்மை சூழ்ந்து நெருக்கிறதாய் இருக்கிறது. ஆனாலும் கர்த்தர் நமக்கு உதவி செய்வார் இந்த உலகத்தை ஜெயித்து தேவன் நம்மோடு கூட இருக்கிறார். என்ன துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போக வேண்டாம். கர்த்தர் உங்களை எல்லா  தீமையினின்றும் இரட்சித்து தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி உங்களை காப்பாற்றுவார். அவர் உங்கள் ஆத்துமாவை காப்பாற்றி முடிவில்லா அந்த பரம இராஜ்யத்திலே நம்மை கொண்டு வந்து சேர்க்க வல்லவராய் இருக்கிறார். 






Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 26

No comments:

Post a Comment