Tuesday, April 5, 2022

என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 03.04.2022

ஏசாயா 56:7

நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

1. வாதை அணுகாத வீடு 

யாத்திராகமம் 12:12

அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

யாத்திராகமம் 12:13

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் இருக்கும் வீடுகளில் வீட்டின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் அவர்கள் வீடுகளுக்கு அடையாளமாக இருந்தது. இன்றைக்கு நமக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மதிலாக இருக்கிறது. எந்த வாதையும் உங்களுக்கு நேரிடுவது இல்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை எல்லா வாதைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.  

2. வார்த்தையின் வீடு 

ரூத் 1:20

நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

ரூத் 1:22

இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

நகோமியும் ரூத்தும் அப்பதின் வீடாகிய பெத்லகேமில் மீண்டும் கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்பதை அறிந்து அவர் அந்த வார்த்தையின் வருகிறார்கள். வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள் என்று நாம் வசனத்திலே வாசிக்கிறோம். உங்களுடைய சபை இன்றைக்கு வார்த்தையின் வீடாய் நமக்கு இருக்கிறது. ஓவ்வொரு முறையும் நாம் இந்த வார்த்தையின் வீட்டுக்கு வரும் பொழுது கர்த்தர் தம் வார்த்தையாலே நம்மை தேற்றி நிறைவாக்கி அனுப்புகிறார். சோர்ந்து போய் இருக்கிற நேரங்களில், உடைந்து போய் இருக்கிற நேரங்களில், துக்கம் மிகுந்த நேரங்களிலே தேவனுடைய வார்த்தை நம்மை தேற்றும். 

3. வாசணையால் நிறைந்த வீடு 

யோவான் 12:2

அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.

யோவான் 12:3

அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

மரியாள் விலையேறப்பெற்ற நளதம் என்னும் தைலத்தினாலே இயேசுவின் பாதங்களை கழுவி தன்னுடைய தலைமயிரினாலே அவருடைய பாதங்களை துடைத்தாள். இங்கே வசனத்திலே சொல்லப்பட்டு இருக்கிறது அந்த வீடு முழுவதும் அந்த தைலத்தின் வாசனையால் நிறைந்து இருந்தது என்று, இயேசுவை அறிகிற அறிவின் வாசணை உங்கள் மூலமாய் கர்த்தர் வீச செய்வார். இயேசு உங்களுடனே இருக்கிற என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வாசணை. நீங்கள் இயேசுவுக்காக எழும்பி மனம் வீசுபவர்களாக தேவன் உங்களை மாற்றுவார்.  

4. வரங்களால் அலங்கரிக்கப்பட்ட வீடு 

அப்போஸ்தலர் 2:1

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:2

அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அப்போஸ்தலர் 2:3

அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அப்போஸ்தலர் 2:4

அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

அவர்கள் அங்கே மேல் வீட்டிலே ஒரு மனமாய் ஜெபத்தில் தரித்திருக்கும் பொழுது வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அப்பொழுது அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அன்றைக்கு எப்படி அப்போஸ்தலர்களை பற்பல வரங்களால் நிரப்பி தேவன் அநேக அற்புத அடையாளங்களை செய்தது போல இன்றைக்கும் தேவன் உங்களை ஆவியின் வரங்களால் நிரப்பி இந்த உலகத்திற்கு சாட்சியாய் நிறுத்த சித்தம் கொண்டுள்ளார். 

5. வேலியடைக்கப்பட்ட வீடு 

யோபு 1:10

நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

கர்த்தர் யோபுவையும், அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் வேலியடைத்து பாதுகாத்தார். அதேபோல உலகத்திலே இருக்கிற பிசாசின் தந்திரங்களுக்கும், சாத்தானின் கிரியைகளுக்கும் நீங்கலாக்கி உங்கள் வீட்டை வேலியடைக்கப்போகிறார். அவைகள் உங்களை இனி நெருங்கவே முடியாது. உங்களுடைய வீடு கர்த்தரால் வேலியடைக்கப்பட்ட வீடாய் இருக்கும். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment