Sunday, April 3, 2022

கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்

 

கன்மலை கிறிஸ்துவ சபை ஏப்ரல் மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal 

Date: 01.04.2022

சங்கீதம் 102:15
கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.

கர்த்தர் இந்த மாதம் உங்களுக்காக ஐந்து விதமான மகிமையான காரியங்களிலே வெளிப்பட திட்டம் வைத்து இருக்கிறார். கர்த்தர் சீயோனை கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார். 

1. மகிமையாய் வெற்றிசிறக்கப்பண்ணி - எகிப்தின் ஆவிகளிடம் இருந்து தப்புவித்து இரட்சிப்பார்

யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

யாத்திராகமம் 15:21
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

யாத்திராகமம் 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

யாத்திராகமம் 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

இந்த ஏப்ரல் மாதம் கர்த்தர் உங்களை மகிமையாய் வெற்றி சிறக்கபண்ணபோகிறார். இந்த மாதம் உங்களுக்கு ஒரு வெற்றியின் மாதமாக இருக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு முயற்சிகளுக்கும் கர்த்தர் மகிமையான வெற்றியை தருவார். எகிப்தின் ஆவிகளுக்கு தப்புவித்து உங்களை இரட்சிப்பார். 

2. மகிமையான கிரீடத்தை சூட்டி - உத்தம ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார் 

நீதிமொழிகள் 4:9
அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
 
ஏசாயா 28:5
அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,

சங்கீதம் 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

சங்கீதம் 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்.

சங்கீதம் 21:3
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

மகிமையான கிரீடத்தை இந்த ஏப்ரல் மாதம் கர்த்தர் உங்களுக்கு வைத்து இருக்கிறார். உங்களை வேண்டாம் என்று சொல்லி ஒடுக்கியவர்கள் முன்பாக கர்த்தர் உங்களுக்கு மகிமையான சிங்காசனத்தை வைத்து இருக்கிறார். இந்த ஏப்ரல் மாதம் நம் தேவனாகிய கர்த்தர் உத்தம ஆசீர்வாதங்களோடு உங்களுக்கு எதிர்க்கொண்டு வருகிறார். 

3. மகிமையான அற்புதத்தை செய்து - உங்கள் மிலாற்றை முறித்துப்போடுவார் 

யோவான் 2:7
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.

யோவான் 2:8
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.

யோவான் 2:9
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

யோவான் 2:10
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

யோவான் 2:11
இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா 9:3
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.

ஏசாயா 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி ஒரு மகிமையான அற்புதத்தை கர்த்தர் கானாவூரின் கலியாணத்திலே செய்தார். அதுபோல மகிமையான அற்புதத்தை நம் மத்தியிலும் கர்த்தர் செய்யவல்லவராய் இருக்கிறார். இனி உங்கள் வாழ்க்கை இருளாய் இருப்பதில்லை, உங்களை ஈனப்படுத்தியவர்கள் முன்பதாக கர்த்தர் இந்த மாதம் உயரத்தில் வைப்பார். 

4. மகிமையாக பிரகாசிக்க பண்ணி - தேற்றி நடத்துவார் 

ஏசாயா 66:11
நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;

ஏசாயா 66:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

ஏசாயா 60:2
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

ஒரு மகைமையான பிரகாசம் இந்த மாதம் உங்களை சூழ்ந்து இருக்கும். ஒரு தாய் தேற்றுவது போல கர்த்தர் தேற்றி இந்நாள் வரையிலும் உங்களை நடத்தி வந்தது. கர்த்தருடைய மகிமை உங்கள் மேல் காணப்படும்.  

5. கர்த்தருடைய மகிமையான பலம் - உங்களை விடுவிக்கும் 

சங்கீதம் 89:17
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.

யாத்திராகமம் 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.

யாத்திராகமம் 6:2
மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

யாத்திராகமம் 6:3
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

யாத்திராகமம் 6:4
அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.

யாத்திராகமம் 6:5
எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.

யாத்திராகமம் 6:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

யாத்திராகமம் 6:7
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

கர்த்தருடைய மகிமையான பெலத்தினால் அவர் உங்கள் கொம்பை உயரப்பண்ணுவார். கர்த்தருடைய பலத்த கை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்காக அசைவாடப்போகிறது. கர்த்தர் சரவல்லமையுள்ள தேவன் அவருடைய பலத்த கை உங்களுக்கான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும், உங்கள் சுமைகளை நீக்கி விடுவிக்கும், உங்களுக்காக யுத்தம் செய்து சத்துருக்களை முறியடிக்கும். 






For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment