Sunday, April 10, 2022

இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்

 

Kanmalai Christian Chruch

Word of God : Brother Kamal

Date: 10.04.2022

சகரியா 9:9
சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

யோவான் 12:12
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,

யோவான் 12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

சங்கீதம் 24:7
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.

அவர் எதற்காக உன்னிடத்தில் வருகிறார் ?

1. உன் குறைவுகளை நிறைவாக்கும்படியாக 

யோவான் 2:2
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

யோவான் 2:3
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

யோவான் 2:7
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.

யோவான் 2:8
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.

யோவான் 2:9
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

யோவான் 2:10
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

கானாவூர் கலியாணத்திலே திராட்சைரசம் குறைவுபட்டபொழுது இயேசு தாமே தண்ணீரை திராட்சை ரசமாக்கி  அங்கே தன்னுடைய முதலாம் அற்புதத்தை செய்து அங்கே இருந்த குறைவுகளை நிறைவாக்கினார் இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் உள்ள குறைவுகளை நிறைவாக்க இயேசு வந்து இருக்கிறார். கர்த்தர் தாமே உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 

2. உன் பாவங்களை மன்னித்து இரட்சிக்கும் படியாக 

லூக்கா 19:5
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.

லூக்கா 19:8
சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

லூக்கா 19:9
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

லூக்கா 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

வெளி 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

இயேசு எரிகோவிற்கு வரும் பொழுது சகேயு என்னப்பட்ட மனுஷன் இயேசுவை காண வகை தேடினான் தான் குள்ளமான மனுஷனாய் இருந்தபடியால் மிகுந்த ஜனக்கூட்டத்தில் அவரை காண  ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். அப்பொழுது அங்கு வந்த இயேசு அண்ணாந்து பார்த்து சகேயுவே உன் வீட்டில் நான் இன்றைக்கு தங்க வேண்டும் என்று சொன்னார். அவன் சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். சகேயு இயேசுவை நோக்கி என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் மேலும் ஒருவனிடத்தில் நான் அநியாயமாக வாங்கி இருந்தால் அதை நாளத்தனையாய் திருப்பி கொடுக்கிறேன் என்று தன் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாகிறார். இயேசு அதற்கு இந்த வீட்டுக்கு இன்றைக்கு இரட்சிப்பு வந்தது என்றார். இன்றைக்கும் நீங்கள் இயேசுவுக்காக உங்கள் இதயக்கதவை திறக்கும்பொழுது அவர் இயேசு ராஜா உங்களிடத்தில் வருவார், உங்களிடத்தில் தங்குவார். உங்கள் பாவங்கள் மீறுதல்கள் எல்லாவற்றையும் மன்னித்து இரட்சிப்பார். 

3. உன் வேதனைகளை நீக்கும்படியாக 

மாற்கு 5:25
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,

மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

மாற்கு 5:28
ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 

மாற்கு 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.

மாற்கு 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

பன்னிரண்டு வருடமாக பெரும்பாடுள்ள ஸ்த்ரீ தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் இருக்கும்பொழுது இயேசு குறித்து கேள்விப்பட்டு நான் அவருடைய வஸ்திரத்தை சுகமாவேன் என்று சொல்லி மிகுந்த ஜனக்கூட்டத்துக்குள் இயேசுவின் வஸ்திரத்தின் நுனியை தொட்டாள். தொட்டமாத்திரத்திலே அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசு தன்னிடத்தில் இருந்து ஒரு வல்லமை புறப்பட்டதை அறிந்து என்னை தொட்டது யார் என்று கேட்டார் அதற்கு சீஷர்கள் திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். அப்பொழுது அந்த ஸ்த்ரீ பயந்து எல்லாவற்றையும் அறிவித்தால் உடனே இயேசு மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்து, நீ இப்பொழுது சமாதானத்தோடே போ உன் வேதனை நீங்கி சுகமாய் இரு என்கிறார். இன்றைக்கும் வெகு நாட்களாக வேதனையின் மத்தியில் சென்று கொண்டு இருக்கிறீர்களா உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் உங்கள் வேதனைகளை எல்லா நீக்கி நீங்கள் சுகமாய் இருக்கும்படியாக. உன் சுகவாழ்வு சீக்கிரத்திலே துளிர்க்கும்.

4. உன் வாழ்க்கையில் உள்ள பெருங்காற்றை ஓயப்பண்ணும்படியாக 

மத்தேயு 14:24
அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.

மத்தேயு 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

மத்தேயு 14:26
அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

மத்தேயு 14:27
உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

மத்தேயு 14:28
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

மத்தேயு 14:29
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.

மத்தேயு 14:30
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.

மத்தேயு 14:31
உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

மத்தேயு 14:32
அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

ஏசாயா 54:11
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

சீஷர்கள் சென்று கொண்டு இருந்த பெருங்காற்றின் நிமித்தமாக பெரிய அலைகளினால் அலைவுப்பட்டது அப்பொழுது அந்த நாலாம் சாமத்தில் இயேசு கடலின் மீது நடந்து அவர்கள் இடத்திற்கு வந்தார். அப்பொழுது அவர்கள் பயந்து ஆவேசம் என்றனர். இயேசு அதற்கு நான் தான் திடன்கொள்ளுங்கள் என்றார். அப்பொழுது பேதுரு ஆண்டவரே நீரே ஆனால் நான் கடலின் மீது நடக்க எனக்கு கட்டளையிடும் என்றார். இயேசு வா எனவே பேதுரு படவை விட்டு இறங்கி அவரிடத்தில் கடலின் மீது நடந்து சென்றான் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டபொழுது இயேசு கையை பிடித்து தூக்கிவிட்டார். அவர்கள் படவில் ஏறினவுடன் காற்று அமர்ந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் கூட பெருங்காற்றினால் அடிபட்டு அலைமோதும் சூழ்நிலையில் இருக்கலாம். சோர்ந்துபோக வேண்டாம். அந்த பெருங்காற்றை ஓயப்பண்ணும்படியாக இயேசு ராஜா உங்களிடத்தில் இன்றைக்கு வருகிறார். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்கள், பிரச்சினைகள் யாவற்றையும் கர்த்தர் இன்றைக்கு அமரப்பண்ணுவார். நாம் செய்ய வேண்டியது ஒரு மட்டுமே சந்தேகப்படாமல் அவரை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசத்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment