Monday, March 28, 2022

பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள்

 

Kanmalai Christian Church

Date: 27.03.2022

Word of God: Brother Micheal

யாத்திராகமம் 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் விசேஷித்தமானவர்கள். நாம் எப்படிப்பட்ட விசேஷித்தமானவர்கள் என்பதை ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே காணலாம். 

1. விசேஷித்த ஒய்வு நாள் - உங்களை சுத்திகரிக்கும் 

லேவியராகமம் 16:30
கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.

லேவியராகமம் 16:31
உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.

லேவியராகமம் 16:32
அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,

லேவியராகமம் 16:33
பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

லேவியராகமம் 16:34
இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

எரேமியா 13:27
உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

விசேஷித்த ஒய்வு நாள் ஒரு மனுஷனுக்கு எதற்காக  கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் வாழ்நாளிலே தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு அதை விட்டுவிடும் பொழுது கத்தரிடத்திலே அவன் இரக்கம் பெருகிறவனாக இருக்கிறான். மறைமுகமான பாவங்கள், இருதயத்திலே செய்கிறதான பாவங்கள் எல்லாவற்றையும் அறிக்கையிட்டு விசேஷித்த ஓய்வுநாளை ஆசாரிக்கக்கடவர்கள் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. நாம் நம்முடைய அருவருப்புகளில் இருந்து சுத்திகரிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. எருசலேமே நீ சுத்திகரிக்கப்படமாட்டாயோ என்று கர்த்தர் கேட்கிறார். நம்முடைய வழியை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

2. விசேஷித்த ஆவி (ஞானம் ) - உன்னை அதிகாரியாக்கும் 

தானியேல் 5:14
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.

தானியேல் 5:15
இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.

தானியேல் 5:16
பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.

தானியேல் 6:3
இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.

தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறது, காரியங்களை செய்து முடிக்க கூடிய தேவ புத்தியும், வெளிச்சமும் உங்களிடத்தில் இருக்கிறது, விசேஷித்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட விசேஷித்த ஞானம் உள்ளவர்களை கர்த்தர் அதிகாரியாக வைப்பார். மற்றவர்கள் உங்களை அற்பமாக எண்ணலாம் கர்த்தருடைய பார்வையில் நீங்கள் விசேஷித்த ஞானம், ஆவி உடையவர்கள் அவர் உங்களை உயர்த்தி அதிகாரியாக மாற்றுவார். தானியேலை உயத்தின தேவன் உங்களையும் உயர்த்துவார். 

3. விசேஷித்த ஆசரிப்பு  - சகல நுகத்தடியை நீக்கி உன்னை கடாட்சிக்கும் 

யோவேல் 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஏசாயா 58:3
நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

ஏசாயா 58:4
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.

ஏசாயா 58:5
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.

யோவேல் 2:16
ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.

யோவேல் 2:17
கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

யோவேல் 2:18
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

யோவேல் 2:19
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள், விசேஷித்த ஆச்சரிப்பை கூறி கர்த்தருடைய ஆலயத்தில் கூடி நாம் கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும். இந்த உபவாச நாட்களில் பிசாசானவன் கொண்டு வருகிற சோதனைகளை எல்லாவற்றில் இருந்து பரிசுத்த ஆவியானவரின் பெலத்தினால் ஜெயம் கொள்வோம். நாம் பரிசுத்த உபவாச நாளை நியமித்து விசேஷித்த ஆசாரிப்பை கூறுவோம் என்று சொன்னால் வசனம் சொல்லுகிறபடியாக கர்த்தர் சகல நுகத்தடிகளையும் உடைத்து போட்டு, உங்கள் எல்லா நிந்தைகளில் இருந்தும் நீக்கி கர்த்தர் உங்களை கடாட்சிப்பார். 

4. விசேஷித்த விசுவாசம் - உன் தேவைகளை சந்திக்கும் 

மத்தேயு 6:25
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

மத்தேயு 6:28
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

மத்தேயு 6:29
என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:30
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

மத்தேயு 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

உங்களுக்கு இன்னது தேவை என்று எதை குறித்தும் கவலைபடாதிருங்கள். உங்களுக்கு இன்னது தேவை என்பதை நம்முடைய கர்த்தர் அறிந்து இருக்கிறார். அற்பவிசுவாசியாய் நாம் இராமல் விசேஷித்த விசுவாசியாய் இருப்போம் என்று சொன்னால் நம் தேவைகள் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார். 

5. விசேஷித்த கிருபை - உங்களை பயன்படுத்தும் 

II கொரிந்தியர் 9:14
உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்.

II கொரிந்தியர் 9:15
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.





For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment