Tuesday, March 15, 2022

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?

 

Kanmalai Christian Church 

Word of God : Pastor Jachin Selvaraj 

(Apostolic Christian Assembly, Purasaiwalkam) 

Date: 15.03.2022

சங்கீதம் 27:1

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

சங்கீதம் 27:2

என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

சங்கீதம் 27:12

என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.

சங்கீதம் 27:13

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

சங்கீதம் 27:13

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

தாவீது இப்படியாய் சொல்லுகிறார் கர்த்தர் எனக்கு வெளிச்சமும்,  எனக்கு ஜீவனின் பெலனும் ஆனவராய் இருக்கிறார் நான் யாருக்கு பயப்படுவேன் என்று சொல்லுகிறார்.  ஏன் என்றால் நம் வாழ்க்கையில் பயம், திகில் போன்ற சூழ்நிலைகள் நிச்சயமாகவே வரும். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தாலும், கோலியாத்தை வென்று இருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலும் பயம் இருந்து இருக்கிறது. என்னை நெருக்க வருகிறவர்கள் இடறிவிழுவார்கள் என்று தாவீது சொல்லுகிறார். அது போல உங்களையும் நெருக்குகிறார்களா பயப்படவேண்டாம் கர்த்தர் அவர்களை இடறிவிழும்படியாக செய்வார். கர்த்தர் நமக்கு ஜெயத்தை கொடுப்பார். அவர் உங்கள் சத்துருக்கள் இஷ்டத்திற்கு உங்களை ஒப்புக்கொடுக்க கர்த்தர் ஒருபொழுதும் விடமாட்டார் என்பதை முழுநிச்சயமாய் விசுவாசியுங்கள். நமக்கு உயர்வு வரவேண்டும் என்று சொன்னால் நாம் இந்த சோதனைகளை சந்தித்துதான் ஆக வேண்டும். அவர் உங்களை சோதித்து அறிந்து உங்களை கன்மலையின் மேலே உயர்த்திவைப்பார். 

ஆதியாகமம் 22:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22:2

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆதியாகமம் 22:10

பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

ஆதியாகமம் 22:11

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

தேவன் ஆபிரகாமை சோதித்தார். அவருடைய நேசகுமாரரான ஈசாக்கை தகனபலியாக பலியிடு என்றார். ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து கர்த்தர் சொன்ன மலைக்கு போய் தன் புத்திரனை பலியிட செல்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் இத்தனை நாட்களாக ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறோம் அனால் திடீர் என்று ஒரு பரீட்சை வரும்பொழுது நம் விசுவாசம் எப்படி இருக்கிறது அந்த விசுவாசத்தில் உறுதியாய் நிற்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்டதான சோதனை காலங்களை கடந்து போக வேண்டி வரும் ஆனாலும் நம் நாவில் அவ்விசுவாச வார்த்தை ஒருபோதும் வந்து விடக்கூடாது. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து சோதனையை சகிக்கும் பொழுது நிச்சயமாகவே நமக்கு ஜெயம் வரும். 

யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

யோபு தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்தவர் ஆண்டவர் கொடுத்த பிள்ளைகளை ஒரே நாளில் எடுத்தார். தன் ஆசீர்வாதங்களை எல்லாம் ஒரே நாளில் இழந்தார்.  ஆனாலும் யோபு சொல்லுகிறார் நான் போகும் வழியை அவர் அறிவார் தேவன் என்னை சோதித்த பின்பு சுத்தப்பொன்னாக நான் விளங்குவேன் என்று சொல்லுகிறார். ஏன் எனக்கு இதுநாள் வரையிலும் என் ஜீவியத்திலே ஒரு ஜெயத்தை என்னால் காண முடியவில்லை என்று கலங்கி கொண்டு இருக்கிறீர்களா சோறுந்துபோகவேண்டாம். உங்கள் விசுவாசப்பாதையை கர்த்தர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நிச்சயம் ஒருநாள் உங்களை பொன்னாக விளங்கப்பண்ணுவார். 

யோவான் 6:6
தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

யோவான் 6:7
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

இயேசு தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும் பிலிப்புவை சோதித்தார். நம் வாழ்க்கையிலும் ஆண்டவர் தம்முடைய அற்புதத்தை நிகழ்த்தப்போவது நிச்சயம் ஆனாலும் அவர் உங்களை சோதித்து அறிவார். ஆனால் நாமோ இனி எதுவும் நமக்கு நடக்காது என்று சோர்ந்துபோய் விடுகிறோம். இயேசுவின் பல அற்புதங்களை பார்த்த பிலிப்புவுக்கு நம்பிக்கை இல்லை இவ்வளவு பேருக்கு உணவு அளிப்பது எப்படி சாத்தியம் ஆகும் என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் நிச்சயம் எனக்கு அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்க வேண்டும். தேவனால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் விசுவாசத்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். 

லூக்கா 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

லூக்கா 22:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.

லூக்கா 22:33
அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.

 லூக்கா 22:34
அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

I பேதுரு 1:6
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

I பேதுரு 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

பேதுரு இங்கே தன் சுயவார்த்தையை பேசுகிறார். உன் விசுவாசம் குறைந்து போகாதபடிக்கு நான் உனக்காக வேண்டிக்கொண்டேன் என்று இயேசு சொன்னார் ஆயினும் பேதுரு ஆண்டவர் நான் உம்மோடு கூடவே இருப்பேன் என்று சொல்லுகிறார். அதற்கு இயேசு இன்றைக்கு சீவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று சொன்னார். ஆண்டவருக்கு தெரியும் நான் இன்றைக்கு வைக்கும் சோதனையில் பேதுரு தோற்கத்தான் போகிறார் என்று ஆயினும் உன் விசுவாசம் குறைந்து போகக்கூடாதபடி நான் உனக்காக வேண்டி கொண்டேன் என்று சொன்னார். நம் வாழ்க்கையில்கூட நாம் ஆண்டவரை நம்புகிறோம் ஆனாலும் சில சோதனைகள் உள்ளாக செல்லும்பொழுது நாம் அவரை மறுதலித்துவிடுகிறோம் நம் சுயம் வெளிப்பட்டு விடுகிறது.  

யாக்கோபு 1:2
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,

யாக்கோபு 1:3
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

பலவிதமான சோதனைகளில் நீங்கள் அகப்படும்போழுது அப்படிப்பட்ட சூநிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். வருகிற போராட்டங்களை கண்டு பயந்து போகாமல் அதிலே ஜெயம் பெற வேண்டும் 

லூக்கா 4:2
நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

லூக்கா 4:3
அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.

லூக்கா 4:13
பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

லூக்கா 22;28
மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

இங்கே நாம் காணுகிறோம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த பிறகு நாற்பது நாட்கள் தம் ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆவியானவரால் வனாந்திரத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் நாற்பது நாட்களும் பிசாசினால் சோதிக்கப்பட்டார். இயேசு அவனை வேத வசனத்தை கொண்டு ஜெயித்தார். பிசாசுக்கு தெரிந்துவிட்டது இவரை நம்மால் மேற்கொள்ளமுடியாது என்று அறிந்து அவரை விட்டு சில காலம் விலகி போனான். மேலும் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடு கூட நிலைத்து நின்றவர்கள் நீங்களே என்று. எனவே வாழ்க்கையில் வருகிற போராட்டங்களில், பிரச்சினைகளில், பயந்து போகாமல் இருக்க வேண்டும் நமக்கு ஜெயத்தை கொடுக்கிற ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். அவர் எப்படி ஜெயம் பெற்றாரோ நமக்கும் ஜெயம் கொடுத்து, நம்மையும் ஜெயம் காயவைக்க அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார். 

யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.






For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment