Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 6.2.2022
ரூத் 3:11
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
அவர் என்னென்ன காரியங்கள் நமக்கு செய்வார் ?
1. ஜாதிகளிடத்தில் செய்யப்படாத அதிசயம் செய்து பயங்கரமான காரியத்தை செய்வார்
I சாமுவேல் 3:11
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
யாத்திராகமம் 34:9
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
நம் தேவனாகிய கர்த்தர் தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு இனிவரும் நாட்களிலே ஒரு புதிய காரியத்தை செய்யப்போகிறார் அதை கேட்கிறவர்களுடைய காதுகளில் தொனித்து கொண்டு இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயத்தை கர்த்தர் உங்களுக்கு செய்யப்போகிறார். அவர் உங்களோடு இருந்து செய்யும் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்த காரியம் இதுவரையிலும் தடையாக உங்களுக்கு கைகூடி வராமல் வாய்க்காமல் இருக்கிறதோ அவற்றை கர்த்தர் இனி வாய்கபண்ணபோகிறார்.
2. கூடாரத்தின் சிறையிருப்பை திருப்பி இரக்கம் செய்வார்
எரேமியா 30:18
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
ஓசியா 2:21
அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
ஓசியா 2:22
பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.
ஓசியா 2:23
நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
அவர் உங்கள் வீட்டின் சிறையிருப்பை திருப்பி இரக்கம் செய்வார் உங்களுடைய அரமனை முன்பு இருந்தது போல நிலைபெற்று இருக்கும். கர்த்தர் யாக்கோபின் கூடாரத்தின் சிறையிருப்பை திருப்பினார். அது போல நம்முடைய வாசஸ்தலத்தில் கூடாரத்தின் சிறையிருப்பையும் அவர் திருப்புவார். பாழாய் கிடந்ததை எல்லாம் மீண்டும் கர்த்தர் எடுத்து முன்பு இருந்தது போல நிலைப்படுத்தப்போகிறார். உங்கள் வீட்டிற்கு , பிள்ளைகளுக்கு கர்த்தர் மறுமொழி கொடுப்பார். இதுவரைக்கும் இரக்கம் பெறாமல் இருந்தவர்களுக்கு கர்த்தர் இன்றைக்கு இறங்குவார்.
3. சகாயம் செய்து நீதியின் வலது கரத்தினால் தாங்குவார்
எரேமியா 15:11
உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
ஏசாயா 41:8
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
ஏசாயா 41:9
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
நம் தீங்கான நாட்களிலும், நெருக்கத்தின் காலத்திலும் அவர் உங்களுக்காக சத்துருக்களுக்கு எதிர்ப்பட்டு உங்களுக்கு செய்வேன் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறார். மெய்யாகவே கர்த்தர் உங்களுக்கு சகாயம் செய்யப்போகிறார். அவர் நம்மை பூமியின் கடையாந்திரத்தில் இருந்து எடுத்து நம்மை தெரிந்து கொண்டார். அவர் உங்களை வெறுத்து விடவில்லை அவர் உங்களுக்கு சகாயம் செய்து நீதியின் வலது கரத்தினால் உங்களை தாங்குவார்.
4. நன்மை செய்து உன்னை திருப்தியாக்குவார்
ஆதியாகமம் 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
ஆதியாகமம் 32:10
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
சங்கீதம் 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
கர்த்தர் வெறும் கோலும், கையுமாய் இருந்த யாக்கோபிற்கு நன்மை செய்து இரண்டு பரிவாரங்களை உடையவராக தன் தகப்பன் தேசத்திற்கு திரும்பி வரச்செய்தார். அதே போல தான் நாமும் வெறும் கையை வனாந்திரத்தில் இருந்த நம்மை கர்த்தர் ஆசீர்வதித்து நன்மை செய்து இருக்கிறார். அவர் உங்கள் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து குணமாக்கி நம் பிராணனை அழிவுக்கு விலக்கி பாதுகாக்கிறார். உங்களை கிருபையினாலும், இரக்கத்தினாலும் முடிசூட்டி உன் வாயை நன்மையினால் திருப்தியாக்குவார். கழுகுக்கு சமமாக உங்கள் வயதை திரும்ப வாலவயது போலாக கர்த்தர் செய்வார்.
5. கீர்த்தியும், புகழ்ச்சியும் உண்டாகச்செய்து அதிகாரியாய் மாற்றுவார்
செப்பனியா 3:19
இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்.
ஆதியாகமம் 41:40
நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.
ஆதியாகமம் 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
ஆதியாகமம் 41:42
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,
ஆதியாகமம் 41:43
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.
ஆதியாகமம் 41:44
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.
ஆதியாகமம் 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment