கன்மலை கிறிஸ்துவ சபை பிப்ரவரி மாத வாக்குத்தத்தம்
Word of God: Brother Micheal
Date: 01.02.2022
யோபு 8:21
இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
கர்த்தர் இந்த மாதம் உங்கள் வாயை நகைப்பினாலும் உங்களுடைய உதடுகளை கெம்பிரத்தினாலும் நிரவுவார். அவர் இந்த மாதம் நிரப்புவார் என்பதை ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம்.
1. உன் களஞ்சியத்தை நிரப்புவார்
நீதிமொழிகள் 3:10
அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
உபாகமம் 6:11
நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,
உபாகமம் 6:12
நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
எப்படி இந்த மாதம் கடக்கப்போகிறோம் என்று எண்ணி கொண்டு இருக்கிற உங்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார் உங்கள் களஞ்சியங்கள் எல்லாம் நிரம்பும்படியாக செய்வார். சகல வஸ்துக்களாலும் உங்கள் வீடு நிரம்பி இருக்கும். நீங்கள் திருப்தியாய் இந்த மாதம் புசிப்பீர்கள். நீங்கள் காணாத அதிசயத்தை இந்த மாதம் காண்பீர்கள்.
2. உன் பாத்திரங்களை நிரப்புவார்
யோவான் 2:7
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
II இராஜாக்கள் 4:5
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
II இராஜாக்கள் 4:6
அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
கர்த்தர் இந்த மாதம் உங்கள் பாத்திரங்களை எல்லாம் நிரப்புவார். நீங்கள் மீதம் எடுக்கத்தக்கதாய் கர்த்தர் உங்கள் பாத்திரங்களை எல்லாம் இந்த மாதம் நிரப்புவார். உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும். கர்த்தர் இன்றைக்கு ஒலிவ மாற எண்ணெய்யை உங்கள் வீடுகளில் வார்க்கிறார். உங்கள் வீட்டின் கதவை பூட்டி ஜெபம் பண்ணும்பொழுது உங்களுக்குள்ளே ஒரு அபிஷேக எண்ணெய்யை தேவன் உண்டு பண்ணுவார். அவை நிரம்பி வழியத்தக்கதாய் கர்த்தர் செய்யப்போகிறார்.
3. உன் வாழ்க்கை படகை நிரப்புவார்
லூக்கா 5:4
அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
லூக்கா 5:5
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
லூக்கா 5:6
அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
லூக்கா 5:7
அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
பேதுருவை போல வெகு நாட்களாக பிரயாசப்பட்டும் உங்கள் வாழ்க்கை படகானது வெறுமையாய் இருக்கிறதா சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் உங்கள் படைகளை அமிழ்ந்து போகத்தக்கதாக நிரப்புவார். நீங்கள் தேடின நாட்களுக்கும், நீங்கள் பிரயாசப்பட்ட நாட்களுக்கும், நீங்கள் அழுத நாட்களுமாக இருந்த உங்கள் வாழ்க்கை படகை கர்த்தர் நிரப்புவார்.
4. உன் வாயை நிரப்புவார்
சங்கீதம் 81:10
உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
யோபு 23:4
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
எரேமியா 1:6
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
எரேமியா 1:7
ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
எரேமியா 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
எரேமியா 1:10
பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
இந்த மாதம் உங்கள் வாயை விரிவாய் திறக்கும் பொழுது நிரப்புவார். தன் வாயை விரிவாய் திறக்கிறவர்களுக்கு காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் கர்த்தர் நிரப்பப்போகிறார். நீங்கள் உங்கள் வாயை விரிவாய் திறக்கும் பொழுது கர்த்தர் தம் வார்த்தையை உங்கள் வாயில் வைப்பார்.
5. உன்னை சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்புவார்
ரோமர் 15:12
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
ரோமர் 15:13
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
கர்த்தரையே நம்ம்பிக்கையாய் கொண்டு இருக்கிற உங்களை இந்த மாதம் நம்பிக்கையின் தேவன் தாமே எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment