Kanmalai Christian Church
Word of God : Pastor Jachin Selvaraj
(Apostolic Christian Assembly, Purasaiwalkam)
Date: 13.02.2022
சங்கீதம் 42:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:6
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்று நம் ஆத்துமா நமக்குள்ளே கலங்கி கொண்டு இருக்கிறது, தாகமாய் இருந்து கொண்டு இருக்கிறது, ஒரு சில நேரங்களில் சரீர பெலவீனங்களும் நம்மை வாட்டி வதைக்கின்றது. சில நேரங்களில் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஆலயத்திற்கு செல்ல விடமால் தடையாக வந்து நிற்கின்றது ஆனால் ஆத்துமாவோ சொல்கிறது நீ ஏன் கலங்குகிறாய், திகைத்து கொண்டு இருக்கிறாய் தேவனை நோக்கி காத்திரு. நமக்கு எப்படிப்பட்ட போராட்டங்கள் இருந்தாலும் நம்முடைய உள்ளான மனுஷனோ தேவனையே நோக்கி கொண்டு இருக்க வேண்டும். தேவன் பேரிலேயே தாகமாய் இருக்க வேண்டும். கர்த்தர் உங்களை கலக்கத்தில் விடமாட்டார். கர்த்தர் உங்களுக்கு காரியத்தை கைகூடிவரப்பண்ணுவார். நீங்கள் நம்பி கொண்டு இருக்கிற காரியம் அவரால் வரும். நம்முடைய ஆத்துமாவானது தேவனையே சார்ந்து இருக்க வேண்டும்.
1. நம்மை பெலப்படுத்தி கலக்கத்தை போக்கி தன் சித்தம் செய்யவைப்பார்
I இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.
இங்கே எலியா தீர்க்கதரிசி தன்னுடைய அவருடைய வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய போராட்டம். ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் ஆனால் ஒரு சந்தர்ப்பம் வந்த பொழுது அவருக்குள்ளே கலக்கமும், பயமும் வந்து ஒரு சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு இருந்தார். இந்த ஒரே எலியா ஒரு பயங்கரமான காரியத்தை நம்முடைய கூட்டத்திற்கு செய்து விட்டான் என்று ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள். இதனை அறிந்த எலியா பயந்து ன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டு போனார்.
இதேபோல தான் நம்முடைய வாழ்க்கையிலும் சில வார்த்தைகளை கேட்கும் பொழுது நம் ஆத்துமா கலக்கம் அடைய செய்யும், நம் உள்ளத்தை நொறுக்க செய்து விடும். அப்பொழுது நம் இருதயம் உடைந்து போய் விடக்கூடாது அந்த நேரத்தில் தான் நாம் தேவனை தேட வேண்டும். என் காரியத்தை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து விடுகிறேன் என்று நம் உள்ளான மனுஷன் சொல்ல வேண்டும். எலியா நான் சாக வேண்டும் என்னை எடுத்து கொள்ளும் என்று சூரைச்செடியின் கீழ் படுத்து விட்டார் ஆனாலும் கர்த்தர் எலியாவை கைவிடவில்லை எலியா எழுந்த பார்த்த பொழுது தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அங்கே கர்த்தர் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ போக வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று சொன்னார்.
I இராஜாக்கள் 19:10
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
கர்த்தர் எலியாவை பார்த்து நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு என்று சொல்லுகிறார்.
நம் ஆத்துமா ஆண்டவரை தேடட்டும் பிரச்சினைகள் வரும், போராட்டங்கள் வரும், அந்த நேரத்தில் நம்முடைய ஆத்துமா கலங்கி போய் விடக்கூடாது, நம் ஆத்துமா துவண்டு போய்விடக்கூடாது என்னதான் ஆனாலும் சரி கர்த்தர் நிச்சயமாய் ஜெயத்தை உங்களுக்கு கொடுப்பார். கர்த்தர் நிச்சயமாய் வெற்றியை காணவைப்பார். கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவுபடாது.
2. வாழ்கைபுயலால் ஏற்படும் கலக்கத்தை போக்கி தைரியப்படுத்துவார்
அப்போஸ்தலர் 27:22
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
அப்போஸ்தலர் 27:10
மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.
பவுலோடு காவலில் வைக்கப்பட்டு இருந்த வேறு சிலரும் கைதிகளாக ரோமாபுரிக்கு போகிறார்கள். அப்படி போகிற பிரயாணித்திலே அவர்கள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். பவுல் தீர்க்கதரிசனமாக இந்த யாத்திரையில் கப்பலுக்கு மாத்திரம் அல்ல நம்முடைய ஜீவனுக்கும் மிகுந்த சேதம் ஏற்படும் என்பதை நான் காண்கிறேன் என்று சொல்லி எச்சரித்தார். அந்த எச்சரிப்பின் வார்த்தையை பிரயாணத்தில் இருக்கிற அனைவர்க்கும் பவுல் சொல்லுகிறார். ஆனால் நூற்றுக்கு அதிபதி அந்த எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். அவர்கள் பிரயாணம் செய்தபொழுது யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று மோதி கப்பல் அகப்பட்டு கொண்டது. காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 27:19
மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.
அப்போஸ்தலர் 27:20
அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.
அப்போஸ்தலர் 27:21
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.
அப்போஸ்தலர் 27:22
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று:
அப்போஸ்தலர் 27:24
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
நம்முடைய வாழ்க்கையிலும் கூட போராட்டங்கள் வரும் பொழுது நம்மையும் அது திசைமாறி போக வைத்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய கால்கள் வேண்டாத இடத்திற்கு போய் விடுகிறது. நம்முடைய வாழ்க்கையை திசை திருப்பும்படியாக புயல்கள் உருவாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் தம் ஊழியக்காரரை வைப்பார். நாம் சோர்ந்து போய் விடக்கூடாது தேவனை நோக்கி காத்திருங்கள். இங்கே அப்போஸ்தலராகிய பவுல் எல்லோரையும் தைரியப்படுத்துகிறார் உங்கள் ஒருவருக்கும் பிராண சேதம் வராது என்று தைரியப்படுத்துகிறார். நாம் வழி தவறிப்போனாலும் கர்த்தர் வழி இதுவே என்று சொல்லி சரியான பாதையில் நம்மை நடத்திடுவார் உங்களுக்கு ஒரு சேதமும் ஏற்படாது எனவே வாழ்கைபுயல்களை கண்டு பயப்படாமல் தைரியமாய் இருங்கள்.
3. தோல்வியின் நேரத்தில் கர்த்தரை தேடும்பொழுது கலக்கத்தை போக்கி ஜெயத்தை தருவார்
யோசுவா 7:10
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
யோசுவா 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
இங்கே இஸ்ரவேலருக்கு பயங்கரமான தோல்வி ஏற்பட்டுவிட்டது. அந்த தோல்வியினால் யோசுவா முகங்குப்புற விழுந்து கிடக்கிறார். இவ்வளவு ஜெயத்தை கண்டு வந்த நாங்கள் என் இதில் தோல்வி அடைந்தோம். ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. ஒருவன் செய்த பாவத்தின் நிமித்தம் இஸ்ரவேலர் அனைவர்மேலும் கர்த்தருடைய கோபம் மூண்டது. ஆயியின் மனுஷர் முன்பாக வெட்கப்பட்டு திரும்பி வந்தார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று யோசுவாவும் இஸ்ரவேல் மூப்பரும் கர்த்தருடைய பெட்டி முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு முன்பதாக தங்களை தாழ்த்தினார்கள். நாம் விழுந்து போகிற சமயங்களில் கர்த்தரை தேடி நம்மை ஒப்புக்கொடுப்போம் என்று சொன்னால் கர்த்தர் நிச்சயமாகவே நமக்கு ஜெயத்தை கொடுக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.
4. நசுக்கப்படுவதினால் ஏற்படும் கலக்கத்தை போக்கி விடுதலையை கொடுப்பார்
யாத்திராகமம் 6:5
எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
யாத்திராகமம் 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
ஆதியாகமம் 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
ஆதியாகமம் 15:19
கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
ஆதியாகமம் 15:20
ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
ஆதியாகமம் 15:21
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
நெகேமியா 9:8
அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
எகிப்தின் பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை நசுக்கினான். கர்த்தர் இஸ்ரவேலின் பெருமூச்சை கேட்டு அவர் தம்முடைய உடன்படிக்கையை நினைத்தார். பார்வோன் நான் கர்த்தரை அறியேன் நான் இஸ்ரவேலரை போக விடுவதில்லை என்று தன் இருதயத்தை கடினப்படுத்தினான், இஸ்ரவேலருக்கு முன்னிலும் அதிக வேலையை சுமத்தி அவர்களை கஷ்டப்படுத்தினான், அப்படிப்பட்ட கல்நெஞ்சம் கொண்ட பார்வோனின் இருதயத்தை கர்த்தர் அவன் தன் கையாலே போக விடும்படியாக பலத்த செய்கைகளை செய்வேன் என்று கர்த்தர் கூறினார்.
நம்முடைய வாழ்க்கையிலும் பார்வோனை போல யார் யார் நிற்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை கர்த்தர் மாற்றுவார் கர்த்தர் உங்கள் பெருமூச்சை கேட்பார். அவர் உங்களுக்கு செய்வேன் என்று சொன்ன உடன்படிக்கையை கர்த்தர் நினைவுகூறுவார்.
5. கர்த்தரிடத்தில் நாம் ஒப்புக்கொடுக்கும் பொழுது ஆத்துமாவின் கலக்கத்தை போக்குவார்
லூக்கா 23:28
இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
லூக்கா 23:29
இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
லூக்கா 23:30
அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
லூக்கா 23:31
பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
லூக்கா 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
நமக்காக இயேசு கிறிஸ்து எல்லா பாடுகளையும் ஏற்றுக்கொண்டார். நமக்காக எல்லா பாடுகளையும் அவர் சிலுவையில் சுமந்து கொண்டார். நமக்காக எல்லா பாரங்களை தம் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு பாடுகளின் வழியாய் போய்தான் ஆகவேண்டும், நிந்தையை சுமந்துதான் ஆகவேண்டும், ஆனால் எல்லாவற்றையும் தாங்கி கொள்வதற்கு அவருடைய ஆத்துமா தன்னை தைரியப்படுத்திக்கொண்டது நம்முடைய வாழ்க்கையிலே நாம் சந்திக்கிற பிரச்சினைகளை பார்க்கும் பொழுது சோர்ந்து போய் விடாதீர்கள் தேவன் நிச்சயமாய் ஜெயத்தை கொடுப்பார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment