Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 30.01.2022
எரேமியா 46:27
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே;
1. இருதயத்திலே உண்டான கலக்கத்தை நீக்கி சத்ருக்களின் சரிக்கட்டுதலை காணவைப்பார்
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
யோவான் 14:2
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
சங்கீதம் 61:2
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
சங்கீதம் 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
சங்கீதம் 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்று கொண்டு இருந்தாலும் சரி இனி வருகிற நாட்களில் கர்த்தர் உங்களுக்காக ஒன்றை ஆயத்தம்பண்ணப்போகிறார். உங்கள் இருதயம் கலங்காது இருப்பதாக எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார். உங்களுக்கு எட்டாத பெரிய காரியத்தை செய்வார். இருந்தயத்தின் கன்மலையாகிய தேவன் உங்களுக்கு எப்பொழுதும் பங்காய் இருப்பார். உங்கள் இருதயத்தை உறுதிப்படுத்தி உங்கள் சத்துருக்களின் சரிக்கட்டுதலை நீங்கள் காண்பீர்கள்.
2. ஆத்துமாவிலே உண்டான கலக்கத்தை நீக்கி இரட்சிப்பை கட்டளையிடுவார்
யோவான் 12:27
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
சங்கீதம் 42:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:6
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
சங்கீதம் 42:11
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
கலங்குகின்ற உங்கள் ஆத்துமாவை கர்த்தர் தேற்றுவார். உங்கள் கலக்கத்தின் வேளையிலே நீங்கள் இன்னும் இன்னுமாய் தேவனை துதிக்கும்பொழுது, கர்த்தருக்காக காத்திருக்கும் பொழுது உங்கள் முகத்திற்கு இரட்சிப்பை கட்டளையிடுவார்.
3. ஆவியிலே உண்டான கலக்கத்தை நீக்கி தெளிந்த புத்தியுள்ள ஆவியை தருவார்
யோவான் 11:33
அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
யோவான் 11:34
அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
II தீமோத்தேயு 1:6
இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
II தீமோத்தேயு 1:7
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
உங்கள் ஆவி துயரம் அடைந்து கலங்கி கொண்டு இருக்கிறதா கலங்க வேண்டாம் உங்கள் ஆவியை கலங்க பண்ணுகிற காரியங்களை எல்லாம் கர்த்தர் நீக்கி போடுவார். தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் தெளிந்த புத்தியுள்ள ஆவியை இனிவருகிற நாட்களில் கொடுப்பார்.
4. நினைவிலே உண்டான கலக்கத்தை நீக்கி அவருடைய வழியிலே உங்களை நடத்துவார்
தானியேல் 7:28
அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
நினைவிலே நமக்கு ஒரு கலக்கம் ஏற்படும்பொழுது நம் முகம் வேறுபடுகிறது என்று வசனம் சொல்லுகிறது, சில காரியங்களை நாம் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து நினைவிலே கலக்கம் அடைகிறோம். நம்முடைய நினைவுகள் அவருடைய நினைவுகள் அல்ல பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே நம் வழிகளைப்பார்க்கிலும் கர்த்தரின் வழிகளும், நம்முடைய நினைவுகளைப்பார்க்கிலும் அவர் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. கர்த்தர் உங்கள்பேரில் வைத்திருக்கிற நினைவுகள் பெரிதானது ஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கலங்க வேண்டாம்.
5. கண்ட தரிசனத்திலே உண்டான கலக்கத்தை நீக்கி மறைபொருளை வெளிப்படுத்துவார்
தானியேல் 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
தானியேல் 4:6
ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
தானியேல் 4:7
அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.
தானியேல் 4:8
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
தானியேல் 4:9
சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.
நாம் காணுகின்ற தரிசனங்கள் நம்மை கலக்கம் அடையச்செய்யக்கூடும் ஆனாலும் கலங்க வேண்டாம் தானியேலுக்கு பரிசுத்த தேவர்களின் ஆவி இருந்ததால் தான் யாராலும் அர்த்தம் சொல்ல முடியாத சொப்பனத்தின் மறைபொருளை விளக்க முடிந்தது அதே போல் கர்த்தர் உங்களுக்கும் தரிசனத்தின் மூலமாக மறைபொருளை வெளிப்படுத்துவார் அதன் மூலமாக வரும் காரியங்களை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கும் பொருட்டாக கர்த்தர் இவற்றை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment