Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 09.01.2022
II சாமுவேல் 14:8
ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக்குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.
ராஜா தம் ஜனத்தை பார்த்து, தம் மந்தையை பார்த்து, தம்முடைய பிள்ளைகளை பார்த்து நீ உன் வீட்டுக்கு போ உன் காரியத்தை குறித்து உத்தரவு கொடுப்பேன் என்கிறார். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி ஆண்டவர் நமக்கு உத்தரவு கொடுத்து இருக்கிறார்.
1. சாலேமின் ராஜா - நமக்கு சமாதானத்தை தருவார்
ஆதியாகமம் 14:19
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
ஆதியாகமம் 14:19
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
எபிரெயர் 7:1
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
எபிரெயர் 7:2
இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
நமக்கு ஒரு சாலேமின் ராஜா இருக்கிறார். நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் சாலேமின் ராஜா குடி இருக்கிறார். நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் குடி இருக்கிறவர் நீதியின் ராஜா அவர் சமாதானத்தின் ராஜா. இந்த சாலேமின் ராஜா நமக்கு நீதியின் ராஜாவாக இருப்பார். அவர் எதிர்கொண்டு வந்து உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு சீக்கிரத்திலே சமாதானத்தை தரப்போகிறார். உன்னதத்தின் ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்பப்போகிறார்.
2. ராஜாதி ராஜா - நமக்கு ஜெயத்தை கொடுப்பார்
I தீமோத்தேயு 6:15
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார்; அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
I தீமோத்தேயு 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
வெளி 17:14
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
வெளி 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
நம்முடைய தேவன் ராஜாதி ராஜா, ஏகசக்ராதிபதி, கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவர் உங்களோடு இருந்து எல்லாவற்றிலேயும் உங்களை ஜெயம் கொள்ள வைப்பார். யுத்தத்தில் வல்ல ராஜா நம்மோடு இருக்கிறார் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவும், கலங்கவும் வேண்டாம் அவர் உங்களுக்கு ஜெயத்தை தருவார். ஒருவரும் உங்களுக்கு முன்பதாக எதிர்த்து நிற்பதில்லை
3. சேனைகளின் கர்த்தராகிய ராஜா - நம் பாவங்களை நிவர்தியாக்குவார்
ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
ஏசாயா 6:6
அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,
ஏசாயா 6:7
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
நம் ராஜா சேனைகளின் கர்த்தராகிய ராஜா உங்களுக்கு சொல்லுகிறதாவது உங்கள் அக்கிரமம் நீங்கி உங்கள் பாவங்கள் எல்லாம் நிவர்தியானது. அவர் நம் பாவங்களை எல்லாம் நீக்கி நம்மை சுத்திகரிப்பார்.
4. யூத ராஜா - தன் இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொள்வார்
யோவான் 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
யோவான் 19:20
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
யோவான் 19:21
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
யோவான் 19:22
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
பிலாத்து சிலுவையின் மேல் ஒரு விலாசத்தை எழுதி போடுவித்தான் அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி நீர் இதை இப்படியாக எழுதாமல் யூதருடைய ராஜாவாக இயேசு தன்னை கூறி கொண்டதாக எழுத சொன்னான் ஆனால் பிலாத்துவோ பிரதியுத்தரமாக நான் எழுதினது எழுதினதே என்றான். தேவன் நமக்கும் ஒரு விலாசத்தை எழுதி வைத்து இருக்கிறார், உங்களை குறித்த ஒரு திட்டத்தை வைத்து இருக்கிறார் அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. கல்வாரியிலே நமக்காக நம்முடைய யூத ராஜா தன் சொந்த ரத்தத்தை ஈந்து நம் எல்லாரையும் மீட்டு கொண்டு இருக்கிறார். அவர் உங்களை மீட்டு கொள்வார்.
5. இயேசு ராஜா - நமக்கு அற்புதம் செய்து சந்தோஷத்தை தருவார்
லூக்கா 19:31
அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
லூக்கா 19:32
அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
லூக்கா 19:33
கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
லூக்கா 19:34
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
லூக்கா 19:35
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
லூக்கா 19:36
அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
லூக்கா 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
லூக்கா 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
இயேசு ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் இயேசு தங்களுடைய வாழ்க்கையிலே செய்த அற்புதங்களை குறித்து சந்தோஷப்பட்டு கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்து பாடினார்கள் அவர் தான் நம் இயேசு ராஜா நமக்காக நம்மை தேடி இந்த உலகத்திற்கு வந்தார் நம்மை இரட்சித்து அவர் அண்டையிலே நம்மை சேர்த்து கொண்டார். நம்முடைய வாழ்க்கையிலும் கூட அநேக அற்புதங்களை அவர் செய்து இருக்கிறார் அவர் தான் இயேசு ராஜா நாம் அவரை சந்தோஷமாக பாடி துதித்து அவர் நாமத்தை உயர்த்துவோம். நம் இயேசு ராஜா நமக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment