Saturday, January 15, 2022

அவர் அவனைக் கண்டுபிடித்தார்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date: 13.01.2022


உபாகமம் 32:10
பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.

பாழான நிலத்திலும் வெறுமையான அவாந்திர வெளியிலும் இருந்த நம்மை தேவன் கண்டெடுத்தார். வெறுமையாய் சென்ற யாக்கோபை தேவன் இருபரிவாரங்களுக்கு சொந்தக்காரராக தன்னுடைய தகப்பன் தேசத்துக்கு திரும்பி வரப்பண்ணினார். அது போல தான் வெறுமையாய் இருந்த நம்மை அவர் தேடி வந்து நம்மை கண்டுபிடித்தார். யாக்கோபை கர்த்தர் எப்படி அவாந்திர வெளியில் ஒன்றும் இல்லாத பொழுது நடத்தினாரோ அதேபோல வெறும்கையாய் இருக்கிற உங்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறதாவது அவர் உங்களை நடத்துவார். 

1. அவர் உன்னை நடத்துவார் 

உபாகமம் 32:11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

உபாகமம் 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

சங்கீதம் 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

சங்கீதம் 31:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

சங்கீதம் 31:3
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

கழுகு தன் குஞ்சுகளை தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல அவர் நம்மை வழி நடத்திவருகிறார், அந்நிய தேவர்கள் அல்ல அவர் ஒருவரே இந்நாள் வரையிலும் நம்மை வழிநடத்தி வருகிறார். கர்த்தருடைய ஆவி உங்களில் அசைவாடுகிற படியினாலே அவர் உங்களை நடக்க வேண்டிய வழியில் நடத்தி கொண்டு வருகிறார். அவர் உங்களை வழிகாட்டி நடத்தப்போகிறார். 

2. அவர் உன்னை உணர்த்துவார் 

II நாளாகமம் 6:29
எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

II நாளாகமம் 6:30
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

II நாளாகமம் 6:31
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

கர்த்தர் யாக்கோபை பலவித சூழ்நிலைகளில் உணர்த்தி, உணர்த்தி நடத்தினார். அவர் நம்மையும் உணர்த்தி நடத்த வல்லவராய் இருக்கிறார். தேவன் உணர்வுள்ள ஆவியை நமக்கு தந்தருளி உணர்த்தி நேர்த்தியாய் நம்மை வழிநடத்தி உங்களை வழிகளுக்கு தக்கதாக பலன் அளிப்பார். 

3. அவர் உன்னை கண்மணியைப்போல காத்தருள்வார் 

சங்கீதம் 17:8
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

சங்கீதம் 17:9
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

சங்கீதம் 17:10
அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.

சங்கீதம் 17:11
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.

சங்கீதம் 17:12
பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

சங்கீதம் 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.

சகரியா 2:8
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.

தேவன் நம்மை இந்த கொடிதான் கொள்ளை நோயின் காலங்களிலும் கண்ணின் மணியை போலை நம்மை காத்தருளினார். அவர் உங்களை துன்மார்க்கருக்கும், சூழ்ந்து கொள்ளுகிற பகைவர்களுக்கும் விலக்கி செட்டையின் நிழலில் வைத்து காப்பாற்றுவார். கர்த்தருடைய கண்கள் உங்கள் மேல் நோக்கமாய் உள்ளது அவர் உங்களுக்காக எழுந்தருளுவார். அவர் உங்கள் சத்துருக்களுக்கு எதிரிட்டு வந்து அவர்களை மடங்கடித்து உங்கள் ஆத்துமாவை தம்முடைய பட்டயத்தினாலே தப்புவிப்பார். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.







For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment