Kanmalai Christian Church
Word of God : Brother Micheal
Date:02.01.2022
உபாகமம் 31:8
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
கர்த்தர் தாமே உனக்கு முன்பாக போகிறவர் அவர் உன்னுடனே கூட இருப்பார் அவர் இந்த ஆண்டு உங்களை விட்டு விலகுவதும் இல்லை உங்களை கைவிடுவதும் இல்லை இந்த 2022 ஆண்டு எப்படி இருக்குமோ என்று சொல்லி நீங்கள் பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த ஆண்டு மூன்று விதமான இடத்திற்கு நீங்கள் போக வேண்டியதாய் இருக்கும். இந்த மூன்று இடங்களிலும் கர்த்தர் தாமே உங்களுக்கு முன்பதாக சென்று உங்களோடு இருப்பார்.
1. கலீலேயாவுக்கு நாம் போகும் பொழுது - அவர் உனக்கு முன்பாக போய் வாக்குத்தத்தம் அளித்து உங்களுடனே கூட இருப்பார்
மத்தேயு 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
மத்தேயு 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
மத்தேயு 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
மத்தேயு 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
சீக்கிரமாய் கலீலேயாவுக்கு போங்கள் இயேசு ர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள் அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள் மரியாள் சொன்னாள். இந்த வருடம் நாம் சீக்கிரமாய் ஆலயத்திற்கு வரவேண்டும் என்ற ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். நம்முடைய இயேசு வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரம் உடையவராய் இருக்கிறார். கலீலேயாவுக்கு வாருங்கள் அவர் உங்களுக்கு ஆத்துமாக்களை தருவார், அவர் கட்டளைகளை உங்களுக்கு காண்பிப்பார், அவர் உங்களுக்கு அதிகாரம் கொடுப்பார், சதா காலங்களிலும் உங்களோடு இருப்பார் கலீலேயாவுக்கு வந்தால் தான் வாக்குத்தத்தம். சீஷர்கள் அங்கே வந்தார்கள் குறிக்கப்பட்ட அந்த மலையிலே அவர்கள் நின்றார்கள், இயேசு தாமே அவர்களுக்கு சொல்லி அனுப்பிய வார்த்தை இன்றைக்கு வரைக்கும் ஆத்துமாக்கள் கொள்ளை கொள்ளையாய் கர்த்தர் தமது சபையிலே சேர்த்து கொண்டு இருக்கிறார். அன்றைக்கு அவர் சொன்ன அந்த ஒரு வாரத்தை நம்மையும் அவர் அண்டையிலே கொண்டு சேர்த்து வைத்து இருக்கிறதே உங்களையும் கர்த்தர் மாற்றுவார், புதிதும் கூர்மையான பற்கள் கொண்ட எந்திரமாய் மாற்றுவார். நீங்கள் கலீலேயாவுக்கு வாருங்கள் கர்த்தர் உங்களை பயன்படுத்துவார். நீங்கள் கலீலேயாவுக்கு வந்தால் கர்த்தர் வாக்குத்தத்தை அளித்து உங்களோடு கூட சதா காலமும் இருப்பார்.
2. ஓரேபுக்கு நாம் போகும் பொழுது - அவர் உனக்கு முன்பாக போய் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்
யாத்திராகமம் 17:5
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
யாத்திராகமம் 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
அடுத்ததாக நீங்கள் போக வேண்டிய இடம் ஓரேப் அங்கு உங்களுக்கு முன்பதாக கர்த்தர் கன்மலையின் மேல் நிற்பார். நீங்கள் உங்களுடைய கோலை எடுத்து கொண்டு வர வேண்டும். தாகத்தோடு வந்த உங்களை உன் தாகத்தை தீர்த்து உன்னை அனுப்பும் மட்டும் கர்த்தர் கன்மலையின் மேல் நிற்பார். உங்கள் எல்லா தேவைகளும் ஒரேபிலே சந்திக்கப்படும் கர்த்தர் உங்களுக்கு முன்பதாக போவார்.
3. ரெப்பாயீம் பள்ளத்தாக்கிற்கு நாம் போகும் பொழுது - அவர் உனக்கு முன்பாக புறப்பட்டு உன்னை வெற்றிசிறக்கப்பண்ணுவார்
II சாமுவேல் 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
II சாமுவேல் 5:23
தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
II சாமுவேல் 5:24
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
II சாமுவேல் 5:25
கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
அடுத்ததாக நாம் போக வேண்டிய இடம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கு தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு நீ நேராய் போகாமல் அவர்களுக்கு பின்னாலே சுற்றி முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரே இருந்து அவர்கள் மீது பாய வேண்டும் என்று ஆலோசனை அளிக்கிறார். நமது வாழ்க்கையிலே யுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆண்டவர் நமக்கு முன்பதாக புறப்பட்டு விடுவார். அவர் பொய் நமக்கு ஆலோசனையும், அடையாளத்தையும் நமக்கு கொடுப்பார். கர்த்தர் உங்களுக்கு முன்பதாக புறப்பட்டு இருப்பார். கர்த்தர் சொல்லுகிற பிரகாரம் போவீர்கள் என்று சொன்னால் இந்த உங்களை வெற்றி சிறக்கப்பண்ணுவார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment