கன்மலை கிறிஸ்துவ சபை 2022 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம்
Word of God : Brother Micheal
Date: 01.01.2022
எரேமியா 31:4
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
கர்த்தர் இந்த ஆண்டு கட்ட விரும்புகிறார் நீங்கள் கட்டுகிற வண்ணமாக அல்ல கர்த்தர் ஒன்றை உங்களோடு கூட இருந்து கட்ட விரும்புகிறார். கடந்த ஆண்டு சொன்னது போல கர்த்தர் எல்லாவற்றையும் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார். இந்த ஆண்டு கர்த்தர் ஒரு ஐந்து காரியங்களை உங்களோடு கூட சேர்ந்து சிலவற்றை உங்கள் வாழ்க்கையிலே கட்டும்படியாய் விரும்புகிறார். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய் என்று பரிசுத்த ஆவியானவர் சபைக்கு திருவுளம்பற்றுகிறார்.
1. சபையை கட்டுவார் - திறவுகோல்களை தருவார்
மத்தேயு 16:17
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
மத்தேயு 16:18
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
மத்தேயு 16:19
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
சங்கீதம் 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்.
I கொரிந்தியர் 15:55
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
இந்த ஆண்டு கர்த்தர் தன் சபையை கட்டுவார். உங்களை கொண்டு கட்டுவிப்பார், இதற்குள்ளாக நுழைய என்னுகிற ஓநாய்களையும், நரிகளையும், கர்த்தர் ஒன்றும் இல்லாமல் தவிடுபொடியாக்குவார். அநேக பாதாளத்தின் வல்லமைகள் மேற்கொள்ள வந்தன ஆனால் ஒன்றும் நம்மை மேற்கொள்ள முடியவில்லை. சபை மக்களை கர்த்தர் இந்த ஆண்டு கட்டுவிப்பார். இந்த ஆண்டு நமக்கு பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோள்களை நமக்கு தருவார். நீங்கள் பூலோகத்தில் கட்டுவது எதுவோ அது பரலோகத்திலே கட்டப்பட்டு இருக்கும். நீங்கள் பூலோகத்தில் கட்டவிழ்ப்பது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும். பாதாளத்தின் வல்லமைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தினை கர்த்தர் இந்த ஆண்டு உங்களுக்கு தருவார்.
2. குடும்பத்தை கட்டுவார் - கிறிஸ்து இயேசு அஸ்திபாரமாய் இருப்பார்
I சாமுவேல் 2:35
நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.
மத்தேயு 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:25
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
I கொரிந்தியர் 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
I கொரிந்தியர் 3:11
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
சங்கீதம் 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128:2
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
கர்த்தர் இந்த ஆண்டு குடும்பத்தை கட்டி எழுப்புவார். இந்த ஆண்டு நம் வீட்டை கட்டி அனைவரையும் கனி கொடுக்கிறவர்களாக வைக்க போகிறார். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, மோதினாலும் உங்கள் வீடு விழுவதில்லை ஏன் என்றால் அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டு இருக்கிறது. நீங்கள் அசைக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் உங்களுக்கு அஸ்திபாரமாக இருப்பார். இந்த ஆண்டு கிறிஸ்து இயேசுவே உங்களுக்கு அஸ்திபாரமாக இருப்பார்.
3. பாழான ஸ்தலங்களை கட்டுவார் - பெயர் பெற வைப்பார்
ஏசாயா 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
ஏசாயா 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
ஏசாயா 61:4
அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.
ஏசாயா 44:26
நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
தலை முறை தலை முறையாக கட்டப்படாமல் இருக்கிற பாழான ஸ்தலங்களை கட்டும்படி கர்த்தர் உங்கள் கைகளை அபிஷேகம் பண்ணுவார். இந்த ஆண்டு கர்த்தர் உங்களை பாழான ஸ்தலங்களை கட்டும்படியாக வைத்து மறுரூபம் ஆக்குவார். கர்த்தர் பாழான ஸ்தலங்களை எடுப்பித்து உங்களை சமாதானமாய் குடியேறச்செய்வார்.
4. ஆலயத்தை கட்டுவார் - நன்மையினால் பரம்பச்செய்வார்
I நாளாகமம் 17:12
அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
I நாளாகமம் 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
சகரியா 1:16
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
சகரியா 1:17
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment