Saturday, January 22, 2022

இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother D. Kamal

Date: 20.01.2022


யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

யோசுவா 10:12
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

யோசுவா 10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.

யோசுவா 10:14
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

யோசுவா 4:14
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

எவரையும் மேன்மைப்படுத்த கர்த்தருடைய கரத்தினால் ஆகும். எல்லோர் கண்களுக்கு முப்பதாகவும் கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்துவார், உங்களை ஒடுக்கினவர்கள், உங்களை அற்பமாய் எண்ணியவர்கள், உங்களை சிறுமைப்படுத்தினவர்கள், சொந்த ஜனங்களுக்கு முன்பதாக கர்த்தர் உங்களை மென்பாய்ப்படுத்துவார், யோசுவாவை இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பதாக மேன்மைப்படுத்திய கர்த்தர் உங்களையும் இன்று மேன்மைப்படுத்தப்போகிறார் எனவே சோர்ந்து போகவேண்டாம். ஒருவரும் உங்களுக்கு முன்பதாக எதிர்த்து நிற்பதில்லை கர்த்தர் மோசேயோடு இருந்தது போல உங்களோடும் இருப்பார், பலங்கொண்டு திட மனதாய் இருங்கள். 

கர்த்தர் இன்றைக்கு கண்களுக்கு முன்பதாக என்ன செய்வார் என்பதை ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம்.  

1. கண்களுக்கு முன்பாக பெரிய அடையாளங்களை செய்வார் 

யோசுவா 24:17
நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

உபாகமம் 6:22
கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,

உபாகமம் 6:23
தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களின் கண்களுக்கு முன்பதாக அவர்களின் அடிமைதனவீடாகிய எகிப்தில் பெரிய அடையாளங்களை செய்து அவர்களை புறப்படச்செய்து அவர்களின் பிதாக்களுக்கு ஆணையிட்டு கொடுத்த தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போனார், இன்றைக்கு நம்முடைய வாழ்விலும் அடிமைத்தன பாவ வாழ்க்கையில் இருந்து நம்மை விடுவித்து இரட்சிக்க தேவன் சகல ஜனங்களுக்கு முன்பதாக உங்களுக்கு பெரிய அடையாளங்களை செய்வார். உங்களை அநேகர் கண்களுக்கு முன்பதாக சாட்சியுள்ள ஜீவியமாக நிர்க்கப்பண்ணுவார். 

2. கண்களுக்கு முன்பாக பெரிய காரியங்களை செய்வார் 

I சாமுவேல் 12:16
இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.

I சாமுவேல் 12:17
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,

I சாமுவேல் 12:18
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;

யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு என்று ஒரு ராஜா அரசாள வேண்டும் என்று கேட்டு கொண்டதால் அந்த பொல்லாப்பின் நிமித்தமாக சாமுவேல் அவர்களை நோக்கி நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவேன் அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும், மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்த வேளையில் அவ்வாறே அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; இதினிமித்தம் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கும், சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்,  இதே போல கர்த்தர் உங்களையும் சாமுவேலை போல பயன்படுத்துவார் உங்கள் மூலமாக கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை எல்லோரும் அறியும்படிக்கு அவர் பெரிய காரியங்களை எல்லோர் கண்களுக்கு முன்பாக உங்களிடத்தில் செய்வார். அவர் உங்களோடு இருந்து செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும். 

3. கண்களுக்கு முன்பாக உன்னை தலைவனாக்குவார் 

II சாமுவேல் 6:16
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.

II சாமுவேல் 6:20
தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

II சாமுவேல் 6:21
அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.

II சாமுவேல் 22:44
என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்துக்கு கொண்டு வரும் பொழுது தாவீது  சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்ஆடி வந்து கொண்டு இருந்தார் இதை பார்த்த சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பதாக வஸ்திரம் விழுவது கூட தெரியாமல் ஆடி பாடி வருவதை பலகணிவழியாய்ப் பார்த்து, தன் இருதயத்திலே அவரை அவமதித்தாள். அப்பொழுது அவள்  தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். தாவீது மீகாளை நோக்கி நான் இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்திற்கு என்னை தலைவனாக தெரிந்து கொண்ட என் தேவனுக்கு முன்பதாக தான் ஆடினேன் என்று சொன்னார்.

தாவீது கர்த்தருக்கு மிகுந்த கனத்தை தனத்தை கொடுப்பவராக தன் ஜீவியத்தில் திகழ்ந்தார், அதனால் தானே கர்த்தர் அவரை தன்னுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக தெரிந்து கொண்டார், தம்முடைய ஜனத்தை ஆளும்படியாக தலைவனாக உயர்த்தினார், இன்றைய காலக்கட்டத்திலும் நாம் கர்த்தரை துதிக்கிறதைப்பார்த்து ஏளனம் செய்து அவமதிக்கிற மீகாளை போன்ற ஜனக்கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது நீங்கள் எதற்கும் மனம் தளர தேவை இல்லை கர்த்தரை ஆராதிக்கிற உங்களை நிச்சயமாய் எல்லோர் கண்களுக்கு முன்பதாக தாவீதை தலைவனாக ஆக்கியது போல உங்களையும் கர்த்தர் தலையாக்குவார். 

4. கண்களுக்கு முன்பாக உன் சரீரமாகிய ஆலயம் அஸ்திபாரம் போடப்படும் 

எஸ்றா 3:10
சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம்போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

எஸ்றா 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

எஸ்றா 3:12
முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.

மத்தேயு 7:25
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

சிறையிருப்பில் இருந்து திரும்பியவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டார்கள். முந்தின ஆலயத்தை கண்ட முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் தங்கள் கண்களுக்கு முன்பதாக ஆலயம் அஸ்திபாரம் போடப்படுவதை பார்த்து மகா சத்தமிட்டு ஆர்பரித்தார்கள் என்று வாசிக்கிறோம். 

அதுபோல தேவன் உங்களுடைய சரீரமாகிய ஆலயமும் அஸ்திபாரம் போடப்படவேண்டும் என்று விரும்புகிறார், நீங்கள் உங்கள் ஆலயத்தை கட்டும்படியாக அவர் கிருபை அளிப்பார், அநேகர் கண்களுக்கு முன்பாக உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை அஸ்திபாரம் போடப்படும், அது கன்மலையின் போடப்பட்ட அஸ்திபாரம் போல என்றென்றைக்கு நிலைத்து நிற்கும்.  

5. கண்களுக்கு முன்பாக கர்த்தரின் பரிசுத்த புயம் வெளிப்படும் 

ஏசாயா 52:9
எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

ஏசாயா 52:10
எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

ஏசாயா 52:11
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

ஏசாயா 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

கர்த்தர் எல்லா ஜாதிகளுக்கு முன்பதாகவும் அவருடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், உங்கள் மூலம் அநேகர் தேவனுடைய பெரிதான இரட்சிப்பை காண்பார்கள், உங்கள் மூலம் கர்த்தருடைய பரிசுத்தபுயம் எல்லோர் கண்களுக்கு முன்பாக வெளிப்படும் எழும்புங்கள் உங்கள் வல்லமையை தரித்துக்கொள்ளுங்கள், அசுத்தமானதை தொடாமல் உங்களை சுத்திகரித்துக்கொள்ளுங்கள் கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.







For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment