Kanmalai Christian Chruch
Word of God Brother D. Kamal
Date: 21.11.2021
ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
லூக்கா 2:14
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
எண்ணாகமம் 6:26
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
எப்படிப்பட்ட சூழ்நிலைகளின் பாதையில் நீங்கள் சென்று கொண்டு இருந்தாலும் சரி சமாதானத்தின் தேவன் தாமே சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய தேவன் சமாதானத்தின் தேவன், அவர் நாமம் சமாதான பிரபு, இந்த பூமியில் உள்ள சகல ஜனங்களுக்கும் பாவ இருளை போக்கி அவர்களுக்கு சமாதானம் அளித்திடவே தேவன் இறங்கி வந்தார். அவர் இன்றைக்கு உங்களுக்கு சமாதானம் கட்டளையிடுவார். இந்த சமாதானத்தின் தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் காரியங்களை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே தியானிக்கலாம்.
சமாதானத்தின் தேவன் நமக்கு என்ன செய்வார் ?
1. சமாதானத்தின் தேவன் - உங்களோடு இருப்பார்
ரோமர் 15:33
சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் கூட இருப்பார். எப்பொழுது அவர் நம்மோடு இருப்பார் என்று சொன்னால் தேவனுடைய சித்தத்தை செய்கிற பொழுது, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கெல்லாம் ஒரு மாதிரியை வைத்து விட்டு சென்று இருக்கிறார் அவருடைய பாதையிலே அவருக்கு பிரியமாய் நடந்து அவர் சித்தத்தை நாம் செய்வோம் என்று சொன்னால் சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.
2. சமாதானத்தின் தேவன் - சமாதானத்தை அருளுவார்
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அளித்து ஆசீர்வதிக்கிறவர். எப்படிப்பட்ட சமாதானத்தை அவர் தருகிறாராம் உலகம் தருகிற சமாதானம் அல்ல என்னுடைய சமாதானத்தையே வைத்து விட்டு சென்று இருக்கிறார். ஆகவே உங்கள் இருதயம் பயப்படாமல், கலங்காமல் இருப்பதாக. இந்த உலகத்திலே நமக்கு அநேக பாடுகள் உண்டு ஆனால் நாம் சோர்ந்து போய் விடக்கூடாது ஏன் என்றால் உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கிறார் எனவே அவர் உங்கள் உபத்திரவங்கள் எல்லாம் நீக்கி சமாதானம் அருளுவார்.
3. சமாதானத்தின் தேவன் - ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் சரி எதை குறித்தும் நீங்கள் கவலைப்படத்தேவை இல்லை, உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும், விண்ணப்பத்தினாலும் கர்த்தருக்கு தெரியப்படுத்துங்கள் அதுபோதும், நம் தேவன் நிச்சயம் ஏற்ற காலத்தில் நம் ஜெபத்திற்கு பதில் தருவார் அன்னாளை கூட குழந்தை இல்லை என்று விசனப்படுத்தினார்கள், மனமடிவாகினார்கள் ஆனாலும் அவள் கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய இருதயத்தை ஊற்றி தன் விண்ணப்பத்தை கண்ணீரோடு தேவனுக்கு தெரியப்படுத்தினால் கர்த்தர் அந்நாளின் ஜெபத்தை கேட்டு பதில் அளித்தார் அதேபோல உங்கள் ஜெபத்திற்கும் ஆண்டவர் நிச்சயம் பதில் அளிப்பார் நீங்கள் சமாதானமாய் இருங்கள்.
4. சமாதானத்தின் தேவன் - உங்களை வழிநடத்துவார்
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment