Wednesday, December 1, 2021

பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

 

கன்மலை கிறிஸ்துவ சபை டிசம்பர் மாத வாக்குத்தத்தம் 

Word of God : Brother Micheal

Date: 01.12.2021


ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

யாக்கோபு என்னும் சிறு பூச்சியே, இஸ்ரவேலே, சிறு கூட்டமே பயப்படாதே கர்த்தர் இந்த டிசம்பர் மாதம் துணை நிற்கிறார். உனக்காக நான் துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். வரும் காரியங்களை குறித்து பயப்படாதே, தேசத்தில் சம்பவிக்கிறதை குறித்து பயப்படாதே இந்த டிசம்பர் மாதம் துணை நிற்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

1. தகப்பனுடைய தேவன் உனக்கு துணை நிற்பார் 

ஆதியாகமம் 49:24
ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

ஆதியாகமம் 49:25
உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

தகப்பனுடைய தேவன் உங்களுக்கு துணை நின்று செய்கிறதாவது உயரே வானத்தில் இருக்கிற ஆசீர்வாதமும், பூமிக்குரிய ஆசீர்வாதத்தையும் நீங்கள் இந்த டிசம்பர் மாதம் சுதந்தரித்து கொள்வீர்கள். இந்த டிசம்பர் மாதம் காணாத ஆசீவாதத்தை நீங்கள் காணப்போகிறீர்கள். தகப்பனுடைய தேவன் உங்களுக்கு துணையாக இருப்பார் அவர் அசீர்வதிக்கப்போகிறார். 

2. தாயின் கருவில் உன்னை உருவாக்கியவர் உனக்கு துணை நிற்பார் 

ஏசாயா 44:1
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.

ஏசாயா 44:2
உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.

ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

தாயின் கருவிலே நம்மை உருவாக்கியவர், உனக்கு துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது இந்த மாதம் தாக்கமுள்ளவர்கள் மேல் தண்ணீரையும், வறண்டு இருக்கிறதாக வாழ்க்கை பாதையிலே ஆறுகளையும் ஊற்றுவார். இந்த டிசம்பர் மாதம் ஆசீர்வாதத்தை ஊற்றுவதும் அல்லாமல் அவருடைய ஆவியை அளவில்லாமல் ஊற்றி உங்களை நிரப்பி வழிநடத்தப்போகிறார். உங்கள் வானாந்திரம் எல்லாம் சோலைவனமாய் மாறும் இந்த மாதம். உங்கள் மீது கர்த்தர் கர்த்தருடைய ஆவி ஊற்றப்படும். நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவீர்கள். அவருடைய வார்த்தையை உன் வாயிலே வைப்பார். 

3. யூதாவுக்கு கர்த்தர் துணை நிற்பார் 

எஸ்தர் 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

எஸ்தர் 9:2
யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

எஸ்தர் 9:3
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

இந்த மாதம் உங்களுக்கு வேத வாக்கியத்தின் படியே ஆதார் மாதமாய் இருப்பதாக எந்த மொர்தெகாயாயை விழத்தள்ளி தூக்கு மேடையில் எற எண்ணினார்கள். யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்கள். இந்த மாதம் உங்கள் சத்துருக்களை மேற்கொள்வீர்கள். மேற்கொள்ள முடியாத படி இருக்கிற எல்லா சூழ்நிலைகளையும் கர்த்தர் இந்த மாதம் காரியத்தை மாறுதலாய் முடியப்பண்ணி உங்களுக்கு சாதகமாய் மாற்றிப்போடுவார். ஒருவரும் இந்த மாதம் உங்களுக்கு முன்பதாக எதிர்த்து நிற்பதில்லை, உங்கள் பகைஞர்கள் உங்களை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அவர் உங்களை இந்த மாதம் பெரியவானாய் மாற்றுவார். 

4. கர்த்தரே உன் நடுவிலே துணையாக நிற்பார் 

II தீமோத்தேயு 4:13
துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

II தீமோத்தேயு 4:14
கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

II தீமோத்தேயு 4:15
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

II தீமோத்தேயு 4:16
நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

II தீமோத்தேயு 4:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

II தீமோத்தேயு 4:18
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

இந்த பதினோரு மாதங்களும் நம்மை சிங்கத்தின் வாய்க்கு தப்புவித்து, தேவன் பெலப்படுத்தினார். அதே போல இந்த மாதமும் எல்லா சிங்கத்தின் வாய்க்கும் தப்புவித்து காப்பாற்றுவார். கர்த்தர் இந்த மாதம் உங்கள் நடுவிலே துணையாக இருப்பார். 

5. ஆபத்து காலத்திலே உனக்கு துணை நிற்பார் 

சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

சங்கீதம் 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

சங்கீதம் 86:14
தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.

சங்கீதம் 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

சங்கீதம் 86:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

சங்கீதம் 86:17
கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

ஆபத்து நமக்கு நேரிடாது என்று ஒரு நாளும் சொல்லவே முடியாது மோசே சொல்லுகிறார் ஆபத்திலே நான் அவரை நோக்கி கூப்பிட்டேன் அவர் எனக்கு மறுஉத்தரவு அருளினார் என்று உங்கள் ஆபத்திலே யாரும் நமக்கு துணையாக இல்லாமல் போகாமல் ஆனால் நம் தேவனே ஆபத்தில் அவரே நமக்கு துணையாய் இருந்து நம்மை தப்புவிக்கிறார். அவர் நம்முடைய ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்தில் இருந்து தப்புவித்தார். இந்த மாதம் கர்த்தர் உங்களுக்கு ஒரு அனுகூலமான அடையாளத்தை உங்களுக்கு காட்டுவார் கர்த்தர் உங்களுக்கு துணை நிற்கிறதை கண்டு சத்துரு வேதக்கபட்டுபோவதை நீங்கள் காண்பீர்கள். 







For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment