Monday, November 15, 2021

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்

 

Kanmalai Christian Church

Date: 14.11.2021

Word of God : Pastor Jachin Selvaraj 

(Apostolic Christian Assembly, Purasaiwalkam)


உபாகமம் 32:39

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

ஆண்டவர் சில நேரங்களில் காயத்தை கொடுப்பார் என்று சொன்னால் ஏன் இப்படிப்பட்ட காயம் வந்தது ஆண்டவர் சில நேரங்களில் நமக்கு தரும் சிட்சைகளை நம்மால் தாங்க முடியவில்லை என்று சொன்னால் ஏன் இப்படி நமக்கு நேரிட்டது என்று நம்மை நாமே ஆராய்ந்து அரியக்கடவோம். நம்மை நாமே தாற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு பிரியம் இல்லாத சில காரியங்களை நாம் செய்யும் பொழுது இப்படி பட்ட காரியங்கள் எல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். 

ஆதியாகமம் 38:7

யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.

கர்த்தரின் கோபம் சில நேரங்களில் பயங்கரமாக இருக்கும், சில நேரங்களில் கோபத்தை காட்டும் பொழுது அவர் மனமிறங்குவார். ஆண்டவருக்கு பிரியம் இல்லாத காரியங்களை நம் வாழ்க்கையிலே செய்வோம் என்று சொன்னால் நம் வாழ்க்கையில் சில பிரச்சினைகள், போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். நமக்கு எதினால் இந்த தீங்கு நேர்ந்தது என்று உணர்வடையும் தருணமாகவும் அது இருக்கிறது. 

ஏசாயா 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

ஆமோஸ் 3:6

ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ ஆண்டவர் ஒரு காரியத்தை செய்வார் என்று சொன்னால் அதன் கிரியை பயங்கரமாய் இருக்கும். நாமும் அந்த ஆவிக்குரிய யுத்தத்திற்கு ஆயத்தப்படனும். நாம் ஆயத்தப்பட்டால் தான் இந்த யுத்தத்திலே கர்த்தரோடு சேர்ந்து ஜெயம் பெற முடியும். தாவீதைப்போல ஆவிக்குரிய வாழ்க்கையில் திடமனதாய் இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் தேவ கோபாக்கினை வரும் பொழுது நாம் பயந்து போய் விட கூடாது. அது நம்மை சீர்படுத்தி ஸ்திரப்படுத்துவதற்காக தேவன் அவ்வாறு செய்கிறார். 

புலம்பல் 3:38

உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

யோபு 13:15

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

ஓசியா 13:8

குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.

ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்தி விட்டார் என்றால் அந்த சமயங்களில் ஆண்டவரை நாம் மறந்து விடுகிறோம்.  கர்த்தர் சில சமயங்களில் அருப்புத அதிசயத்தை செய்து தான் பெரியவர் என்பதை வெளிப்படுத்தும் பொழுது நாம் சில நேரங்களில் மறந்துபோய் விடுகிறோம். பெருமை, சுயத்தின் ஆவி உள்ளே வந்து விட்டால் ஆண்டவரை மறந்து போய் விடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் சிங்கத்தை போல் இருப்பார். கர்த்தருடைய கோபம் நம் மேல் வர விடாமல் நாம் நம்மை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். 

சங்கீதம் 117:2

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.

1. கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும் 

யாத்திராகமம் 4:24

வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.

கர்த்தர் மோசேயை கொண்டு தான் தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஆனாலும் மோசே அதற்கு சம்மதியாமல் என்னால் முடியாது என்னை யாரும் நம்ப மாட்டார்கள், நான் திக்கு வாயும், மந்த நாவும் உடையவனாக இருக்கிறேன் என்று காரணம் சொல்லி கொண்டே இருக்கிறார். ஆனால் கர்த்தரின் தீர்மானம் மோசேயை தான் பார்வோன் முன்பதாக நிற்க வைக்க வேண்டும் என்பதே. மோசேயை கொண்டு தான் என்னுடைய ஜனங்களை பாலும், தேனும் ஓடுகிற கானானுக்குள் கொண்டு போக போகிறேன். மோசேயின் இருதயத்தில் ஒரு சந்தேகம் இருந்தது என் வார்த்தைக்கு கீழ்ப்படிய மாட்டார்கள். 

யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

யாத்திராகமம் 4:12
ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

யாத்திராகமம் 4:13
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.

யாத்திராகமம் 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.

யாத்திராகமம் 4:16
அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். 

கர்த்தர் மோசேக்கு அற்புதங்கள் செய்து காட்டியும் கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை இல்லை. கர்த்தர் மோசே மீது கோபம் கொண்டு வழியருகே அவரை கொள்ளப்பார்த்தார் என்று நாம் வாசிக்கிறோம். ஆண்டவரின் கோபத்தை அதிகரிக்காத படி நாம் இருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிவோம் என்று சொன்னால் அவர் நிச்சயமாகவே நம்மை ஆசீர்வதிப்பார். 

ரோமர் 2:28
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

ரோமர் 2:29
உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

கர்த்தர் மனுஷரின் முகத்தை பார்ப்பது கிடையாது அவர் நம் இருதயத்தை ஆராய்ந்து அறிகிற தேவன். ஆண்டவர் விரும்புகிற காரியம் நாம் பாவத்தை அறிக்கை செய்வது. நாம் நம்முடைய மீறுதல்களை தேவனிடத்தில் அறிக்கை செய்தால் கர்த்தர் நம்மை மன்னிப்பார். 

2. கர்த்தர் சொல்கிற காரியத்தை மட்டுமே பேச வேண்டும் 

எண்ணாகமம் 22:21
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

இங்கே பிலேயாம் ஒரு தவறு செய்கிறார். பாலாக் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டும் என்று பிலேயாமிடம் சொல்லுகிறார். அப்பொழுது தேவன் பிலேயாமை நோக்கி நீ அவர்களோடே போக வேண்டாம். அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கர்த்தர் நம்மிடையே எதிர்பார்ப்பது சபிக்கிற வார்த்தைகள் நம் நாவில் இருந்து எழும்ப கூடாது என்பதே. பிள்ளைகள் கோபப்படுத்தினால் பெற்றோர்கள் பிள்ளையை சபிக்க கூடாது.  மாறாக பிள்ளையை ஆசீர்வதியும் அவர்கள் ஜீவியத்தை மாற்றும் என்று வேண்டுங்கள்.

எண்ணாகமம் 22:31
அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

இதில் இருந்து நாம் அறிய வேண்டியது என்ன என்றால் கர்த்தர் பேச சொன்ன வார்த்தையை மட்டுமே நாம் பேச வேண்டும். ஆசீர்வாதத்தை சொல்ல வேண்டுமே தவிற சபிக்கிற வார்த்தைகள் நாவில் இருந்து எழும்பிட கூடாது. ஆசீர்வாதத்தை மட்டுமே நாம் பேச வேண்டும் இல்லை என்றால் கர்த்தரின் கோபம் நம் மேல் வரும். 

II பேதுரு 2:15
செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,

II பேதுரு 2:16
தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.

3. கர்த்தருக்கு முன்பதாக தாழ்மையாக இருக்க வேண்டும் 

தானியேல் 5:2
பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

தானியேல் 5:5
அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

நேபுகாத்நேச்சர் ராஜாவின் மகனான பெல்ஷாத்சார் ஒரு குற்றத்தை செய்தார். இங்கே கர்த்தர் பெல்ஷாத்சார் மீது தம்முடைய கோபாக்கினையை காட்டுகிறார். நேபுகாத்நேச்சார் செய்தது போலவே இவரும் இதே காரியத்தை செய்தார். விரல்கள் சுவற்றில் எழுதியதை அவன் பார்த்தபொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது. அவன் நினைவுகள் அவனை கலங்க பன்னியது. 

தானியேல் 5:25
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.

தானியேல் 5:26
இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,

தானியேல் 5:27
தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,

தானியேல் 5:28
பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.

ஏன் ஆண்டவர் கோபப்பட்டார் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொற்பாத்திரங்களை எடுத்து வந்து வேண்டாத காரியத்தை செய்தார். இதனால் தான் அவர் மீது தேவகோபம் மூண்டு ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு அவர் அன்றைய ராத்திரியே கொல்லப்பட்டார். 

II சாமுவேல் 9:7
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.

மேவிபோசேத் தாவீதின் இடத்தில் தன்னை தானே தாழ்த்துகிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார். இங்கே பார்க்கும் பொழுது பெல்ஷாத்சார் ராஜா தன்னை தாழ்த்தவில்லை. அதனால் தேவ கோபம் அவர் மேல் வந்தது. நாமும் தேவனுடைய கோபம் நம் மேலும், நம் சந்ததிகள் மேலும் வராமல் இருக்க நாம் நம்மை தாழ்த்துவோமாக. 



For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment