Monday, November 1, 2021

இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்

 

கன்மலை கிறிஸ்துவ சபை நவம்பர் மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 01.11.2021


யோவான் 1:48
அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.

யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 1:50
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

பெரிதானவைகளை இந்த நவம்பர் மாதம் காண்பீர்கள். 

1. உதவி இல்லாத இடத்திலும் பெரிதும் அநுகூலமுமான கதவை திறப்பார் 

I கொரிந்தியர் 16:7
இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

I கொரிந்தியர் 16:8
ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.

I கொரிந்தியர் 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

I கொரிந்தியர் 16:10
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.

பவுல் சொல்லுகிறார் இங்கே சுற்றிலும் விரோதிக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள் ஆனாலும் இங்கே சுவிஷேசத்தை அறிவிக்கும்படியாக பெரிதும் ஙொகூலமான கதவு எனக்காக திறக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுகிறார். இந்த மாதம் கர்த்தர் உங்களுக்கு பெரிதும் அனுகூலமான கதவை திறக்கப்போகிறார்.  

2. சிறையிருப்பை திருப்பி பெரிய காரியங்களை செய்வார் 

சங்கீதம் 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

சங்கீதம் 126:2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

சங்கீதம் 126:3
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

இந்த மாதம் சீயோனுடைய கர்த்தர் சிறையிருப்பை எல்லாம் திருப்புவார். அது எப்படி இருக்கும் என்று சொன்னால் ஒரு சொப்பனம் காண்கிறது போல இருக்கும். இந்த மாதம் நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும், நம்முடைய  வாய் நகைப்பினாலும் நிறைந்திருக்கும் இதை  புறஜாதியினர் கண்டு கர்த்தர் உங்களுக்கு பெரிதான காரியங்களை செய்தார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்வார்கள். இதினிமித்தம்  நம்மை மகிழ்ந்திருக்கச்செய்வவார். 

3. பெரிய வெளிச்சத்தை பிரகாசிக்கப்பண்ணி மகிழ்ச்சியை பெறுக செய்வார் 

ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

ஏசாயா 9:3
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.

இந்த மாதம் பெரிய வெளிச்சத்தை கர்த்தர் உங்கள் மேல் உதிக்கப்பண்ணி உங்களுடைய மகிழ்ச்சியை பெருகப்பண்ணுவார். இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் வந்தாலே வெளிச்சம் தான். அப்பொழுது நாமும் இருள் இல்லாமல் பிரகாசிக்கிற வெளிச்சமாய் இந்த உலகத்துக்கு இருப்போம்.  உங்களை தள்ளினவர்களுக்கு முன்பதாக திரளாக பெருகச்செய்வார். 

4. பெரிய பிரமிக்கத்தக்க அற்புதங்களை செய்வார் 

அப்போஸ்தலர் 8:10
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

அப்போஸ்தலர் 8:11
அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

அப்போஸ்தலர் 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

அப்போஸ்தலர் 8:13
அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

இந்த மாதம் பிரமிக்கத்தக்க ஒரு பெரிய அற்புதத்தை செய்யப்போகிறார். இங்கே பிலிப்பு செய்கிற பெரிதான பிரமிக்கத்தக்க அற்புத அடையாளங்களை கண்டு சீமோன் பிரமிக்கிறார் அதுபோலவே இந்த மாதம் கர்த்தர் செய்யும் பெரிய பிரமிக்கத்தக்க அற்புதத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.  

5. வாழ்க்கையில் தடையாக உள்ள பெரிய கல்லை புரட்டிபோடுவார் 

மத்தேயு 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

மத்தேயு 28:1
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

மத்தேயு 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

மத்தேயு 28:3
அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையை பார்க்க வருகிறார்கள் அப்பொழுது கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து வாசலில் வைக்கப்பட்டு இருந்த அந்த பெரிய கல்லை புரட்டிப்போட்டு அதின் மேல் உட்கார்ந்தார். பெரிய கல் என்று சொன்னால் நாம் வெளிய வரமுடியாத படி இருக்கிற தடைகளை குறிக்கிறது, நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறி செல்ல முடியாத படி தடையாக இருக்கிற கல் அப்படிப்பட்ட எல்லா தடைகளையும் இந்த மாதம் நம் தேவன் தாமே நீக்கி போடுவார். 




For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment