Kanmalai Christian Church
Word of God: Brother Micheal
Date: 24.10.2.021
மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
நம் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு ஆறாதான் செய்வதன் மூலமாக நமக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதனை ஒரு ஐந்து விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம் .
1. பஸ்காவின் ஆராதனை - உங்கள் வீடு பாதுகாக்கப்படும்
யாத்திராகமம் 12:24
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:25
கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:26
அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
யாத்திராகமம் 12:27
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
எகிப்து தேசத்திலே இஸ்ரவேல் ஜனத்தார் தங்கள் தங்கள் வீடுகளிலே ஒரு ஆராதனையை செய்தார்கள் அதுவே பஸ்காவின் ஆராதனை. இந்த ஆராதனை எதற்காக செய்யப்பட்டது என்று சொன்னால் எகிப்தியரை அத்தம்பண்ணும் படியாக செய்யப்பட்டது. நாம் வீடுகளிலே அவரை பணிந்து கொண்டு ஆராதிக்கும் பொழுது அவர் நமக்கு விரோதமாக எழும்புகிற வல்லமைகளில் இருந்து நம்மை தப்பப்பண்ணும்படியாக நம்மை பாதுகாக்கிறார். நீங்கள் ஆராதிக்க ஆராதிக்க கிறிஸ்து இயேசுவின் இரத்தம் வீட்டின் நிலைக்கால்களிலே பூசப்படும்பொழுது நம் வீடு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆராதனையின் கருத்து என்ன என்பதை நம்முடைய சந்ததிகளுக்கும் நாம் சொல்ல வேண்டும்.
2. பாளையத்தில் ஆராதிக்கும் பொழுது - எதிர்கொண்டு வரும் சத்துருக்களை உனக்கு சாதகமாக்குவார்
I சாமுவேல் 19:17
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
I சாமுவேல் 19:18
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
I சாமுவேல் 19:19
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
I சாமுவேல் 19:20
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
I சாமுவேல் 19:21
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
I சாமுவேல் 19:22
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
I சாமுவேல் 19:23
அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
I சாமுவேல் 19:24
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
எண்ணாகமம் 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
எண்ணாகமம் 11:22
ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
எண்ணாகமம் 11:23
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
எண்ணாகமம் 11:24
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
எண்ணாகமம் 11:25
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
எண்ணாகமம் 11:26
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
எண்ணாகமம் 11:27
ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும் மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
எண்ணாகமம் 11:28
உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
எண்ணாகமம் 11:29
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
இங்கே வனாந்திரத்திலே ஒரு ஆராதனை செய்கிறார்கள் அது தீர்க்கதரிசன ஆராதனையாக இருக்கிறது. சவுல் தாவீதை கொண்டு வரும் படியாக சேவகர்களை அனுப்பிக்கிறார் அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆவி இறங்கினதால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். பிறகு சவுலே தாவீதும், சாமுவேலும் இருக்கும் இடத்திற்கு போகிறார். சவுல் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதால் பகல், இரவு முழுவதும் சாமுவேலுக்கு முன்பதாக தீர்க்கதரிசனம் சொல்லி வஸ்திரம் இல்லாமல் விழுந்து கிடந்தார். பாளையத்திலே ஒரு கூட்டமாய் அவரை பணிந்து கொண்டு ஆராதனை செய்வோம் என்று சொன்னால் கர்த்தர் உன்னை எதிர்கொண்டு வருபவர்களின் மனதையே மாற்றி உங்களுக்கு சாதகமாக மாற்றி விடுவார்.
3. சபையிலே ஆராதிக்கும் பொழுது - ஊழியத்திற்கு பிரித்தெடுப்பார்
அப்போஸ்தலர் 13:1
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
அப்போஸ்தலர் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 13:3
அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 13:4
அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
இங்கே சவுலும், பர்னபாவும் சபையிலே உபவாசித்து ஆராதனை செய்து கொண்டிருக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் இவர்களை நான் அழைத்த ஊழியத்திற்காக பிரித்து விடுங்கள் என்று திருவுளம்பற்றினார். சில சமயங்களில் நாம் ஆலயத்திற்கு வரும் பொழுது சடுதியிலே கர்த்தர் கூப்பிட்டு ஊழியத்திற்கு பிரித்தெடுப்பார். நீங்கள் இருக்கிற வண்ணமாகவே இருக்க மாட்டிர்கள் சபையில் தொடர்ந்து வந்து ஆராதனையில் கலந்து கொள்ளும்பொழுது கர்த்தர் உங்களை வேறுபிரிப்பார். உங்களை முத்திரை மோதிரமாக மாற்றிவிடுவார். ராஜாவுக்கு பயப்படுகிற பிரயோஜனமுள்ள பாத்திரமாக உங்களை மாற்றி விடுவார்.
4. சிறையிலே ஆராதிக்கும் பொழுது - உங்கள் கட்டுகள் அவிழ்க்கப்படும்
அப்போஸ்தலர் 16:22
அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
அப்போஸ்தலர் 16:23
அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
அப்போஸ்தலர் 16:24
அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
அப்போஸ்தலர் 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 16:26
சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
அப்போஸ்தலர் 16:27
சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
அப்போஸ்தலர் 16:28
பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் தொழுவமரத்தில் கட்டி காவலில் வைக்கப்பட்டு இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் நடுராத்திரியில் ஜெபம் பண்ணி தேவனை பாடி துதித்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. கதவுகள் எல்லாம் திரவுண்டு எல்லோருடைய கட்டுகளும் அவிழ்ந்தது. அதுபோல தான் நாம் தேவனை ஆராதனை செய்யும் பொழுது சடுதியில் நமக்கு பரத்தில் இருந்து பதில் வரும். உங்களுக்கு தடையாக இருக்கிற அஸ்திபாரங்கள் எல்லாம் தேவன் அசையப்பண்ணுவார். அதுமட்டும் அல்லாமல் நீங்கள் ஆராதிக்கும் பொழுது மற்றவர்கள் கட்டுகளும் அவிழ்க்கப்படும்.
5. விலக்க வேண்டியதை விலக்கி கர்த்தரை ஒருவரையே ஆராதிக்கும் பொழுது - உங்கள் வருத்தத்தை நீக்கி மனதுருகுவார்
நியாயாதிபதிகள் 10:6
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
நியாயாதிபதிகள் 10:7
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.
நியாயாதிபதிகள் 10:8
அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
நியாயாதிபதிகள் 10:9
அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 10:10
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
நியாயாதிபதிகள் 10:11
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,
நியாயாதிபதிகள் 10:12
சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?
நியாயாதிபதிகள் 10:13
அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன்.
நியாயாதிபதிகள் 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
நியாயாதிபதிகள் 10:15
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
நியாயாதிபதிகள் 10:16
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.
இஸ்ரவேல் புத்திரர்கள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள். அவர்கள் கர்த்தரை செவிக்காமல் அந்நிய தேவர்களை சேவித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபம் கொண்டு அவர்களை பெலிஸ்தர் கைகளிலும், அம்மோன் புத்திரர் கைகளிலும் விற்றுப்போட்டார். அந்த வருஷம் முதற்கொண்டு அவர்கள் பதினெட்டு வருட காலம் மிகவும் நெருக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் அப்பொழுது கர்த்தர் நீங்கள் என்னை விட்டு அந்நிய தேவர்கள் பின்னே போனீர்கள் நீங்கள் உங்களுக்காக தெரிந்து தேவர்களிடமே போய் முறையிடுங்கள் அவை உங்கள் ஆபத்துக்கு நீங்கலாக்கி இரட்சிக்கட்டும் நான் உங்களை இரட்சியேன் என்று சொன்னார். ஆனாலும் இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் பாவம் செய்தோம். உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்கு செய்யும் இன்றைக்கு மாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி தங்கள் நடுவில் இருந்து அந்நிய தேவர்களை விலக்கி கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேல் வருத்தத்தை பார்த்து அவர்கள் மேல் மனதுருகினார். அதுபோல நம்முடைய வாழ்க்கையிலே எதை விலக்க வேண்டுமோ அதை விலக்கி நம்முடைய ஆத்துமாவை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் பொழுது அவர் உங்கள் வருத்தத்தை கண்டு உங்கள் மேல் மனதுருகுவார். ஆராதனை தேவனுடைய மனதை உருக்கும். உங்கள் வருத்தத்தை நீக்கும்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment