Monday, October 4, 2021

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு

 

Kanmalai Christian Church

Word of God : Brother Raakesh

Date: 04.10.2021


பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

சங்கீதம் 18:1

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து நம்மோடு இருந்தால் எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் உண்டு. நாம் அனைவருக்கும் எதோ ஒரு விதத்தில் பெலவீனங்கள் உண்டு. ஆனால் கர்த்தருடைய கிருபை நமக்குள் இருக்குமானால் எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் உண்டு. நம் பெலனே கர்த்தர் தான், நாம் நிற்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபை மாத்திரமே. 

தேவன் நமக்கு எப்படிப்பட்ட பெலனை நமக்கு இன்றைக்கு அளிக்கப்போகிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு நான்கு விதமான காரியங்களிலே நாம் இங்கே தியானிக்கலாம். 

1. சத்துருக்களை மேற்க்கொள்ள பெலன் தருவார் - நாம் கர்த்தரிடத்தில் முறையிடும் பொழுது 

நியாயாதிபதிகள் 6:14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நியாயாதிபதிகள் 6:11

அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.

நியாயாதிபதிகள் 6:12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

நியாயாதிபதிகள் 6:13

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

நியாயாதிபதிகள் 6:14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நியாயாதிபதிகள் 6:15

அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.

இஸ்ரவேலரை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்க கர்த்தர் கிதியோனை தெரிந்துகொள்கிறார். ஆனால் கிதியோனோ ஆண்டவரே நான் இஸ்ரவேலரை எப்படி இரட்சிப்பேன் என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரை காட்டிலும் சிறியவன் அல்லவா என்கிறார் ஆனால் உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே கூட இருக்கிறார் உன்னை அனுப்புகிறது நான் அல்லவா என்று சொன்னார். அதுபோல தான் உங்கள் பெலவீனங்கள் என்ன என்பது ஆண்டவருக்கு தெரியும் ஆனால் நீங்களோ கர்த்தருடைய பார்வையில் பராக்கிரமசாலிகள். 

நியாயாதிபதிகள் 6:3

இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

நியாயாதிபதிகள் 6:4

அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.

நியாயாதிபதிகள் 6:5

அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.

நியாயாதிபதிகள் 6:6

இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

நியாயாதிபதிகள் 8:28

இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.

இஸ்ரவேலரின் அடிப்படையான தேவைகளான அவர்களுடைய விளைச்சல், ஆடு, மாடுகள், ஆகிய எல்லாவற்றையும் மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி கொள்ளையிடுவார்கள். இஸ்ரவேலருடைய விளைச்சலின் அறுவடை காலம் வரை காத்திருந்து அறுப்பு காலத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவது போல வருவார்கள். அதுபோல உங்களுக்கு விரோதமாய் எழும்பின சத்துருக்கள் அநேகம் பேர் இருக்கலாம் அவர்கள் உங்கள் அடிப்படையான காரியத்தில் கைவைக்கும் படியாய் வந்து இருக்கலாம். சோர்ந்து போக வேண்டாம் உங்களுக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ கர்த்தர் உங்களோடு கூட இருந்து உங்கள் சத்துருக்களை முறியடிக்கச்செய்து உங்களை பெரியவனாக்குவார். கிடியோனை கர்த்தர் எழும்ப செய்தது கர்த்தர் உங்களை எழும்ப செய்வார். கர்த்தரிடத்தில் உன் காரியத்தை குறித்து முரிடும்பொழுது  உங்கள் சத்துக்களை மேற்கொள்ள தேவன் பெலன் தருவார். 

2. பெலவீனத்தை மேற்கொள்ள பெலன் தருவார் - நம்முடைய பெலவீனங்களை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் பொழுது 

II கொரிந்தியர் 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

யாத்திராகமம் 4:10

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

யாத்திராகமம் 4:11

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

யாத்திராகமம் 4:12

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

எண்ணாகமம் 16:31

அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;

எண்ணாகமம் 16:32

பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.

நம்முடைய பெலவீனங்கள் எதுவாக இருந்தாலும் சரி அந்த பெலவீனத்தில் கர்த்தருடைய நமக்கு போதும் நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கர்த்தர் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து தம்முடைய ஜனமான இஸ்ரவேலை இரட்சிக்க மோசேயை தெரிந்துகொண்டு அழைக்கிறார். ஆனால் மோசேயோ நான் வாக்கில் வல்லவன் அல்ல ஆண்டவரே நானோ திக்கு வாயும் மந்த நாவும் உள்ளவன் என்று தன்னுடைய பெலவீனத்தை குறித்து சொல்லும் பொழுது கர்த்தர் நீ போ உன் வாயோடே இருந்து நீ பேச வேண்டியதை நான் போதிப்பேன் என்றார். இன்றைக்கு நீங்கள் உங்களிடத்தில் பெலவீனமாய் பார்க்கிற எந்த காரியமாய் இருந்தாலும் சரி அதிலே கர்த்தருடைய பெலன் பரிபூரணமாய் விளங்கும். 

3. பிசாசின் தந்திரமான காரியத்தை மேற்க்கொள்ள பெலன் தருவார் - அவர் நியமித்த வழியில் நடக்கும் பொழுது 

நியாயாதிபதிகள் 14:5

அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

I பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

நியாயாதிபதிகள் 13:5

நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

சிம்சோனை நோக்கி பால சிங்கம் எதிர்த்து கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினபடியால் தன் கையிலே ஒன்றுமே இல்லாத போதிலும் அந்த பால சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கிழித்து போடுகிறது போல சிம்சோன் கிழித்து போட்டார். நம் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல நம்மை எப்படி விழ செய்யலாம் என்று எப்பொழுதும், எந்நேரமும் வகை தேடி சுற்றி வருகிறான். கர்த்தருடைய ஆவி உங்கள் மேல் பலமாய் இறங்கும் என்று சொன்னால் அந்த பெலத்தை கொண்டு நீங்கள் அவனை ஒரு ஆட்டுக்குட்டியை கிழித்து போடுகிறது போல போடுவீர்கள். அவனுடைய எல்லா தந்திரங்களையும் முறியடிக்கும் படியாய் கர்த்தருடைய பெலன் உங்கள் மேல் பலமாய் இறங்கும். கர்த்தர் உங்களுக்கு நியமித்த வழியில் நீங்கள் வழி  விலகாமல் நாடாகும் பொழுது உங்களை எதிர்த்து வருகிற பிசாசின் தந்திரமான காரியங்களை மேற்கொள்ள உங்களுக்கு பெலன் தருவார். 

4. காரியத்தை நடப்பிக்க பெலன் தருவார் - அதை தேவனிடத்தில் தெரியப்படுத்தும் பொழுது 

I நாளாகமம் 22:16

பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

II நாளாகமம் 14:11

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

பிலிப்பியர் 4:6

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பெலன் இல்லாதவனுக்கும், பெலமுள்ளவனுக்கும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். ஆதலால் நீ எழும்பி உன் காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடே கூட இருக்கிறார். நீங்கள் எடுப்பித்து நடக்கிற காரியத்தில் கர்த்தர் ஜெயத்தை அருளப்போகிறார். நீக்கினால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உங்கள் காரியத்தை குறித்து தேவனுக்கு தெரியப்படுத்தும் பொழுது கர்த்தர் உங்களுக்கு உதவி செய்து அதிலே ஒரு ஜெயத்தை உங்களுக்கு கொடுப்பார். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment