Kanmalai Christian Church
Date: 10.10.2021
Word of God : Pastor Jachin Selvaraj
(Apostolic Christian Assembly, Purasaiwalkam)
ஏசாயா 45:22
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
ஏசாயா 45:23
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
கர்த்தர் சொல்லுகிறார் பூமியின் எல்லை எங்கும் உள்ளவர்களே என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். அப்பொழுது உங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டிய காரியம் ஆண்டவரை நோக்கி பார்க்க வேண்டும். அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சிருஷ்டி கர்த்தர். முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும்.
எபிரெயர் 12:1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
வாழ்க்கையில் நெருக்கங்கள் வரும், போராட்டங்கள் வரும், நிந்தைகள் வரும், அவமானங்கள் வரும் ஆனால் நமக்கு முன்பதாக அநேகர் ஜீவனுள்ள சாட்சிகளாக இருக்கிறார்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி இந்த விடுதலையை நமக்கு கொடுத்தார். நமக்காக இயேசு கிறிஸ்து அவமானத்தை ஏற்றுக்கொண்டார். நமக்காக இயேசு கிறிஸ்து சிலுவையிலே நிந்தைகளையும், அவமானங்களையும் சகித்தார். சூழ்நிலைகள் சில சமயங்களில் நமக்கு சாதகமாக இல்லாமல் மாறாமல் அதற்காக நாம் சோர்ந்து போய் விடக்கூடாது.
1. அவரை நோக்கி பார்க்கும் பொழுது - வலைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார்
சங்கீதம் 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
சங்கீதம் 25:11
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
சங்கீதம் 25:12
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
நமக்கு முன்பாக சில பேர் வலைகளை விரிப்பார்கள். அதிலே நாம் மாட்டிக்கொள்ளும் படியாக எந்த மனுஷன் நமக்கு வலை விரிப்பான் என்று தெரியாது. நாம் ஒரு வேலை அவர்களை நம்பி கொண்டு இருக்கலாம். நாம் யாரை இதுவரை நம்பி இருந்தோமோ அவர்கள் தான் நமக்கு வலையை விரித்து வைத்து இருப்பார்கள். இங்கே சங்கீத காரர் இப்படியாய் சொல்லுகிறார் என் கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கி கொண்டு இருக்கிறது, மனுஷரை நோக்க விரும்பவில்லை, கர்த்தர் தமக்கு பயப்படுகிற மனுஷனுக்கு தம் வழியை போதிப்பார். இது நமக்கு சத்துருக்களாக இருக்கிற மனுஷருக்கு தெரியாது.
பிரசங்கி 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
ஏன் இப்படிப்பட்ட பாடு வந்து நேர்ந்தது என்று நமக்கு தெரியாது, ஏன் இப்படிப்பட்ட நிந்தை வந்தது என்று நமக்கு தெரியாது. நாம் ஆண்டவரை நோக்கி பாப்போம் என்று சொன்னால் நிச்சயமாகவே கர்த்தர் நமக்கு வைத்து இருக்கிற வலைகள், கன்னிகளில் இருந்து நம்மை காப்பாற்றி விடுவார்.
சங்கீதம் 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
சங்கீதம் 35:8
அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
சங்கீதம் 35:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
சங்கீதம் 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
நாம் தவறே செய்யவில்லை என்றாலும் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் மனுஷன் நமக்கு குழியை வெட்டி விட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் போய் கொண்டு இருந்தாலும் தேவன் நம்மை அவைக்கு நீங்கலாக்கி விடுவிப்பார். நமக்கு விரித்த வலை அவர்களையே அதில் விழத்தக்கதாக செய்யும். நம் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்
யோசுவா 23:10
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
யோசுவா 23:11
ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
யோசுவா 23:12
நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,
யோசுவா 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.
நம்முடைய வாழ்க்கையில் அனுதினமும் போராட்டங்கள் யுத்தம் போல வந்து நம்மை நெருக்குகிறதா வசனம் சொல்லுகிறது உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்பு கூறும்படி உங்கள் ஆத்துமாக்களை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். போராட்டங்கள், பிரச்சினைகளை கண்டு துவண்டு போய் விடாதீர்கள். அந்த பிரச்சினைகளை ஆண்டவருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவ்வாறு செய்ய வில்லை என்றால் நாம் பின்வாங்கி போய் விடுவோம்.
2. அவரை நோக்கி பார்க்கும் பொழுது - நமக்கு எதிராய் இருக்கிற தந்திரமான காரியங்களில் இருந்தும் நம்மை காப்பார்
சங்கீதம் 69:7
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
சங்கீதம் 69:10
என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
சங்கீதம் 69:12
வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
சங்கீதம் 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
சங்கீதம் 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
வசனம் சொல்லுகிறது உமது நிமித்தம் நிந்தையை சகித்தேன். இலச்சை என் முகத்தை மூடிற்று என்று தாவீது சொல்லுகிறார். என் ஆத்துமா வாடும் படியாக உபவாசித்து அழுதேன். அதுவும் எனக்கு ஒரு நிந்தையாய் முடிந்தது. எந்த காரியத்திலும் ஒரு சமாதானம் இல்லை, அப்படிப்பட்டதான பாதையில் நாம் போகிறோமோ ஆனாலும் நமக்காக ஆண்டவர் ஒரு வழியை திறப்பார்.
II நாளாகமம் 20:11
இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
II நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
நாம் நல்லது செய்தாலும் அனால் அந்த நன்மைக்கு தீமையை சரிக்கட்டி விட்டார்கள். உங்களை நிந்தையாக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். நிந்தையை சுமக்க வேண்டும் என்று நம் மேல் வைத்து விட்டார்கள். நமக்கு எதிராக தந்திரமான சதி யோசனைகளை வைத்து விட்டார்கள். தேவன் நமக்கு கொடுத்த சுதந்திரத்தில் இருந்து கூட நம்மை துரத்தி விட வருகிறார்கள். எங்களுக்கு விரோதமாக வந்த கூட்டத்திற்கு முன்பாக நிற்கிறதற்கு எங்களுக்கு பெலன் இல்லை. எங்களுக்காக ஒரு அற்புதத்தை செய்யும். இந்த யுத்தத்தில் நாம் ஜெயம் பெற்றே ஆக வேண்டும் ஆதலால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கி கொண்டு இருக்கிறது.
3. அவரை நோக்கி பார்க்கும் பொழுது - சரியான பாதையில் நம்மை வழிநடத்துவார்
யோனா 2:4
நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
யோனா 2:5
தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
இங்கே யோனா ஆண்டவர் சித்தப்படி செய்யாமல் தாம் விரும்பிய இடத்திற்கு போகிறார். தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. ஆனாலும் உம்மை நோக்கி பார்க்கிறேன் என்று சொல்லுகிறார். அதுபோல தான் நம்முடைய வாழ்க்கையில் சில இடங்களில் போகக்கூடாது என்று ஆண்டவர் சொன்னால் போகக்கூடாது. நம் கை போக கூடாது என்றால் போக கூடாது, ஏன் என்றால் அந்த வழி ஆண்டவருக்கு பிரியமானது அல்ல. ஆண்டவருக்கு பிடிக்காத வழியில் நாம் சென்றால் யோனாவை போல வேண்டாத காரியத்தில் நாம் மாட்டிக்கொள்வோம்.
4. அவரை நோக்கி பார்க்கும் பொழுது - அவர் நமக்காக வழக்காடி நீதி செய்வார்
மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
மீகா 7:6
மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
மீகா 7:7
நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
மீகா 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
நாம் மனுஷர் மேல் மிகவும் அதிகமாய் நம்பிக்கை வைக்கக்கூடாது. யாரிடம் எது சொல்ல வேண்டுமோ அது மட்டும் தான் சொல்ல வேண்டும் எல்லோரிடமும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சில காரியங்களில் நாம் இரகசியத்தை மூடி வைக்க வேண்டும். மனுஷனுடைய சத்துருக்கள் அவர்கள் வீட்டார் தானே என்று வசனம் சொல்லுகிறது. ஆண்டவர் நம் குடும்பத்தின் சமாதான காரியங்களிலே ஒரு அற்புதத்தை செய்து கொடுப்பார். நம் ஜெபத்தை கேட்டு நம் காரியங்களை அவர் கேட்டருளுவார். ஒரு வேலை நம் வாழ்க்கை இருள் போல தெரியலாம் அனால் அந்த இருளிலே ஆண்டவர் நம்மை ஒளியாய் மாறவைப்பார். நம்மை வெளிச்சமாக ஆண்டவர் மாற்றி விடுவார். கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தாலும் அவர் நமக்காக வழக்காடி நியாயம் செய்வார் அந்த நியாயத்தை விசாரிக்கும் மட்டும் அவருடைய கோபத்தை நாம் சுமக்க வேண்டி வரும். அவர் நம்மை வெளிச்சத்திலே கொண்டு வந்து நமக்கு நீதி செய்வார். நம் குடும்ப காரியத்தை ஆண்டவர் விசாரித்து அதிலே ஒரு அற்புதத்தை செய்வார். எவை எல்லாம் உங்களை நெருக்கி கொண்டு இருக்கிறதோ அவற்றை அவரிடம் ஒப்பு கொடுப்போம். தேவன் நிச்சயமாய் நமக்கு நீதி செய்வார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment