கன்மலை கிறிஸ்துவ சபை அக்டோபர் மாத வாக்குத்தத்தம்
Word of God : Brother Micheal
Date: 01.10.2021
யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
இந்த அக்டோபர் மாதம் கர்த்தர் உங்களுடனே கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும். நம் தேவனாகிய கர்த்தர் நம்முடனே இந்த மாதம் கூட இருந்து எப்படிப்பட்ட காரியங்களை செய்வார் என்பதை நாம் இங்கே தியானிக்கலாம்.
1. அவர் உன்னோடு இருந்து பெரிய காரியங்களை செய்து முடிப்பார்
யோவேல் 2:21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யாத்திராகமம் 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
யாத்திராகமம் 18:20
கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
யாத்திராகமம் 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
யாத்திராகமம் 18:22
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
உபாகமம் 1:16
அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.
உபாகமம் 1:17
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,
உபாகமம் 1:18
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
நீங்கள் பயந்து கொண்டு இருக்கிறதான காரியத்திலே மகிழ்ந்து களிகூறு பெரிய காரியங்களை கர்த்தர் இந்த மாதம் செய்யப்போகிறார். எவையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்கள் என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோமோ அந்த பெரிய காரியங்களை கர்த்தர் பார்த்துகொள்ளப்போகிறார். அவர் உங்கள் மூலமாய் செய்கிற காரியம் பயங்கரமாய் இருக்கும். இந்த மாதம் கர்த்தர் உங்கள் நீதியுள்ள நியாதிபதியாய் இருந்து நியாயம் விசாரித்து பெரிய காரியங்களை செய்யப்போகிறார். உங்கள் வாழ்க்கையிலே தடையாக இருக்கிற பெரிய காரியங்கள் யாவற்றையும் கர்த்தர் கைகூடிவர பண்ணபோகிறார் . சிறியவர் பெரியவர் என்ற முகதாட்சணியம் பாராமல் அவர் இந்த மாதம் நியாயம் விசாரிக்கப்போகிறார்.
2. அவர் உன்னோடு இருந்து கூடாத காரியங்களை செய்து முடிப்பார்
மத்தேயு 17:18
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
மத்தேயு 17:19
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சங்கீதம் 18:29
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
மாற்கு 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
இந்த மாதம் நீங்கள் விசேஷித்த ஆசாரிப்பை நியமிக்கும் பொழுது எப்படிப்பட்ட ஜாதி பிசாசுகளாய் இருந்தாலும் அதை துரத்தத்தக்கதான வல்லமையை தேவன் உங்களுக்கு அளிப்பார். அது எப்படிப்பட்ட கூடாத காரியமாய் இருந்தாலும் சரி உங்களுடைய ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் அதை மேற்கொள்ளும் கிருபையை, விசுவாசத்தை கர்த்தர் இந்த மாதம் உங்களுக்குள் வைக்கிறார். இது கூடாது என்று நினைத்த காரியம் இந்த மாதம் கூடிவரப்போகிறது. இத்தனை காலங்களாக உங்களை ஆட்டிப்படைத்த அந்த சந்துருவின் சேனைகளை முறியடிக்கும் படியாக தேவன் எழுந்தருளப்போகிறார். நம்முடைய தேவனாகிய கர்த்தராலே நீங்கள் உங்களுக்கு முன்பதாக இருக்கிற எல்லா மதில்களையும் தாண்டப்போகிறீர்கள். மனுஷரால் முடியாத கூடாது காரியம் நம்முடைய தேவனாலே கூடும்.
3. அவர் உன்னோடு இருந்து ஆகாத காரியத்தை செய்து முடிப்பார்
ஆதியாகமம் 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
ஆதியாகமம் 18:12
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
ஆதியாகமம் 18:13
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
இந்த மாதம் ஆகவே ஆகாது என்று கருதப்பட்ட காரியங்களை உங்களோடு கூட இருந்து ஆகச்செய்யப்போகிறார். சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட காரியங்கள் சாத்தியமாக மாற்றப்போகிறார். அவர் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய நினைத்த காரியங்கள் ஒருபோதும் தடைப்படவே படாது.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment