Monday, October 18, 2021

கர்த்தர் என்னைத் தாங்குகிறார்

 

Kanmalai Christian Church 

Word of God : Brother Kamal

Date: 17.10.2021


சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.

ஏசாயா 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.

கர்த்தரே நம்மை அனுதினமும் தாங்கி வழிநடத்துகிறவர். நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்து சென்று கொண்டு இருந்தாலும் சரி அவை எல்லாவற்றிலும் என்னை தாங்குகிற கர்த்தர் என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும். நம் தேவன் தாயின் கர்ப்பத்தில் நாம் உற்பத்தியானது முதல் நம்மை தாங்கி வருகிறார். எனவே எதை கண்டும் சோர்ந்து போக வேண்டாம் நம்மை நடத்திடும் தேவன் நமக்கு உண்டு அவர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். உங்கள் பாரங்களை எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் தேவன் தாமே உங்கள் பாரங்களை சுமந்து உங்களை தாங்கி உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார். யாரை கர்த்தர் தாங்குகிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம். 

1. நீதிமான்களை தாங்குகிறார் 

சங்கீதம் 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

சங்கீதம் 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

யோபு 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

சங்கீதம் 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார், தேவனுடைய கண்களை நீதிமான்கள் மேல் எப்பொழுதும் நோக்கமாய் இருக்கிறது. அவருடைய கண்களை நீதிமான்களை விட்டு எப்பொழுதும் விலக்காமல் அவர்களை உயர்ந்த ஸ்தலத்தில் ஏறப்பண்ணுகிறார். கர்த்தருடைய செவிகள் நீதிமான்கள் கூப்பிடுதலுக்கு பதில் தருகிறது. நீதிமான்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடும் பொழுது அவர்களின் எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார். தாவீது இப்படியாய் சொல்லுகிறார் நீதிமான்களுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரிகிறதை நாம் எங்கும் காணவில்லை என்கிறார். ஆம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  நம் சொந்த இரத்தத்தினாலே நாம் கழுவப்பட்டு நீதிமான்களாய் ஆக்கப்பட்டு இருக்கிறோம். அவர் நம்மை மரணப்பரியந்தம் தாங்கி நடத்துவார். 

2. வியாதி படுக்கையில் உள்ளவர்களை கர்த்தர் தாங்குகிறார் 

சங்கீதம் 41:3
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

II இராஜாக்கள் 20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

II இராஜாக்கள் 20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

II இராஜாக்கள் 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

கர்த்தர் நம் வியாதியின் படுக்கையிலே நம்மை தாங்குகிறார் அதுமட்டும் இல்லாமல் அந்த வியாதி படுக்கையினை மாற்றிப்போடுகிறார். அவரே நம் பரிகாரியான கர்த்தர். எசேக்கியா ராஜா வியாதி படுக்கையில் இருக்கையில் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் நீர் பிழைக்க மாட்டீர் வீட்டின் காரியங்களை ஒழுங்குப்படுத்தும் என்று சொன்னார் அப்பொழுது எசேக்கியா சுவர் பக்கமாய் திரும்பி தேவனை நோக்கி கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். கர்த்தர் அவர் கண்ணீரை கண்டு, விண்ணப்பத்தை கேட்டு அவரின் வியாதி படுக்கையை மாற்றிப்போட்டார். இன்றைக்கும் நீங்கள் எப்படிப்பட்ட வியாதியின் படுக்கையில் இருந்தாலும் சரி. கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி உங்கள் வியாதியின் படுக்கையை மாற்ற கர்த்தரால் முடியும் அவர் உங்களை தங்குவார்.

3. அவர் தம்முடைய கிருபையினால் தாங்குகிறார் 

சங்கீதம் 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

ஏசாயா 54:10
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய கிருபை நமக்கு இல்லை என்றால் நாம் எப்பொழுதோ மடிந்து இருப்போம். அவருடைய கிருபை மாத்திரமே நம்மை அனுதினமும் தாங்கி வழிநடத்துகிறது. அவர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் அவருடைய கிருபை ஒருபொழுதும் நம்மை விட்டு விலகுவதே இல்லை. நாம் நிற்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபை மாத்திரமே 

4. நீதியின் வலதுகரத்தினால் தாங்குகிறார் 

ஏசாயா 41: 8 - 13

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

கடையாந்திரத்தில் இருந்து நம்மை தேவன் தெரிந்து கொண்டு இருக்கிறார். அவர் உங்களை ஒருபொழுதும் வெறுத்து புறம்பே தள்ளுவதில்லை. நாம் அனைவரும் ஒரு தீர்மானத்தின் படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு  இருக்கிறோம். மனிதர்கள் தள்ளினாலும் சரி, யார் உங்களுக்கு விரோதமாக எழும்பினாலும் சரி, நீங்கள் எதற்கும் அஞ்ச தேவை இல்லை அவர் உங்களை பலப்படுத்தி சகாயம் பண்ணுவார். நீதியின் வலது கரத்தினால் உங்களை தங்குவார். யுத்தம் கர்த்தருடையது அவர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். இன்றைக்கு காணிக்கிற எகிப்தியனை இனி என்றைக்கும் காணமாடீர்கள். உங்களோடு போராடியவர்களை நீங்கள் தேடியும் காணாது இருப்பீர்கள். தேவன் உங்களுக்காக நீதி செய்வார். அவர் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நாம் எதற்கும் அஞ்ச தேவை இல்லை.  

5. நம் பலவீனங்களை அவர் தாங்குகிறார் 

மத்தேயு 8:17
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

ரோமர் 15:1
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

ரோமர் 15:3
கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

I கொரிந்தியர் 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

II கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்று கொண்டு சிலுவையில் சுமந்தார். நம் பெலவீனம் என்ன என்பது ஆண்டவருக்கு தெரியும். அவர் நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். அதுமட்டும் அல்லாமல் நமக்காக வாகுக்கு அடங்கா பெருமூச்சோடு ஆவியானவர் தாமே நமக்காய் வேண்டுதல் செய்கிறார். நாம் நமக்கே பிரியமாய் நடவாமல் பெலவீனர்களை தாங்க வேண்டும் என்று பவுல் சொல்கிறார். இயேசுவும் அப்படியே  தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார் என்றும் சொல்லுகிறார். ஒருவரின் பெலவீனங்களை குறித்து நாம் அவர்களை குற்றப்படுத்தாமல் மாறாக நாம் அவர்கள் தாங்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இந்த உலகத்தில் பலமுள்ளவைகளை வெட்கப்படுத்த தேவன் பெலவீனராகிய நம்மை தெரிந்து கொண்டார். உங்கள் பெலவீனங்கள் எதுவாக இருந்தாலும் சரி அவர் கிருபை உங்களுக்கு போதும் நம் பெலவீனத்தில் கர்த்தருடைய பெலன் பூரணமாக விளங்கும். அவர் உங்களை தாங்குவார் நீங்கள் சோர்ந்து போக வேண்டாம். உங்கள் பெலவீனங்களை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் அவைகளை மேற்கொள்ள கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். 




For Contact:

Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment