Kanmalai Christian Church
Word of God: Brother Kamal
Date: 26.09.2021
யாத்திராகமம் 2:25
தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
சங்கீதம் 25:7
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
இஸ்ரவேல் எகிப்திலே அடிமைத்தனத்தில் தவித்து கொண்டு இருக்கையிலே அவர்கள் கர்த்தரிடத்தில் முறையிட்டார்கள். அவர்கள் தங்கள் அடிமைத்தனத்தில் இருந்து முறையிடும் சத்தம் தேவனுடைய சந்நிதியில் எட்டியது. கர்த்தர் அவர்கள் பெருமூச்சை கேட்டு தாம் தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை கண்ணோக்கி பார்த்து அவர்களை நினைத்தருளினார். தேவன் நம்மை நினைத்து இருப்பதால் தான் நாம் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறோம். தேவ சித்தத்திற்கு நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும் அவர் நம் வாழ்க்கையில் தேவன் நமக்கு என்ன செய்ய சித்தம் கொண்டு இருக்கிறாரோ அது நிச்சயமாய் நிறைவேறும். அது ஒரு போதும் தடை படாது. அவர் நமக்காய் கொண்டு இருக்கிற திட்டம் பெரியது. அவர் நம்மை நினைத்து இருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார்.
இன்றைக்கும் கூட தேவன் நம்மை எப்படி நினைத்தருளுவார் என்பதனை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களை நாம் இங்கே தியானிக்கலாம்.
1. நம்மை பலப்படுத்தி நினைத்தருளுவார்
நியாயாதிபதிகள் 16:28
அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,
நியாயாதிபதிகள் 16:4,5,16,17,18,19,22,24,25
தெலீலாளிடத்திற்கு பெலிஸ்தர்கள் வந்து, சிம்சோனுக்கு எப்படிப்பட்ட மகா பலம் ஏத்தினாலே உண்டாகி இருக்கிறது. அவனை மேற்கொண்டு சிறுமைப்படுத்த நாம் செய்ய வேண்டுவன என்பதை சிம்சோனை நயம் தெரிந்து கொண்டு வந்து எங்களிடத்தில் தெரிவித்தால் நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். தெலீலாள் மூன்று முறை முயற்சித்தும் சிம்சோனின் பலத்தை தெரிந்துக்கொள்ள முடியவில்லை ஆனாலும் அவள் அவனை தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தை அவளிடத்தில் வெளிப்படுத்தினான். சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். சிமோசான் அவள் மடியிலே நித்திரை செய்து கொண்டு இருக்கையில் அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களை பிடுங்கி சிறையில் அடைத்து மாவரைக்க விட்டார்கள்.
அதுபோல தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை, தேவனோடு இருக்கிற ஐக்கியத்தை கெடுக்கும் படியாக இந்த உலகத்தின் அதிபதியானவன் நம்மை வீழ்த்த எப்பொழுதும் வகை தேடி கொண்டு இருப்பான். நம் இருதயம் தேவனோடு இசைந்து இருக்க வேண்டும். அவனுக்கு நாம் இடம் கொடுப்போம் என்று சொன்னால் பெற்ற நம்மை தேவனை விட்டு விலக செய்து விடுவான். இங்கே சிம்சோனின் முடி மீண்டும் முளைக்க தொடங்கியது என்று வாசிக்கிறோம். பெலிஸ்தர்கள் அதை கவனிக்கவில்லை, சிம்சோன் தேவனிடத்தில் இந்த ஒரு விசை மாத்திரம் என்னை பலப்படுத்த என்னை நினைத்தருளும் என்று வேண்டி கொள்ளும் பொழுது கர்த்தர் சிம்சோனை நினைத்தருளி இழந்த பலத்தை மீண்டும் அளித்து பெலிஸ்தரை அழிக்கும்படியாக செய்தார். அதுபோல நாமும் நம் பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பி தேவனிடத்தில் வேண்டி கொள்ளும் பொழுது இழந்த அபிஷேகத்தை மீண்டும் நமக்கு அளித்து நம்மை நினைத்தருளி பலப்படுத்த தேவன் வல்லவராய் இருக்கிறார். உங்கள சத்துருக்கள் உங்களை மேற்கொள்ள விடவேமாட்டார். அவர் உங்களை நினைத்தருளி பலப்படுத்துவார்.
2. நம்மை குணமாக்க நினைத்தருளுவார்
II இராஜாக்கள் 20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
II இராஜாக்கள் 20:2
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
II இராஜாக்கள் 20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
II இராஜாக்கள் 20:4
ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
II இராஜாக்கள் 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
II இராஜாக்கள் 20:6
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.
ஏசாயா எசேக்கியா ராஜாவினிடத்தில் உங்கள் வீட்டு காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். பின் எசேக்கியா சுவற்புறமாக திரும்பி கர்த்தரை நோக்கி கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதை செய்தேன் என்பதனை நினைத்தருளும் என்று மிகவும் அழுது வேண்டினார். ஏசாயா வீட்டின் பாதி முற்றம் கடந்து போகிறதற்கு முன்னே கர்த்தருடைய வார்த்தை அவருக்கு உண்டாகி நீ திரும்பிப்போய் என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவினிடத்தில் ன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய் என்றும் உன் நாட்களோடே பதினைந்து வருடத்தை கூட்டினேன் என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார். இன்றைக்கும் நீங்கள் எப்படிப்பட்ட வியாதியின் பிடியில் இருந்தாலும் சரி நீங்கள் எசேக்கியாவை போல உருக்கமாக தேவனிடத்தில் வேண்டும் பொழுது அவர் உங்கள் விண்ணப்பத்தை கேட்டு உங்கள் கண்ணீரை கண்டு உங்களை குணமாக்கி ஆயுசு நாட்களை கூட்டி நினைத்தருளுவார்.
3. நமக்கு நன்மை உண்டாகும்படி நினைத்தருளுவார்
நெகேமியா 5:19
என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
நெகேமியா 13:31
குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
யூதர்களில் தரித்திரராய் இருக்கிறவர்கள் நெகேமியாவினிடத்தில் வந்து யூதர்களில் ஐஸ்வரியவான்களாய் இருக்கிறவர்கள் எங்களை ஒடுக்குகிறார்கள் என்று முறையிடுகிறார்கள். ஐஸ்வரியவான்கள் தரித்திரரை ஒடுக்கக்கூடாது நெகேமியா யூதர்கள் மத்தியிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார். அவர்களால் ஒடுக்கப்பட்டு இருக்கிற ஏழைகளை விடுவிக்கிறார். நெகேமியாவுக்கு செலவுகள் அதிகமாய் இருந்தாலும் ஜனங்களை அவரை மிகவும் கஷடப்படுகிறார்கள். அதனால் அதிபதிகள் வாங்குகிற படியை கூட நெகேமியா வாங்க வில்லை. நெகேமியா பல வருடங்களாக கர்த்தருக்கென்று ஊழியம் செய்கிறார். எதையும் எதிர்பார்க்காமல் அலங்கத்தை கட்டுகிற வேளையில் ஈடுபடுகிறார். இவை எல்லாவற்றிற்கும் நெகேமியா கர்த்தரிடத்தில் கேட்கும் ஒரே காரியம் எனக்கு நன்மை உண்டாகும்படி என்னை நினைத்தருளும் என்பதே ஆகும். தமக்காக உண்மையும், உத்தமுமாய் ஊழியம் செய்கிற தம்முடைய பிள்ளைகளின் நன்மைகளை கர்த்தர் நிச்சயமாகவே நினைத்தருளுவார்.
நெகேமியா எருசலேமில் இல்லாத பொழுது யூதர்கள் மத்தியிலே அநேக சீர்கேடுகள் உண்டாயிற்று. அவர் மீண்டும் திரும்பி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துகிறார். ஆசாரியரையும், லேவியரையும் பராமரிப்பதற்கு உடைய பங்குகள் வழங்கப்படவில்லை நெகேமியா மீண்டும் எருசலேமுக்கு வந்த பிறகு அவர்களுடைய பங்கு கிடைக்கும்படியாக செய்கிரார். மேலும் அவர் பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சல் ஆக்கிப்போட்டார்கள். கர்த்தருக்கு பிரியம் இல்லாத மோவாபியர், அமோனியரிடம் சம்பந்தம் கொள்கிறார்கள். இவை எல்லாவற்றையும் நெகேமியா சீர்படுத்துகிறார். நெகேமியாவை போல கர்த்தருக்கென்று உண்மையும் உத்தமுமாய் இருந்து அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளும் பொழுது தேவன் நமக்கு நன்மை உண்டாகும்படியாக நம்மை நினைத்தருளுவார். நாம் தேவனுக்கென்று எதையும் எதிர்பாராமல் செய்த நற்கிரியைகளின் நிமித்தமாக அவர் நமக்கு நன்மை உண்டாகும்படியாக நம்மை நினைத்தருளுவார்.
4. நமக்கு இரக்கம் அளிக்கும்படியாக நினைத்தருளுவார்
ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
ஆபகூக் 3:14
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
ஆபகூக் 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆபகூக் 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
பாபிலோன் சிறையிருப்பில் இருக்கிற யூதர்களை விடுவிக்கும்படியாக தேவனிடத்தில் ஆபகூக் விண்ணப்பம் செய்கிறார். யூதர்கள் சிறைபிடிக்கப்பட போகிறார்கள். சந்துருவின் கை யூதர்களுக்கு விரோதமாக பலத்து இருக்கப்போவதை கர்த்தர் ஆபகூக்கிற்கு வெளிப்படுத்தி காட்டினார் அதை காண்கையில் எனக்கு பயம் உண்டாயிற்று என்று சொல்லுகிறார் வருஷம் முடியும் வரை இல்லாமல் அதற்கு முன்னதாகவே யூதர்கள் விடுதலையாக்க பட வேண்டும் என்று தேவனிடத்தில் விண்ணப்பம் செய்கிறார். எங்களிடத்தில் கோபமாய் இருந்தாலும் எங்களுக்கு இரக்கம் செய்ய நினைத்தருளும் என்று வேண்டுகிறார். எவ்வளவு பேர் எங்களுக்கு விரோதமாக ஒடுக்க வந்தாலும் நான் இளைப்பாறுதல் அடைவேன் என்று சொல்லுகிறார். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். கர்த்தரே என் பெலன் அவர் என்னை உயர்ந்த ஸ்தலத்திலே நிற்கச்செய்வார் என்பதை முழு நிச்சயமாய் நம்புகிறார். நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகள் நமக்கு விரோதமாக எழும்பினாலும் சரி நாம் கர்த்தருக்குள் மகிழிச்சியாய் இருக்கும் பொழுது தேவன் ஏற்ற காலத்தில் நமக்கு இரக்கம் அளிக்கும் படியாக நம்மை நினைத்தருளி நமக்கு எதிராய் இருக்கிற எல்லாவற்றில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
5. நம்மை பரலோக ராஜ்யத்திலே சேர்க்கும்படியாக நினைத்தருளுவார்
லூக்கா 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
லூக்கா 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
லூக்கா 23:41
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
லூக்கா 23:42
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் நீர் கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்து கொள் என்று இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி நாம் இந்த ஆக்கினை நாம் செய்தவற்றிற்காக கிடைத்து இருக்கிறது ஆனால் இவரோ அப்படி ஒன்றும் செய்யவில்லையே என்று அவனை கடிந்து கொண்டு இயேசுவை நோக்கி ஆண்டவரே உம்முடைய ராஜ்யத்திலே என்னை நினைத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு அவன் விண்ணப்பத்தை கேட்டார் இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆம் பிரயமானவர்களே தேவன் நம்மை தெரிந்துகொண்டதன் நோக்கமே பரலோக ராஜ்யத்திலே நாம் பங்கடைய வேண்டும் என்பதற்காகத்தான். எல்லோரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவ சித்தமாய் இருக்கிறது. அவர் நம்மை நினைத்தருளி பரலோக ராஜ்ஜியத்திலே கொண்டு சேர்ப்பார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment