Kanmalai Christian Church
Word of God : Brother Micheal
Date: 02.09.2021
யோவான் 8:32
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:36
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
II கொரிந்தியர் 3:17
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
1. உன்னை வெறுமையாக்காமல் வெகுமதிகளை கொடுத்து விடுதலையாக்குவார்
உபாகமம் 15:9
விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
உபாகமம் 15:10
அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 15:11
தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
உபாகமம் 15:12
உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக.
உபாகமம் 15:13
அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,
உபாகமம் 15:14
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.
உபாகமம் 15:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.
தாராளமாய் கொடுங்கள், உன் சகோதரர், சகோதரிகளுக்கு தாராளமாய் கொடுங்கள். தேசத்திலே எளியவர்கள் இல்லாமல் இருப்பதில்லை, தேசத்திலே சிறுமைப்பட்டவர்களுக்கும், எளியவனாகிய உன் சகோதரருக்கும் தாராளமாய் கொடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இங்கே நாம் வாசிக்கும் பொழுது ஏழாம் வருஷத்தில் விடுதலை பண்ணும்பொழுது வெறுமையாய் அனுப்பி விடாமல் கர்த்தர் உனக்கு ஆசீர்வதித்ததிலே அவனுக்கு தாராளமாய் கொடுத்து அனுப்புவாயாக என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தேவனாகிய கர்த்தர் உங்களை விடுதலை அளித்து அனுப்பும் பொழுது வெறுமையாய் அனுப்பிவிடாமல் உங்களை வெகுமதிகளை அளித்து ஆசீர்வதிப்பார்.
2. புறக்கணித்த உன்னை கனம்பண்ணி விடுதலையாக்குவார்
தானியேல் 3:18
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
தானியேல் 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
தானியேல் 3:20
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
தானியேல் 3:21
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
தானியேல் 3:22
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
தானியேல் 3:23
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
தானியேல் 3:24
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
தானியேல் 3:25
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
தானியேல் 3:26
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
நீங்கள் எங்களை விடுவிக்காமற்போனாலும் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யமாட்டோம், நீர் நிறுத்திய பொற்சிலையை நாங்கள் பணிந்து கொள்ளமாட்டோம் என்று சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் சொன்னார்கள். இதனால் நேபுகாத்நேச்சாருக்குக் கடும் கோபம் மூண்டது, அவர்களுக்கு விரோதமாய் ராஜாவின் முகம் வேறுப்பட்டது, ஏழுமடங்கு எரிகிற அக்கினி சூளையிலே அவர்களை போடும் படிக்கு அவர்களை கட்டும்படியாக தன்னுடைய இராணுவத்தில் இருக்கிற பலசாலிகளை அழைக்கிறான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அவர்களை கட்டி சூளையில் தூக்கி போடப்போன அவர்களை அந்த ஏழுமடங்கு அக்கினி கொன்றுபோட்டது.
கட்டுண்டு போடப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று புருஷர்களோடு தேவபுத்திரனுக்கு ஒப்பாக நான்கு பேர் விடுதலையாகி சூளையில் உலாவி வருகிறதை நேபுகாத்நேச்சார் பார்த்து வியந்து உன்னதமான தேவனுடைய தாசர்களே வெளியே வாருங்கள் என்கிறார். அவர்கள் வெளியே வரும்பொழுது அவர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை அவர்களுடைய முடியாகிலும், சால்வையாகிலும் தீயில் கருக வில்லை ஆம் பிரியமானவர்களே அபிஷேகம் பண்ணப்பட்ட நமக்கு விரோதமாய் சத்துரு கடும் கோபம் கொண்டு, முகம் வேறுபட்டு, நம்மை கட்டுவித்து ஏழுமடங்கு அக்கினிக்கி ஒப்பாக நம்மை சோதனைக்கு உட்படுத்தினாலும் உங்களை விடுவிக்க தேவன் வருவார். கட்டுண்ட நம்மை நிச்சயமாய் விடுவிப்பார், நமக்கு விரோதமாக எழும்பினவர்கள் வீழ்ந்துபோவார்கள். உங்களுக்கு ஒரு சேதமும் ஏற்படுவதில்லை உங்களை புறக்கணித்தவர்களே உங்களை கனம்பண்ணும்படியாக கர்த்தர் செய்வார்.
3. உன்னை இருளின் அதிகாரத்தில் இருந்து விடுதலையாக்குவார்
கொலோசெயர் 1:13
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
கொலோசெயர் 1:14
[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான் 1:5
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
ஏசாயா 9:3
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.
இருளின் அதிகாரம் என்று சொன்னாலே இந்த பிரபஞ்சத்தின் அதிபதியாகிய பிசாசானவனை குறிக்கிறது. அப்படிப்பட்ட இருளின் அதிகாரத்தில் இருந்து ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இருக்கிறார். அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பானது நமக்கு உண்டாகி இருக்கிறது. செபுலோன், நப்தலியை ஈனப்படுத்தின முந்திய இருண்ட காலம் இனி இருப்பதில்லை, இருளிலே நடந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் நம்மை திரளாக்கி மகிழ்ச்சியை பெறுக செய்திடவே இருளின் அதிகாரத்தில் இருந்த இந்த இந்த புவியில் வெளிச்சமாய் உதித்தார். அவர் நமக்காய் கல்வாரி சிலுவையில் ஈந்த இரத்தம் நம்மை பாவமன்னிப்பை அளித்து இருளின் அதிகாரத்தில் இருந்து நம்மை மீட்கிறது.
4. உன் சிறையிருப்பில் வெளிச்சமாய் பிரகாசித்து விடுதலையாக்குவார்
அப்போஸ்தலர் 12:7
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
அப்போஸ்தலர் 12:8
தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
அப்போஸ்தலர் 12:9
அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
அப்போஸ்தலர் 12:10
அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
எப்படிப்பட்ட சிறையில் நீங்கள் இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட சங்கலிகளால் கட்டப்பட்டு இருந்தாலும் சரி, உங்கள் ஆவிக்குரிய ஜீவியம் உறக்கத்தில் இருந்தாலும் சரி தேவன் வெளிச்சமாய் பிரகாசித்து உங்களை எல்லா சங்கலிகளில் இருந்து விடுதலையாகி அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சேர வேண்டிய இடம் வரைக்கும் உங்களோடு இருந்து உங்களுக்கு முன்பதாக செல்கிறார். உங்கள் சங்கலிகளில் இருந்து நீங்கள் விடுதலையாவது ஒரு தரிசனம் காண்பது போல இருக்கும். இன்றைக்கு வெளிச்சமாகிய கிறிஸ்து இயேசு உங்கள் சக்கலிகளை விழச்செய்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறார்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment