Kanmalai Christian Church
Date: 09.09.2021
Word of God : Pastor Jachin Selvaraj
(Apostolic Christian Assembly, Purasaiwalkam)
ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
கர்த்தருடைய ஆலயத்திற்கு நாம் போவோம் என்று சொன்னால் இங்கே வசனத்தில் சொல்லப்பட்டுள்ளபடி மூன்று காரியங்கள் நமக்கு நடக்கிறது. அவற்றை நாம் இங்கே தியானிக்கலாம்.
1. அவர் தம்முடைய வழிகளை நமக்கு போதிப்பார்
சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
முதலாவதாக நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு சென்றால் தேவன் அவருடைய வழிகளை நமக்கு போதிக்கிறார். எப்படிப்பட்ட வழியில் நாம் போக வேண்டும். நமக்கு இந்த பாதை தான் சரியான பாதை என்பதை கர்த்தர் நமக்கு தெளிவாக சொல்லிக்கொடுப்பார். ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் நாம் தேவனுடைய ஆலயத்திற்கு போக வேண்டும். அவ்வாறு நாம் போவோம் என்று சொன்னால் நிச்சயமாகவே அவர் தம்முடைய வழியை நமக்கு போதிக்க வல்லவராய் இருக்கிறார்.
நம்முடைய வழிகளை ஆண்டவர் கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரிடத்தில் ஒப்புவித்து நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்போம் என்று சொன்னால் அவரே நம் காரியங்களை எல்லாம் வாய்க்க பண்ணுவார்.
அப்போஸ்தலர் 12:2
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
அப்போஸ்தலர் 12:3
அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
அப்போஸ்தலர் 12:12
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 12:16
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
அப்போஸ்தலர் 12:17
அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப்போனான்.
ஏரோதுராஜா யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தது யூதருக்கு பிரியமாய் இருக்கிறதை கண்டு பேதுருவையும் பிடித்து கொலை செய்ய வேண்டும் என்று வகை தேடினான். பேதுருவை விடுவிக்கும் படியாக மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிலே அநேகர் கூடி ஜெபம் பண்ணி கொண்டு இருந்தார்கள். எங்கள் ஊழியக்காரரை அவர்கள் கொள்ளப்போவது இல்லை என்று உறுதியாக ஜெபம் செய்து கர்த்தரிடத்தில் ஒப்பு கொடுத்து விட்டார்கள். கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து ஜெபித்து இருக்கிறார்கள். ஆண்டவர் தம்முடைய தூதனை அனுப்பி பேதுருவை விடுவித்து அந்த வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தார். நம் காரியங்களை தேவன் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் பொழுது உடனே தேவன் அதை வாய்க்க செய்திடுவார்.
II இராஜாக்கள் 5:9
அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.
II இராஜாக்கள் 5:10
அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.
II இராஜாக்கள் 5:11
அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப் போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.
II இராஜாக்கள் 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
நாகமான் தன் குஷ்டரோகம் நீங்க வேண்டி எலிசா தீர்க்கதரிசியினிடத்தில் வந்தார். எலிசா அவரிடத்தில் ஆள் அனுப்பி யோர்தானிலே ஏழு முறை ஸ்நானம் செய்தால் நீ சுத்தாமாவாய் என்று சொல்ல சொன்னார். ஆனால் நாகமானோ கடும் கோபம் கொண்டு இவர் கர்த்தரின் நாமத்தில் அந்த இடத்தை தொட்டு குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என நினைத்தால் இவர் இப்படி செய்யச்சொல்கிறாரே தனக்குள் எண்ணிக்கொண்டார். பின் அவர் ஊழியக்காரர் வந்து அந்த தீர்க்கதரிசி பெரிய காரியம் செய்ய சொல்லி இருந்தால் நீர் செய்திருப்பீர் அல்லவா எனவே நீர் இப்பொழுது ஸ்நானம் பண்ணும் அப்பொழுது சுத்தம் ஆவீர் என்று சொன்னான். நாகமான் ஊழியக்காரரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார் அப்பொழுது அவர் சுகம் பெற்றார் அதுபோல தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் காட்டுகிற வழியில் நம்மை முழுவதுமாக அர்பணிப்போம் என்று சொன்னால் நம் காரியங்கள் ஜெயமாய் முடியும்.
2. தேவனுடைய பாதையில் நாம் நடக்க வேண்டும்
யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
தேவனுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். அவன் எப்பொழுதுமே நம்மை அழிவின் பாதையிலே தான் நடத்தி கொண்டு போவான். ஆனால் அவனுக்கு எதிர்த்து நின்று தேவனுடைய பாதையில் நடக்க பிரயாசப்பட வேண்டும். அவ்வாறு நாம் அவனுக்கு எதிர்த்து நிற்கும் பொழுது அவன் நம்மை விட்டு ஓடியே போவான் என்று வேதம் சொல்கிறது. தேவனிடத்தில் நாம் கிட்டி சேர வேண்டும். தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்களை செய்த நம் கைகளை சுத்திகரிக்க வேண்டும்.
சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
3. கர்த்தருடைய வார்த்தையை கைக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்
எபேசியர் 4:14
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
எபேசியர் 4:15
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
நாம் இனி சிறுபிள்ளைகளை போல இராமல் மனுஷருடைய சூதும், வஞ்சனைகளுக்கும், பலவித தந்திரமான போதகத்திற்கும் சிக்கி கொள்ளாதபடிக்கு நாம் இருக்க வேண்டும் என்றால் நமக்கு துணை செய்வது கர்த்தருடைய வார்த்தை மட்டுமே ஆகும். கர்த்தருடைய வார்த்தை கைக்கொண்டு ஆவிக்குரிய ஜீவியத்திலே வளருகிறவர்களாக இருக்க வேண்டும். ஆலயத்தில் ஊழியக்காரர் மூலமாக நமக்கு வசனம் வெளிப்படும் பொழுது அதை நாம் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலே நாம் ஜெயம் பெற வேண்டும் என்று கர்த்தருடைய வசனத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment